Ad Widget

மேற்கத்திய இசை கேட்ட சிறுவனுக்கு மரண தண்டனை!!

ஈராக் மற்றும் சிரியா நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ் தீவிர்வாதிகள் அதனை இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள என்ற நகரில் அய்ஹாம் ஹுசைன்(வயது 15) என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். சில தினங்களுக்கு முன்னால் தந்தையின் கடைக்கு சென்ற சிறுவன், மேற்கத்திய இசையை ரசித்து கேட்டுள்ளான். இதனை பார்த்த தீவிரவாதிகள் சிறுவனை கைது செய்து ஷரியா சட்டங்களுக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

over-a-pop-song-Evil-ISIS-butcher-slaughters-boy_SECVPF

மேற்கத்திய கலாச்சரம் என்பது இஸ்லாமியத்திற்கு எதிரானது. தொலைக்காட்சி பார்ப்பது, மேற்கத்திய இசையை கேட்பது உள்ளிட்டவைகள் கடும் தண்டனைக்கு உள்ளானது.எனவே, இஸ்லாமியத்திற்கு எதிராக செயல்பட்ட சிறுவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக’ தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு வெளியானதும், சிறுவனின் கண்கள் கட்டப்பட்டு கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டான். பின்னர், நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்க்க சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதும், அந்த உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Posts