- Tuesday
- May 5th, 2026
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால வெற்றி பெற்றதும், எந்த சந்தடியுமின்றி எப்படி அவர் ஜனாதிபதியானார் என்பது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. அதிகாலையிலேயே, முழுமையான தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட முன்னரே முன்னாள் ஜனாதிபதி அலரி மாளிகையிலிருந்து மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறியிருந்தார். இது அவரது பெருந்தன்மையை காண்பிப்பதாக பலரும் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, இவற்றின் பின்னணியில் பெரும்...
மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அர்ச்சுண மகேந்திரன் அல்லது இந்திரஜித் குமாரசுவாமி இருவரில் ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.அருச்சுணா மகேந்திரன், ரணில் விக்கிரமசிங்கவின் முன்னைய ஆட்சிக்காலத்தில் முதலீட்டு அதிகார சபையின் தலைவராக கடைமையாற்றி இருந்தவர் என்பது...
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இலங்கையின் உயர் பாதுகாப்புக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்யவுள்ளார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஷல் கே.ஏ.குணதிலக எதிர்வரும் 19 ஆம் திகதி - இன்னும் 9 நாள்களில் - ஓய்வுபெறவிருக்கின்றார். அதுவரை அவரை அப்பதவியில் தொடர அனுமதித்து, அதன்பின்னர் தமது நம்பிக்கையான...
நாட்டின் ஏழாவது ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். அந்த பதவிப்பிரமாண வைபவத்துக்காக 6,000ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். புதிய ஜனாதிபதியை வரவேற்பதற்காக பூக்கொத்து வாங்குவதற்கு சிறுதொகையும் சுதந்திர சதுக்கத்துக்கான மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதாக...
புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம்பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றத் தயார் என நேற்று வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரு முக்கிய அரசியல் பிரமுகர்களும், விடுதலைபுலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரும் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முயல்கின்றனர் என்று வெளியான தகவல்களைத் தொடர்ந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். புலனாய்வு துறையினரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட மூன்று நபர்களும் பயன்படுத்தவுள்ள வாகனங்களின் விவரங்களும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் 41 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு இன்று மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண...
மகிந்த ராஜபக்சவின் தோல்வியை தாங்க முடியாமல் மாரடைபினால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று களனியில் இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனமொன்றில் பணிப்பாளராக கடமையாற்றி வந்த இரு பிள்ளைகளின் தந்தையான நிமல்சிரி அபேவிக்ரம என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பொது வேட்பாளர் மகிந்த ராஜபக்ச...
பெரும்பான்மையினரும் சிறுபான்பான்மையினரும் இணைந்து நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளோம். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு சிறந்த அத்திவாரம் மைத்திரிபால சிறிசேன என, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில் வடக்கு முதலமைச்சர் விடுத்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலிருந்தும் மலையகத் தோட்டப் பிரதேசங்களிலிருந்தும் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மற்றபடி, தான் தோல்வி அடைந்ததாகக் கருதவில்லை என்றும் மகிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் மக்களை சந்தித்தபோது கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஷ, அலரி மாளிகையிலிருந்து வெளியேறி...
குருநாதர் கே பாலச்சந்தர் மரணம் குறித்து விகடனில் ரஜினிகாந்த் எழுதிய கட்டுரை இது. குருவின் மரணம் அவரை எந்த அளவுக்கு பாதித்துவிட்டது என்பதற்கு அவரது இந்த எழுத்துக்களே சான்று. அந்தக் கட்டுரை என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியை எடுக்க மறுமுனையில் இருந்து 'சார்... நான் கே.பி சாரோட அசிஸ்டென்ட் பேசறேன். நீங்க உடனே காவேரி...
இலங்கையில் ராஜபக்சே அரசு போய், அவருடைய முன்னாள் நண்பர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது. இந்த தேர்தல் முடிவு, இந்தியாவுக்கு எந்த அளவுக்கு முக்கியமானது, எந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும்? உண்மையில் இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்கு மிக மிக முக்கியமானது. ராஜபக்சேவின் வீழ்ச்சியை தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் கொண்டாடி வருகின்றன....
கிழக்கு பாரீஸில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து பலரை சிறை பிடித்த நபரையும் போலீஸ் படையினர் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இரு முற்றுகைப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில்...
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் புலி என்று தலைப்பு வைத்தனர். ஏற்கனவே விஜய் படத்திற்கு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும். அந்த வகையில் இந்த முறை பிரச்சனை டைட்டிலேயே ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் புலி என்ற இந்த ஒரு சொல்லே போதும், இந்நிலையில்...
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நீண்ட நாட்களாக நடித்துவரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் முழுப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதம் உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் பொங்கலுக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று இயக்குனர் பாண்டிராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் சிம்புவிற்கும் அவரது தம்பி குறளரசனுக்கும்...
"தேர்தல் காலங்களில் தமிழர்களின் ஆதரவைக் கோரிப் பெறுவது. தேர்தல் முடிந்ததும் தமிழர்களை உதாசீனம் செய்து உதறித் தள்ளுவது. - இதுதான் தென்னிலங்கை அரசுகளின் காலாகால பரவணிப் பழக்கம். அதை இன்று ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே செயலில் காட்டத் தொடங்கி விட்டீர்களே!" - என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சீறி வீழ்ந்தார் ஜனநாயக மக்கள்...
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவை நான் வாழ்த்துகிறேன். நான் அந்த நாட்டிற்கு விஜயம் செய்த வேளை அந்த நாட்டில் பெரும் சக்தி...
இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முக்கியத்துவத்துக்கு அப்பால் உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கான ஆதரவு - நம்பிக்கையாகவும் உள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களை பதவி விலகுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் மற்றும் இணைச்செயலாளர் ஆகியோரால் ஒப்பமிடப்பட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் யாவரும் எதிர்காலத்தில் தூய்மையான, அரசியல் கலப்பற்ற, வினைத்திறன் மிக்க பல்கலைக்கழக நிர்வாகம் அமைவதற்கு உடனடியாக...
தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டின் ஒரு முக்கிய அங்கம் என்பதை இந்த தேர்தல் முடிவு எடுத்துக்காட்டியுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தலில் தேசிய ரீதியில் நாங்கள் எமது...
Loading posts...
All posts loaded
No more posts
