- Saturday
- May 16th, 2026
அவுஸ்திரேலியாவையொட்டியுள்ள இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10,000 USA டொலர் நிதியுதவி (6 இலட்சத்து 66 488 இந்தியன் ரூபாய்) வழங்கியுள்ளார் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரான குமார் சங்ககார. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சென்னையில் நடந்த IPL ல் குமார் சங்ககார மற்றும் சிங்கள இனத்தவர்கள்...
சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம், பகுதி அளவில் இன்று சனிக்கிழமை(5.12.15) முதல் செயல்படத் தொடங்கும் என தேசிய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவத்ஸா கூறியதாக பிடிஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை காலை முதல், சென்னை விமான நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சோதனை முறையில் விமானப்...
மழை என்றால் நுளம்பு வரும் தானே' என்று அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி அலட்சியமாக பதிலளித்து, வைத்தியசாலைக்கு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையால் சிவப்பு அறிவித்தல் ஒட்டவைத்துள்ளார். இது பற்றித் தெரியவருவதாவது, கோப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர், அச்சுவேலி பொலிஸார், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அச்சுவேலி நகரப் பகுதியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையில்...
சவூதியில் கல்லால் எறிந்து மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணுக்காக குரல்கொடுத்த சுமந்திரன் எம்.பிக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர், எம்.பிக்கள் கொதித்தெழுந்ததால் நேற்றுச் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். தனது...
இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "இந்தப் பாரிய இயற்கையின் சீற்றத்தால் தங்களது சொந்தங்களை மற்றும் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்ப...
"ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர். கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் தவறு என்று கூறவில்லை. முன்னாள் அரசின் இந்த அணுகுமுறை சரி என்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்...
"செந்தூரனின் தற்கொலையில் சந்தேகம் உள்ளது. எனவே, இது தற்கொலையா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்கவேண்டும்'' என்று அரசிடம் வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, வடக்கில் இடம்பெற்ற செயற்பாடுகள் குறித்து அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். தடுப்பிலுள்ள கைதிகள் குறித்து...
12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை கடந்த ஆட்சியில் விடுதலை செய்தது பாரதூரமானதா? அல்லது 38 தமிழ்க் கைதிகளை பிணையில் விடுவித்தமை பாரதூரமானதா? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர்களின் மீதான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில்...
"தமிழ் மக்களிடம் கூறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதிகளை வழங்கும் அரசு, அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி எமது மக்களிடமிருந்து எம்மைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி கைதேர்ந்தது'' என்று சபையில் கடும் அதிருப்தியுடனும், ஆவேசத்துடனும் அரசின் மீது குற்றஞ்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இது கடந்த அரசைவிட மோசமான நிலை...
நல்லாட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்இன்று அமைக்கப்பட்டுள்ள நல்லாட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலினூடாக ஜனாதிபதியை மாற்றி ஆயிரம் ஏக்கர் காணிகளை எம்மக்களிடம் கையளித்துள்ளோம். அதேபோன்று 5300 ஏக்கர் காணிகளை எவ்வித இனவாதமின்றி தமிழர்களின் சொத்துக்களை அவர்களிடம் கையளிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றில்...
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உடபட உயர் பதவிகளுக்கு தமிழர்களை நியமிப்பதனூடாக தமிழ் மக்களுக்கு பொலிஸார் மீதான நம்பிக்கை ஏற்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று (04) பாராளுமன்றில் தெரிவித்தார். சட்டம ஒழுங்கு அமைச்சின் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...
சர்வதேச இலஞ்ச ஊழலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு தேசிய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்று நேற்று (04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தேசிய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியன பொலிசாருடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு நேற்று காலை யாழ் மத்திய...
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி ரகானேவின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 334 ரன்கள் சேர்த்தது. இந்திய மண்ணில் முதல் சதத்தை பதிவு செய்த ரகானே 127 ரன்கள் விளாசினார். அஸ்வின் 56 ரன்கள் சேர்த்தார். தவான் 33...
கடந்த சில நாட்களாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தற்போது நாட்டினை விட்டு விலகியுள்ள போதும் மேலும் புதியதொரு வானிலை மாற்ற குழப்பத்தினால் இன்று (05) மழையுடன் கூடிய காலநிலையே நாடு முழுவதும் தொடரும் சாத்தியமுள்ளதென என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பிற்பகல் 12 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கான...
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் (HNDA) தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அபராதம் செலுத்துமாறு பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா...
சென்னையில் நேற்று பின்னிரவில் இருந்து லேசாக வெளுக்கத் தொடங்கிய வானம், இன்று பிற்பகலில் இருந்து மேகப்போர்வையை போர்த்திக் கொண்டது. சுமார் ஒருவாரத்துக்குப் பிறகு பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருவதையும், பஸ், ரெயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து ஆங்காங்கே இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று பிற்பகல்...
ஆண்டுதோறும் டிசம்பர் 5ஆம் திகதி உலக மண் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைக் கடைப்பிடிக்கும் நோக்குடன், வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஒருநாள் விசேட கருத்தமர்வு ஒன்றை நாளை சனிக்கிழமை (05.12.2015) யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியின் சங்கிலியன் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. ‘மண் - உயிர் வாழ்வதற்கான திடமான தளம்’ என்ற கருப்பொருளில் நிகழவுள்ள...
யாழில் டெங்கு காய்ச்சல் , வயிற்றோட்டம், எலிக்காய்ச்சல் மற்றும் உண்ணிக்காய்ச்சல் ஆகிய தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சத்தியமூர்த்தி, இவை தொடர்பில் சுகாதார பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இவ்வருடத்தில் இதுவரை இந்நான்கு தொற்று நோய்களினால் ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்ச...
Loading posts...
All posts loaded
No more posts
