படையினரின் அச்சுறுத்தலால் கிளிநொச்சியில் ஒரு குடும்பம் பீதியில்!

கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீதும் சிறுவர்களின் மாமன் மீதும் படைச்சிப்பாய் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குறித்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுவர்களின் தயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் மாலை 3.30 மணியளவில்...

தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருமலையில் தாக்குதல்

கடமைக்காகச் சென்ற தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணை செய்யச் சென்ற நபர் மீதே நேற்று முன்தினம் (04) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தரும்...
Ad Widget

தெளிவாக இருப்போம்: இந்த சிறிசேன அல்ல அந்த சிறிசேன!

எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி,...

வடக்கு மக்களை குழப்ப சதி: நம்ப வேண்டாம் என்கிறார் சிவிகே

வட மாகாண மக்களை குழப்பும் வகையில் அரச தரப்பினால் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் வட மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக அரச தரப்பினால் மக்களை குழப்பும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் மாதிரி வாக்குசீட்டுகள் என்பன விநியோகிக்கப்பட்டு...

ஐ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது: அதிகாரப்பூர்வ தகவல்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ஐ. இன்று அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது ஐ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தான். அப்படிப்பட்ட சினிமா பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வருகின்ற 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

விஜய்யுடன் இணைந்த சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் விஜய் போலவே மேனரிசங்களால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். ஆனால், இவர் நடிகர் மட்டுமின்றி இவருக்கு இருக்கும் திறமைகளை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு குழந்தையின் எலும்பு தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு விஜய் தன் மக்கள் இயக்கம் சார்பில் பண உதவி செய்தார். தற்போது சிவகார்த்திகேயனும்...

பொது எதிரணி தேர்தல் பிரசார மேடை மீது துப்பாக்கிச் சூடு: மூவர் காயம்!

இரத்தினபுரி, நிவித்திகலவில் எதிர்கட்சியினரின் தேர்தல் பிரசாரமேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மூவரும் இரத்தினபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும்,பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரி- ரணில் ஒப்பந்தம் போலியானது | இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடி

மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்ளார். தனி ஈழம் வழங்குவது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக பொது வேட்பாளர் மைத்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியது. ஐக்கிய தேசியக் கட்சியின்...

மகிந்தவுக்கு எதிராக யாழ்.பல்கலையில் சுவரொட்டிகள்

எமது தேசத்தைச் சுடுகாடாக்கியவர்களுக்கு பதிலடி கொடுப்போம்”, “அன்னப் பறவைக்கு வாக்களிப்போம்” என்று குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் இன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோன்று மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டாம் என குறிப்பிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, போன்ற இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

வீதியால் சென்றவருக்கு கடி : காப்பாற்றச் சென்றவருக்கு அடி

யாழ்.மட்டுவில் பகுதியில் வீதியில் நின்றிருந்த ஒருவர், அவ்வீதியால் சென்றவரை மறித்து தொண்டையில் கடித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகலின் போது இடம்பெற்றுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மட்டுவில் வடக்கைச் சேர்ந்த கார்த்திகேசு மகாதேவன் (வயது 55) என்பவரே தொண்டையில் கடி வாங்கியுள்ளார். வீதியால் சென்ற இவரை மறித்த ஒருவர், இவரது தொண்டையில் கடித்துள்ளார். கடியுண்டவரை காப்பாற்றச்...

த.தே.கூ உறுப்பினர்கள், ஆளுங்கட்சிக்கு தாவினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள் இருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கட்சி தாவியுள்ளனர். உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகியோரே இவ்வாறு கட்சி தாவியுள்ளனர்.

எந்தவொரு தரப்புடனும் இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை – மைத்திரி

'நாங்கள் எவருடேனும் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை. கடந்த காலங்களில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய மோசடிகளைச் செய்தது. அவை அனைத்தையும் நாம் பொறுத்துக்கொண்டோம். எமது வெற்றி உறுதி. நாம் எமது விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே பலர் எம்முடன் இணைந்துகொண்டனர். நாம் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்போம்' என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்....

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு

மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதத்தில் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான குறித்த நபரே இன்று காலை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இவர் எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எங்களை பிணங்களாக்குவதற்கு முயற்சி !! – மைத்திரிபால

எதிர்வரும் நாட்களின் தனக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் கடுமையான மரண அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படவுள்ளது என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பக்கமூன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வேட்பாளர், 'எங்களை பிணங்களாக்குவதன் மூலம்,...

நாம் அரசியல் போராளிகள் – டக்ளஸ்

நாம் அரசியல்வாதிகள் என்பதற்கு அப்பால் அரசியல் போராளிகளாக இருந்து கொண்டு மக்களுக்கு கௌரவமான ஒளிமயமான வாழ்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்ற வகையில் திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்தி வருகின்றோம். உரிமைக்கு குரலும் உறவுக்குக் கரமும் கொடுக்கும் எமது இணக்க அரசியல் ஊடாக, மக்களின் தேவைகள் இனம்காணப்பட்டு அவற்றுக்கு உரிய முறையில் தீர்வுகாணும் அதேவேளை, நீடித்த நிலையான அரசியல்...

இராணுவத்தினரின் தாக்குதலில் 6 வயதுச் சிறுமி படுகாயம்!

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நேற்று இரவு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆறு வயது சிறுகுழந்தை உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலை நடத்திய சிப்பாய் மனநிலை பாதிக்கப்பட்டவரென கூறி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. அந்தப் பகுதியினில் தையலகம் நடத்தி வந்திருந்த பொதுமகன் ஒருவரை சிப்பாயொருவர் சீருடையுடன் வந்து தாக்கியுள்ளார். அதில் சிவராசா(வயது...

வேலணையில் பிரசாரம் மேற்கொண்ட கூட்டமைப்பின் வாகனம் மீது கல்வீச்சு!

வேலணைப் பகுதியில் பொதுவேட்பாளர் மைத்திரியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைக் கடுமையாக எச்சரித்த கும்பல் ஒன்று, அவர்கள் பயணித்த வாகனத்தையும் கற்களால் தாக்கி சேதப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரெத்தினம் தலைமையிலான கூட்டமைப்பு...

நாம் யாரையும் மிரட்டவில்லை, ஊடகங்களே பொய்யுரைக்கின்றன! – மாவை

நாம் வரலாற்றில் யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால் ஊடகங்களே தவறாக பிரசுரித்துள்ளன என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் பொருட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றக்கிழமை...

தந்தையின் கரங்களை பலப்படுத்துங்கள்: நாமல் எம்.பி.

வடக்கில் அபிவிருத்தி முன்னேறிச்செல்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த வேண்டும். அதற்கு அனைவரும் வெற்றிலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (04) விஜயம் மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷ பல்வேறு இடங்களில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் கலந்துகொண்டார். யாழ்....

ஜனாதிபதி தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறவுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு பரப்புரை நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். இன்று நள்ளிரவுக்கு பின்னர் முன்னெடுக்கப்படுகின்ற சட்டவிரோத தேர்தல் பரப்புரைகளை தடுப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...
Loading posts...

All posts loaded

No more posts