அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி தேர்தல்விதி முறைகளை மீறினர் என்ற குற்றம் சாட்டு வழக்கு ஒத்திவைப்பு

அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாவச்சேரி நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைவாக நேற்று (06-08-2015) சாவச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார். 31-07-215 அன்று சாவகச்சேரி பகுதிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 25 பேர் கொண்ட குழு சென்ற வேளை அவர்களில் சிலரை பொலிஸார்...

சிலாபம் ரயிலுக்குள் இடம்பெற்ற வெடிப்பின் மர்மம் என்ன? ISIS தீவிரவாதிகள் காரணமா??

சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலுவலக ரயிலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சஞ்சீவ ரணசிங்க என்பவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ரயில் திணைக்கள ஊழியர் என்றும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று...
Ad Widget

தபால்மூல வாக்களிப்பு: யாழில் 90 வீதமான வாக்குகள் பதிவு

யாழ்.மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் 90 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ தகல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் திணைக்கள கண்காணிப்பாளர்கள் மற்றும் ஏனைய கண்காணிப்பு அமைப்பாளர்களின் காண்காணிப்புடன் எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் அமைதியான முறையில் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளது என்றும் அலுவலகத் தகவல்கள்...

இந்திய மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் வடமராட்சி கிழக்கு பகுதியில் அடாவடி!!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களின் கரைவலை மற்றும் இதர வலைகளை இந்திய மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் அறுத்தெறிவதாகவும், கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 8 மீனவர்களுடைய சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளதாக கட்டைக்காடு மீனவர் சங்கத் தலைவர் அருளப்பு யோசப் எட்வேர்ட் தெரிவித்தார். கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள்...

அழிவடையும் நிலையில் கீரிமலைக் கேணி!

இந்து மக்களின் வரலாற்றுப் மகிமை வாய்ந்த கீரிமலைக் கேணி அழிவடையும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை உடனடியாக திருத்தி அதனுடைய வரலாற்றையும் மற்றும் இந்து கலாசார மரபுகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் தேவையும் தற்போது எழுந்துள்ளது. சுனாமி அனர்த்தத்தினால் கீரிமலைக் கேணியும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த வேளையில் கேணியின் சுவர்கள் உடைந்து சேதமடைந்ததுடன் கேணியின்...

கூட்டமைப்பின் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை வாளால் துரத்திய வயோதிபர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு திடீரெனப் புகுந்து கலகம் விளைவிக்க நினைத்த வேறு கட்சியின் உறுப்பினர்களை மக்கள் விரட்டியடித்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்றைய தினம் வேட்பாளர் சித்தார்த்தனுக்கு ஆதரவாக புங்குடுதீவில் பிரச்சாரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கே வந்த...

உசன் கிராம மாணவர்களுக்கு இலவச Internet WiFi சேவை!

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் உசன் கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் பொது நூலகத்தை நவீன முறையில் தரமுயர்த்தும் நோக்கில் இன்றைய தினம் உசன் கிராம மக்களுக்கு இலவச Internet WiFi சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலகுவாக புத்தகங்களை வாசிக்கக் கூடியதாக “I book” சலுகை வழங்கும் முகமாகவும் சிறுவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கக்...

யாழ் ஒஸ்மானியா அதிபர் போராட்டத்தில் முறுகல்நிலை-மாணவர் பாதிப்பு

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரில் நீண்ட காலமாக நிலவி வரும் நிரந்திர அதிபர் விடயத்தை வலியுறுத்தி யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 7 .30 மணியளவில் நடைபெற்றது. இதன் போது போராட்டத்தில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி தங்களிற்கான நிரந்திர அதிபர் விடயத்தை வலியுறுத்தினர். ஆனால்...

பயணப் பொதியில் சடலம் – சந்தேகநபர் அளித்த வாக்குமூலம்

மன்னார் – மாந்தை மேற்கு – இலுப்பக்கடவை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட – கோவில்குளம் கிரமப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சந்தேகநபர் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரின் வாக்குமூலத்தின் பிரகாரம், அப்பெண்ணின் கணவன் வெளிநாட்டுக்குச் சென்றதும் , மேற்படி இருவரும் கள்ளத்தொடர்பை பேணி வந்துள்ளதுடன் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர்...

பொரு­ளியல் வினாப் பத்திரம் எப்­படி வெளி­யா­னது

க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்­சையின் முதல்நாள் 04 ஆம் திகதி காலை நடை­பெற்ற பொரு­ளியல் 1 வினாப்­பத்­திரம் பரீட்­சார்த்­தி­களின் கைக­ளுக்கு சென்­றது எப்­படி? உண்­மையில் பரீட்­சைத்­தி­ணைக்­கள அறி­வித்­த­லின்­படி இப்­பத்­தி­ரத்­தி­லேயே பரீட்­சார்த்­திகள் விடை­ய­ளித்­தி­ருக்­க­வேண்டும். இது தொடர்­பாக அப்­பத்­தி­ரத்­திலே ஆரம்­பத்தில் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் குறிப்­பிட்ட நிலை­யத்தில் பத்­தி­ரத்­திற்­குப்­ப­தி­லாக கட்­ட­மி­டப்­பட்ட வேறு பத்­திரம் வழங்­கப்­பட்டு அதில் பரீட்­சார்த்­திகள் விடை­ய­ளிக்­கு­மாறு கோரப்­பட்­டதாம். அத­னையே...

கெலம் மக்ரேயின் மற்றுமொரு அறிக்கை ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாம்!

பிரிட்டனின் சனல் 4 ஊடகத்தின் கெலம் மக்ரே மற்றுமொரு போலி அறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பித்துள்ளதாக, சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 30 ஆண்டுகளாக நீடித்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரச படையினர் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்துள்ளதாக போலியான அறிக்கை ஒன்றை மக்ரே சமர்ப்பித்துள்ளார். கடந்த 5ம் திகதி இந்த...

தமிழீழக் கோரிக்கையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை! – விஜயகலா

தான் ஒருபோதும் தமிழ்ஈழக் கோரிக்கையை ஆதரிக்கவில்லையென்றும், எதிர்காலத்திலும் அதனை ஆதரிக்கப் போவதில்லையென்றும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் ஈழம் வரைபடத்தைக் கொண்டதான எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த 65-9815 என்ற இலக்கத்தகடு உடைய வாகனத்தை பயன்படுத்தியதாக தனக்கு எதிராக தேர்தல்கள் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும்...

மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படுகிறார் மன்னார் ஆயர்!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மன்னார் குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மனித மாண்பினைக்காக்கும் அமைப்பின் 9ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த 3 மாதகாலமாக...

போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்காது இலங்கை அரசு! – வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து ராஜித மீண்டும் கருத்து

இறுதிக்கட்டப்போரின்போது வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், போர்க்களத்தில் பாலியல் ரீதியான சித்திரவதைகள் ஆகியன போர்விதிமுறைகளை மீறும் செயல்களாகும். எனவே, போர் முன்னெடுப்பு என்ற போர்வையில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சார்பாக அரசு ஒருபோதும் நிற்காது - இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறைக்குள் வடக்கு மாகாணசபை அவசியம்! – ஐ.நா. மீண்டும் வலியுறுத்து

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான பொறிமுறை உருவாக்கும் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாணசபையும் உள்ளடக்கப்படுவது கட்டாயம்' என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புவதாக ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மீண்டும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு கேட்டுக்கொண்டதற்கு அமைய, எல்லாப் பங்காளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, பரந்தளவிலான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்க ஐ.நா. முன்வந்தது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த...

பதினான்காம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி

பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதால் சகல கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரசாரப் பலகைகள் யாவும் 15ஆம் திகதி காலை 8 மணிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவித்தலொன்றை...

யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அறுவருக்கு பிணை

மிருசுவில் பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அறுவருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மிருசுவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு 09.00 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை தம்வசம் வைத்திருந்த 6 பேரை கொடிகாமம் பொலிஸார் கைதுசெய்திருந்தனர். அவர்களிடமிருந்து 285 சுவரேட்டிகள், ஒட்டுப் பசை மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். இதனையடுத்து...

யார் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் – ததேகூ

புதிதாக எந்த அரசாங்கம் உருவாகினாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எந்த அரசாங்கம் மத்தியில் ஆட்சி அமைத்தாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளக விசாரணைக்கா,...

தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடன் ஜ.போ.க இணையும்

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

மல்லாவி ம.க.யில் ஜீ.சீ.ஈ.உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் சிங்கள மாணவிகள்! முல்லை மாணவர்கள் அதிருப்தி!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நடைபெற்றுவருகின்ற உயர்தரம் விஞ்ஞானப் பரீட்சையில் சிங்கள மாணவிகள் இருவர் தோற்றிவருகின்றமை மாவட்ட மாணவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்ற பரீட்சையில் அவர்கள் இருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றிவருகின்றனர். மாங்குளம் மகாவித்தியாலய அதிபர் மற்றும்...
Loading posts...

All posts loaded

No more posts