Ad Widget

எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் 100,000 வேலை வாய்ப்புக்கள்!

எதிர்வரும் 05 வருடங்களுக்குள் 100,000 வேலை வாய்ப்புக்களை நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வழங்க நாங்கள் தயாராகவுள்ளோம் என நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் தேசிய இளைஞர் முன்னணியின் பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர் - இதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் மட்டுமன்றி...

வடக்கு கிழக்கு இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் எந்த முடிவும் இல்லை!

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இராணுவமே தீர்மானிக்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 2009...
Ad Widget

வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் செலவிட்டுள்ள பணத்தில் ஒரு டொலரேனும் வீண் போகாது. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர். அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் என்று அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய...

வடமாகாண சபை உறுப்பினர்களின் கதவடைப்பு போராட்டம் முடிவு! சபை ஒத்திவைப்பு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்படாமைக்கு கண்டனம் தெரிவித்து வடமாகாண சபையில் உறுப்பினர்கள் சபா மண்டபத்தை மூடி மாகாணசபை உறுப்பினர்கள் மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மாகாணசபை அமர்வுகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் 31 வது அமர்வு இன்றைய தினம் நடைபெறவிருந்த நிலையில் மாகாணசபை உறுப்பினரை அவமரியாதை செய்த அரசாங்க...

SPBக்கு ஹரிவராசனம் விருது

ஐயப்பன் குறித்து யேசுதாஸ் பல பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். அதில் ஒரு பாடல், ஹரிவராசன் என ஆரம்பிக்கும். ஹரிவராசனம் பெயரில் விருதும் வழங்கப்படுகிறது. இந்திய திரையுலகில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடி, இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் சாதனையாளராக திகழும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, சபரிமலை ஐயப்பனின் பெருமையையும், புகழையும் விளக்கும் பல பாடல்களை பாடி மதச்சார்பின்மை மற்றும் சர்வதேச...

செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட கமல்…

கமல் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘பாபநாசம்’. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்தான் ‘பாபநாசம்’. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், நிவேதா தாமஸ், எஸ்தர், கலாபவன் மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மலையாள படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் கமல்,...

பனைவளத்தை அபிவிருத்தி செய்ய பனை அபிவிருத்தி வாரம் பிரகடனம்!

பனைவள அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கோடு வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாக ஜுலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ்மக்களின் இயற்கைச் சூழலிலும், பண்பாட்டுச் சூழலிலும், பொருளாதார மேம்பாட்டிலும் பிரதான இடத்தைப் பெற்றிருந்த பனை வளம் தற்போது அதிகம்...

தகவல் தருமாறு பொலிஸார் கோரிக்கை

எதிர்வரும் 26ஆம் திகதி, சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமாகும். அத்தினத்தை முன்னிட்டு சட்டவிரோமாக மதுபானம் விற்போரையும் போதைப்பொருட்களை விற்போரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பொலிஸ் தலைமையகத்தின் குற்றப்பிரிவு இரவு-பகலாக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளது. சட்டவிரோமாக மதுபானம் விற்போர் மற்றும் போதைப்பொருட்களை விற்போர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ்...

வடமாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதனிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றப்படாததைக் கண்டித்து, இன்று மாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபத்தின் பிரதான வாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இது விடயம் தொடர்பாக பல தடவைகள் முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையில் சுட்டிக்காட்டியபோதும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்தே...

பாடசாலை மைதானத்தை புனரமைத்து கொடுத்த இராணுவத்தினருக்கு மக்கள் பாராட்டு

அச்சுவேலி திரேசா மகளீர் கல்லுாரியில் பலாலி 52ம் டிவிசன் இராணுவத்தில் செய்த வேலைகள் அச்சுவேலிப் பகுதி மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அப் பாடசாலையின் மைதானம் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாது காணப்பட்டதால் அப் பாடசாலையின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து பாடசாலை அதிபர் பல அரசியல்கட்சிகள், அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டும் எந்தவிதமான பிரயோசனமும்...

பாடசாலை நேரத்தில் சீருடையுடன் தேவையற்றவிதத்தில் நடமாடும் மாணவர்கள் உடனடியாக கைதாவர்

தேவையற்றவிதத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவர்கள் வெளியில் திரிந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு 14 நாள்களோ அதற்கு அதிகமாகவோ விளக்கமறியலில் வைக்கப்படுவர் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொலிஸாருக்கும் இடையில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதன்போதே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்....

