Ad Widget

வீதியால் சென்றவருக்கு கடி : காப்பாற்றச் சென்றவருக்கு அடி

யாழ்.மட்டுவில் பகுதியில் வீதியில் நின்றிருந்த ஒருவர், அவ்வீதியால் சென்றவரை மறித்து தொண்டையில் கடித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகலின் போது இடம்பெற்றுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டுவில் வடக்கைச் சேர்ந்த கார்த்திகேசு மகாதேவன் (வயது 55) என்பவரே தொண்டையில் கடி வாங்கியுள்ளார்.

வீதியால் சென்ற இவரை மறித்த ஒருவர், இவரது தொண்டையில் கடித்துள்ளார். கடியுண்டவரை காப்பாற்றச் சென்றவரையும் கொட்டனால் தாக்கியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts