Ad Widget

இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களை கடலில் தடுத்து வைத்தது சரியே!

அவுஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி படகில் கடல்வழியாகச்சென்ற 157 ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தடுத்துவைத்த அவுஸ்திரேலிய அரசின் செயல் சட்டப்படி சரியான செயலே என்று அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த்திருக்கிறது. சென்ற ஆண்டு இந்த அகதித்தஞ்சக் கோரிகளை சுமார் ஒருமாதகாலம் நடுக்கடலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் படகில் தடுத்து வைத்திருந்த செயல் பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது. சிறு குழந்தைகள் உட்பட...

பொருளாதார அமைச்சின் 16,700 பேருக்கு வேறு சேவைத் துறைகள் அல்லது இடமாற்றம்!

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றும் 16 ஆயிரத்து 700 பேரை வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க அல்லது இடமாற்றம் வழங்க நடவடக்கை எடுக்கப்படுகின்றது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் டாக்டர் ஹர்ச டி சில்வா தெரவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: பட்டதாரிகளான இவர்கள் மாதாந்தம் 28 ஆயிரம்...
Ad Widget

இலங்கை அரசின் நம்பிக்கையான நடவடிககைகளுக்குப் பின்னரே அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும்!

இலங்கை அரசு உறுதியான, நம்பத்தகுந்த நடவடிக்கைகளை எடுத்த பின்னரே இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்பும் நடைமுறை குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்றுப் புதன்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளை தாயகம் அனுப்பி வைப்பதற்கான...

ஐ.நா. அறிக்கையை காலந்தாழ்த்தி வெளியிட அனுமதிக்க கூடாது – சுரேஸ்

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை காலந்தாழ்த்தி வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் இது தமிழ் மக்களின் பிரச்சினைகளை இல்லாமல் செய்யும் முயற்சியாகும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து...

பட்ஜெட்டில் 3 மடங்குகளினால் விலைகள் குறையும்

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது போல எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். அந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை விடவும் மூன்று மடங்குகளால் விலைகள் குறையும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாகவே அத்தியாவசிய...

வடக்கு , கிழக்கில் மீள்குடியேற்றத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் – த.தே.கூ

வலி.வடக்கு மற்றும் சம்பூர் பகுதிகளில் இராணுவம் குடியிருக்காத இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய அல்லது அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய மக்களுக்கு சொந்தமான காணிகளை அடுத்த ஒருவார காலத்திற்குள் அரசு முதல் கட்டமாக மக்களிடம் கையளிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம் தொடர்பில்...

சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலைய மக்களுக்கு இராணுவம் எச்சரிக்கை!

வலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வலி.வடக்கு மக்களை இன்றைய தினம் பிரிட்டன் வெளியுறதுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நேற்று காலை வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சிவில்...

அஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும்!

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கு புதிய மிரட்டல் வந்துள்ளது. அந்தப் படம் வெளியாகும் பிப்ரவரி 5-ம் தேதி, சென்னையில் 8 அரங்குகளில் குண்டு வெடிக்கும் என மிரட்டியுள்ளனர் சிலர். இதுகுறித்து சென்னையில் உள்ள உதயம் தியேட்டர் மேலாளருக்கு கடிதம் ஒன்றும் வந்துள்ளது. அஜீத், திருவான்மியூர் என்ற பெயரிலிருந்து வந்த கடிதத்தை தியேட்டரின் மேலாளர் ஹரிஹரன் வாங்கிப்...

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஸ்ருதிஹாஸன்

ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் சினிமாவில் அறிமுகமாகி, இன்று இந்தியாவின் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி ஹாஸனுக்கு நேற்று (28-1-2014) பிறந்த நாள். இந்த நாளை அவர் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்னையில் கொண்டாடினார். பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முகம் கொண்ட கலைஞர் ஸ்ருதிஹாஸன். மிக இளம் வயதிலேயே, தன் தந்தையின் உன்னைப்...

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்பட்ட பின்னடைவு!

இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு தமிழர் என்றால் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசைக்கான அனைத்து விருதுகளையும் வாங்கி விட்டார். ஆனால், சில நாட்களாகவே இவர் படத்தின் பாடல்கள் பெரிய அளவிற்கு ஒன்றும் ஹிட் ஆகவில்லை. அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடித்த லிங்கா படத்தின் பாடல்கள் மிகவும் ரசிகர்களை சோதித்தது. இந்நிலையில் இவரின் ஆஸ்தான...

”உண்மை என்றேனும் ஒரு நாள் வெல்லும்” – மஹிந்த

தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் பழிவாங்கள் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். தனது தங்­காலை - கால்ட்டன் இல்­லத்தில் இருந்­த­வாறு தன் மீதான குற்றச் சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் முகமாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே அவர் இதனை தெரி­வித்­துள்ளார். ஒரு போதும் இல்­லா­த­வாறு தனக்கும் தனது...

தூய நீருக்கான செயலணி உருவாக்கம்

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட கழிவு எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூயநீர் வழங்குவதற்கான செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. யாழ். பொது நூலகத்தில் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று புதன்கிழமை (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த செயலணி உருவாக்கப்பட்டது. இந்த செயலணியின் இணைத் தலைவர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சுகாதார...

பேரவை உறுப்பினர்களே உடனடியாக வெளியேறுங்கள்!

யாழ்.பல்கலைக் கழகத்திற்கு வெளிவாரியாக தெரிவு செய்யப்பட்ட பேரவை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

இன்று மட்டும் நீதியரசர் சிராணி ; நாளை கே. ஸ்ரீபவன்?

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து நீதியரசாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ள நிலையில் சிராணி பண்டாரநாயக்க உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இவர்...

முதன்முறையாக குழந்தையை ரசிக்கும் பார்வையற்ற தாய்: நெகிழ்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)

கனடாவில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது முதல் குழந்தையை சிறப்பு கண்ணாடி மூலம் முதன்முறையாக பார்த்து வியந்தது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் கேத்தி பீட்ஸ் (29). இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா...

வடமாகாண செயலாளராக அந்தோணிப்பிள்ளை பத்திநாதன்

வடமாகாண செயலாளராக அந்தோணிப்பிள்ளை பத்திநாதன் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நேற்று (27) நியமிக்கப்பட்டார். மொனராகலை மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலாளராக பத்திநாதன் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற வளாகத்துக்கு சிராணி வருகை!

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க உயர்நீதிமன்ற வளாகத்துக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார். அவரை, சட்டத்தரணிகள் பூச்செண்டுகொடுத்து வரவேற்றனர்.     தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் இடம்பெற்ற நிலையில் சிராணி பண்டாரநாயக்க சற்று முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்துளளார். இதேவேளை...

உரும்பிராய் வரை ஊடுருவியது கழிவு எண்ணெய்

உரும்பிராய் சந்திப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் கழிவு எண்ணெய் நீரில் மிதப் பது வீட்டு உரிமையாளரால் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. உரும்பிராய் சந்திக்கு அண்மையில் மேற்குப் பக்கமாக 100 மீற்றர் தொலைவி லுள்ள வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்தே நீரில் கழிவு எண்ணெய் மிதப்பது அவதானிக்கப் பட்டுள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த பாலவண்ணன் என்பவரது வீட்டுக்கிணற்றிலிருந்தே இவ்வாறு கழிவு...

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீள அழைப்பது தொடர்பில் பேச்சு!

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள், நாடு திரும்புவது குறித்த பேச்சு இருநாட்டு பிரிதிநிதிகளுக்குமிடையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா வந்த சமயம் இது குறித்து பேசப்பட்டதென்றும் அவர் தெரிவித்தார். அகதிகளுக்கான ஐ.நா. மன்றம், ஐரோப்பிய...

தேர்தல் பிரசாரம் : இ.போ.சபைக்கு ரூ.1,425 இலட்சம் கொடுக்க வேண்டும்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்கஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு, இன்னும் 1,425 இலட்சம் ரூபாய் வழங்கவேண்டியுள்ளது என உள்ளக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை...
Loading posts...

All posts loaded

No more posts