நூடில்ஸ்களுக்கு இரசாயன சோதனை

சகல வகையான நூடில்ஸ்களையும் இரசாயன சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலிருந்து சேகரிக்கப்படும் நூடில்ஸ்களின் மாதிரிகள் கைதுதொழில் தொழிற்நுட்ப நிறுவகத்துக்கு சோதனைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. -

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க முயல்கிறார் ரணில்!

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசொன்றை உருவாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார்'' எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, "இந்த அரசு உருவாகிவிட்டால், வடக்கில் ஒரு இராணுவ முகாம்கூட இருக்காது. அனைத்தும் அகற்றப்படும்" என்றும் கூறினார். இதேவேளை, "அன்று ஆயுதத்தால் வடக்கு, கிழக்கை மட்டும் கைப்பற்ற திட்டமிட்டிருந்த புலிகள் இன்று டொலரால்...

வட மாகாணத்தை கேந்திரமாக கொண்டு தேசிய விளையாட்டு விழா

இம்முறை வட மாகாணத்தை கேந்திரமாக கொண்டு தேசிய விளையாட்டு விழா 2016வை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 8 போட்டிகளை யாழ் விளையாட்டு கட்டிடத் தொகுதியிலும் மேலும் 14 போட்டிகளை கிளிநொச்சி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியிலும் நடத்தப்படவுள்ளன. ஹொக்கி, ஜிம்னாஸ்டிக், மற்றும் கரையோர கரப்பந்து போட்டிகள் யாழ் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வௌியே நடத்த...

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் விவாதம்!

தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக இன்றும் (23) நாளையும் (24) சபை பிற்போடும் சந்தர்ப்பத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என அவைத் தலைவர்- அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இவ்விவாதத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எதிர்ப்புத் தெரிவித்தார். பாராளுமன்றின் ஏனைய கட்சியினர் விவாதம் மேற்கொள்ளப்படவேண்டும் என பிரதி சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர் என அவைத் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய இன்றும்...

கிளி. தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நிரந்தர நியமனம் கோரி கிளிநொச்சி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தினார்கள். யாழ். செம்மணி வீதியில் உள்ள வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தை நேற்று காலை 10 மணி அளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினார்கள். மிக நீண்ட காலமாக நிரந்தர நியமனம் கிடைக்காமல் குறைந்த ஊதியத்திற்கு தொண்டராசிரியராகவே கடமையாற்றி...

அமைச்சர் ஹக்கீமின் அறிவிப்பால் இரணைமடு விவசாயிகள் அதிர்ச்சி!

இரணைமடு குடுநீர் விநியோகத் திட்டத்தை இரண்டு ஆண்டு இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டிருப்பதாக நீர் வழங்கல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார். இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இரணைமடு குடிநீர்த் திட்டத்தை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணம் பண்ணைப்...

யாழ். முஸ்லிம்களின் வீட்டுத்திட்ட பிரச்சினை தீர்க்கப்படும் – ஹக்கீம்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் இந்திய வீட்டுத்திட்டம் பெறுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார். யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (22) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், யாழ். மஸ்ஜித் முஹம்மதியா பள்ளிவாசலில் யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம்களுடன் கலந்துரையாடினார். முஸ்லிம் மக்களின் குடிநீர் பிரச்சினை,...

உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நடேசன், புலித்தேவன் உறவினர்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்கள் சிலர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எதிர்கொண்ட சம்பவங்கள் தொடர்பில் அவர்களது உறவினர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை தலைவர் நடேசன் மற்றும் மூத்த தளபதி புலித்தேவன் ஆகியோரின் உறவினர்கள் இவ்வாறு விளக்கம் அளிக்கவுள்ளனர். இறுதிக் கட்ட யுத்தத்தில் சரணடைந்து...

உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் ஆரம்பம்!!

உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலகின் மிகப்பெரிய உயிரினமாக காணப்பட்ட டைனோசர் இனம் அழிவடைய ஆரம்பித்த காலத்தில் இருந்தே, உலகின் அழிவு காலம் ஆரம்பமானது. இதன் பல்வேறுகட்டங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதன்படி தற்போது அதன்...
Loading posts...

All posts loaded

No more posts