- Monday
- May 4th, 2026
"ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இராணுவத்தினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுகின்றனர் என்றும், அவர்கள் கடமைகளைச் சரிவரச் செய்வதில்லை என்றும், யுத்தத்தை வெற்றி கொண்ட சிப்பாய்கள் கீழ் மட்ட வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படும் கருத்துகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை." - இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய...
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் தபால் மூல வாக்காளர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன கருத்தை கூறியிருக்கிறார்கள். தபால் மூலமான வாக்களிப்பு முடிந்த பின்னர் கருத்து தெரிவித்து என்ன பயன். எனவே கூட்டமைப்பின் முடிவுக்கு காத்திருக்கவேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, திங்கட்கிழமை (22) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (22)...
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘மாஸ்’. ‘அஞ்சான்’ தோல்வியைத் தொடர்ந்து சூர்யா நடித்து வரும் படம் என்பதால், இப்படத்திற்காக மிகுந்த சிரத்தை எடுத்து நடித்து வருகிறார் சூர்யா. வெங்கட் பிரபுவுக்கும் ‘பிரியாணி’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆகவே, இவருடைய உழைப்பும் இந்த படத்தில் அதிமாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வருகிற தமிழ்...
ஜெயப்பிரதா மகன் சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் உயிரே உயிரே. இதில் நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். ராஜசேகர் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த சத்யம், படத்தை டைரக்டு செய்தவர். ஜெயப்பிரதாவே இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இதன் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. சமீபத்தில் ரஜினியை ஜெயப்பிரதா நேரில் சந்தித்து ‘உயிரே உயிரே’...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் சத்தியப்பிமான செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் கலந்துகொண்டுள்ளார். இதேவேளை, தற்போது அவர்கள் இருவரும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி கொண்டிருக்கின்றனர். அதில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்...
அபிவிருத்தியில் தமிழ்மக்கள் தொடர்ந்தும் பயணிக்க வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதிப்படவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். காங்கேச்துறை தொகுதிக்கான ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்கூட்டம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள ஈ.பி.டி.பியின் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றபோதே, அதில் கலந்துகொண்டு குகேந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரளிப்பது என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸில் இரு வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனடிப்படையில், முஸ்லிம்...
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் அனைத்து தீவிரவாத அமைப்புக்களும் அழிக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். சீன உயர்மட்ட குழுவுடனான சந்திப்பின்போது ஷெரீப் கூறியதாக பாகிஸ்தான் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரிவித்த பிரதமர் பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் தீவிரவாத அனைத்து அமைப்புகளும் அழிக்கப்படும். அவற்றின் கொள்கை எத்தகையதாக இருந்தாலும்...
காலநிலை மாற்றத்தினால் இன்று (22) நாட்டின் அனைத்து பாகங்களிலும் மழைவீழ்ச்சியினளவு அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது எனவும் வடக்கு மத்திய வடமத்திய கிழக்கு ஊவா மாகாணங்களில் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் நிலவுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மற்றும் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய...
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ தபால் மூல வாக்களிப்பு நாளையும்,நாளை மறுதினமும் நடாத்தப்படவுள்ளன. அஞ்சல்மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாகவும் இரகசியமாகவும் அடையாளமிடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். வாக்காளர்களை அடையாள மிட்டுள்ள சின்னம் பிறர் அறியாதவகையில் பாதுகாக்கப்படும். அஞ்சல் வாக்கு அடையாளமிடும் இடமொன்றில் வாக்களிப்பதற்கான தடை...
பெய்துவரும் கடும்மழை காரணமாக இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் நாளுக்குநாள் உயர்ந்துவந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (22.12.2014) காலை 31அடி 4 அங்குலத்தை எட்டியது. இதையடுத்து அணைக்கட்டுகளின் பாதுகாப்புக்கருதி, குளத்தின் 11 வான்கதவுகளும் காலை 8.30 மணியளவில் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளினால் இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், வடமாகாண விவசாய...
ஜனாதிபதித் தேர்தலில் சகல மக்களும் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். மாவட்டக்கிளை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் மாறியபோதும் எந்த அரசும் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காத...
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் இத்தருணத்தில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரச தரப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவில் வடக்குக்கான தனது முதலாவது பிரசாரத்தை ஆரம்பித்துவைத்த மஹிந்த அன்று மாலை கிளிநொச்சியிலும் பிரசாரத்தை நடத்திவிட்டு கிழக்கு மாகாணம் சென்றிருந்தார்...
‘மொழி’, ‘அபியும் நானும்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராதா மோகன். வித்தியாசமான கதையும் திரைக்கதையும் கொண்டு வெளியான இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது. அதன் பிறகு நாகார்ஜூனாவை வைத்து ‘பயணம்’ படத்தை இயக்கினார். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘கௌரவம்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது....
திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக பாலசந்தர் சென்ற வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயோதிகம் மற்றும் ஜுரம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. பாலசந்தரை சந்தித்த ரஜினியும், அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் இரண்டு தினங்கள் கழிந்து நிலைமை மோசமானது. சிறுநீரகக் கோளாறு காரணமாக...
திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள வீடுகளின் மீது சனிக்கிழமை (20) இரவு கற்களை எறிந்தும் கதவுகளை காலால் உதைத்தும் இளைஞர் குழுவொன்று அட்டகாசம் செய்ததாக அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அயலவர்கள் ஒன்றுகூடிய போது, அட்டகாசம் செய்த இளைஞர்கள் அவ்விடத்தில் இருந்த ஓடிவிட்டனர். 119 இலக்கத்துக்கும் கோப்பாய்...
நாட்டில் தற்போது உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை முடிவு செய்யும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரசார செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்...
எதிர்ப்பரசியலால் எதையும் செய்ய முடியாது. இணக்க அரசியலினூடாகவே எதையும் சாதிக்க முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இயக்குநர் பாராதிராஜாவை, யாழ்ப்பாணம், டில்கோ விடுதியில் சந்தித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்ட விளக்களத்தை வழங்கினார். அங்கு தொடர்ந்தும்...
வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப் பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேருவில பிரதேசத்திலுள்ள 'வெள்ளம் தாங்கி' என்னும் பகுதியிலேயே பாதுகாப்பு அணை நேற்றிரவு அல்லது இன்று அதிகாலைவேளையில் உடைப்பெடுத்துள்ளதாக தெரிய வருகிறது. 1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்பு மூதூர் மற்றும் சேருவில பிரதேசத்தின் சில பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும்...
யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரி( என்.ரி.எஸ்)யில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த நிஷாந்தினி( வயது 24) யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றி வருகின்றார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டவரை யாழ். நகர்ப்பகுதியில்...
Loading posts...
All posts loaded
No more posts
