கொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு! மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி!

கொடிகாமம் பகுதியில் கடந்த 1ம் திகதி காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி திருகோணமலை பகுதியிலிருந்து நேற்றய தினம் மீட்கப்பட்டு யாழ்.மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 1ம் திகதி கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் குணரத்தினம் சஞ்சீவினி(15) என்ற பாடசாலை மாணவி காணாமல்போயுள்ளதாக பெற்றோர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்திருந்தனர். இந் நிலையில்...

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் குத்திக் கொலை

இலங்கை பணிப் பெண் ஒருவர் உம் அல் ஹேமன் பகுதியில் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இன்று காலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், சந்தேகநபரின் தந்தை பொலிஸாருக்கு அழைப்பை ஏற்படுத்தி தனது மகன் பணிப்பெண்ணை குத்தி கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறியுள்ளார். சந்தேகநபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Ad Widget

நயினாதீவில் பழைய விகாரை இருந்த இடத்தில் மீண்டும் விகாரை

நயினாதீவில் முன்னொரு காலத்தில் இருந்த ரஜமகா விகாரை வளாகத்தில் மீண்டும் விகாரை அமைக்கப்பட்டு, கலசங்கள் மற்றும் ஆசனங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. நயினாதீவில், நாக விகாரை என்னும் விகாரையொன்று துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த விகாரைக்கு சான்றாக அமையும் பழைய விகாரையானது, நயினாதீவு 1ஆம் வட்டாரத்தில் அமையப்பெற்றிருந்தது. இந்நிலையில் பழைய இடத்திலும் ஒரு விகாரையை அமைக்கும்...

வடக்கில் நாளாந்த பெற்றோல் நுகர்வு அதிகரிப்பு

வட மாகாணத்தில் லங்கா பெற்றோல் சராசரி நாளாந்த பாவனையானது கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரையில் அதிகரித்த வண்ணமுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 92 ஒக்ரேய்ன் பெற்றோல் 2011ஆம் ஆண்டு நாளாந்தம் 70,122 லீற்றர் நுகரப்பட்டது. இது 2012ஆம் ஆண்டு 84,751 லீற்றராகவும் 2013ஆம் ஆண்டு 88,946 லீற்றராகவும், 2014ஆம்...

எம்.கே.நாராயணன் மீது காலணியை வீசியவருக்கு விளக்கமறியல்

சென்னையில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபாகரனை 15 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்கால நிலை குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மேற்கு வங்க ஆளுநரும்,...

எந்திரன் 2: உள்ளே வந்த அமிதாப்!! வெளியேறுவாரா அர்னால்டு??

ரஜினிகாந்துடன் எந்திரன் 2 படத்தில் இணைந்து நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் நான் சொல்லும் கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொண்டால் தான் உள்ளே வருவேன் என்று அர்னால்டு வெளியே நின்று கொண்டிருக்கிறார். எந்திரன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் 2 வது பாகத்தை முன்பைவிட பிரமாண்டமாகவும், அதிக...

புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமா ? போலிஸ் விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். பிள்ளையானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள...

அரச பணியில் இணைத்துக்கொள்ளும் வயதெல்லையை 10 வருடத்தால் அதிகரிக்க நடவடிக்கை

அரசாங்க தொழிலில் இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லையை 10 வருடத்தால் அதிகரிக்க அனுமதி பெறுவதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அண்மையில் 'கஜசவ் மித்துரோ" அமைப்பின் ஏற்பாட்டில் மதுகம சிபிகே மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

வட,வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் மழை

நாட்டின் வட,வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் இன்று (05) இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது என அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் மழை பெய்வதோடு கிழக்கு கடலோரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது எனவும் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால்...

பெருவிரலும் ஆள்காட்டிவிரலும் இரைப்பைக்காக இரையாகிவிட்டன

இரைப்பை நோய் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் வலது கையின் இரண்டு விரல்கள் (பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்) வெட்டி அகற்றப்பட்டு அவர், வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்பவமொன்று தங்கொட்டுவ கோணவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு தங்ககொட்டுவ, கோணவில மனந்துறை மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளின் தந்தையான 65...

முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் எண்ணம் புலிகளிடம் இருக்கவில்லை

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஓர் இனச்சுத்திகரிப்பு எனக்கூறி சிலர் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிரந்தர பிளவை ஏற்படுத்த சதி செய்கின்றனர். ஆனால், முஸ்லிம் மக்களை முழுமையாக இந்த மண்ணில் இருந்து அகற்றும் எண்ணம் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்ததில்லையென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்....

இறுதிப் போரில் கைப்பற்றப்பட்ட நகைகளும், ஆயுதங்களும் எங்கே? சுமந்திரன் கேள்வி

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி தற்பொழுது வரையில் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். வடக்கில் பெறப்பட்ட நகைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பாரியார் அணிந்து கொள்வதற்கு வழங்கினாரா? எனவும் அவர் வினா தொடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை...

ஒருநாள் தொடர் இலங்கை வசம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது. நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியதீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இந்தநிலையில் அந்த அணி 26.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 149 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை மழை...

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதி –ஹன்சிகா

விஜய் சேதுபதி– நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தயாரித்தவர் தனுஷ், இயக்கியவர் விக்னேஷ் சிவன். மீண்டும் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தையும் விக்னேஷ் சிவன்தான் இயக்குகிறார். இந்த படத்தில் திரிஷாவும் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த...

மற்றுமொரு ரஷ்ய விமானம் விபத்து – பலர் பலி

தெற்கு சூடானின் தலைநகர் ஜுபா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய தயாரிப்பு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக வௌிநாட்டு செய்திகள் கூறுகின்றன. ஏனையவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. ரஷ்ய தயாரிப்பு சரக்கு விமானமொன்றே இவ்வாறு...

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உள்ளூர் நேரப்படி இன்று நள்ளிரவு 12.44 மணியளவில் டைமோர் மாகாணத்தில்...

‘கருவி’ நிறுவன அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு

நல்லூரில் உள்ள 'கருவி' மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத்தில் அதன் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (31.10.2015) இடம்பெற்றது. அவுஸ்திரேலிய தமிழ்ப் பொறியிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் 'கருவி' மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத் தலைவர் தர்மசேகரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக்...

வடக்கு விவசாய அமைச்சால் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு மறுவயற்பயிர் விதைகள் விநியோகம்

விருதைத் திரும்பத் தரப்போவதில்லை- கமல்ஹாசன்

இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துவருவதாகக் கூறப்படுவதற்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப அரசுக்கே அனுப்பிவரும் நிலையில், தேசிய விருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் தனக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திரும்பித் தரப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். தேசிய விருதுகளை திரும்ப அளிப்பவர்களுக்கும் கூட பொறுமையுடன் கூடிய சகிப்புத்தன்மை தேவை என்றார் அவர்....

பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்புவேன் – யாழ்.ஆயர் உறுதி

போரினால் பாதிக்கப்பட்ட கணவரை இழந்த பெண்களிற்காகவும்,அரசியல் கைதிகளிற்காகவும், இன்னமும் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களிற்காகவும் குரலெழுப்புவேன் என யாழ்.மறை மாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் பேர்னாட் ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். போர் முடிவடைந்து ஆறுவருடங்களாகின்றன பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனது மறைமாவட்டம் குறித்தும் அது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்...
Loading posts...

All posts loaded

No more posts