- Sunday
- May 17th, 2026
வசதி குறைந்தவர்கள் மற்றும் குறைந்த செலவில் திருமணத்தை நடத்தி முடிப்பவர்களுக்கு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கின்றது. திருமண சுப நாட்களில் செல்வச்சந்நிதி ஆலயத்தில் குறைந்தது 4 திருமணங்கள் நடைபெறும். இந்தளவுக்கு அங்கு திருமணங்கள் நடைபெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், குறைந்த செலவில் திருமணம் நடத்தி முடிக்கலாம் என்பதாகும். திருமணம் நடத்துவதற்காக...
கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போன சம்பவம் தொடர்பாக தரம் 6 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேக நபர்களை தலா ஐம்பதாயிரம் ரூபாய் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணைகளிலும் செல்லுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி...
நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டுக்குள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசையா பிரதீபன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்ற தாபரிப்பு வழக்கு...
அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சு “தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” என பெயர் மாற்றப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை திகதியிடப்பட்டு வெளியான இலக்கம் 1945/40 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சின் பெயர் அதிகாரபூர்வமாக, “தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” என மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் ஜனாதிபதி...
சவுதி அரேபியாவில் ஆணொருவருடன் தகாத உறவைப் பேணியதாக குற்றம்சாட்டப்பட்டு கல்லால் அடித்து கொல்லுமாறு, இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மேன்முறையீட்டை அடுத்தே, அந்த நாட்டு அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த பெண் மூன்று...
2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதியில் வௌியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 31ம் திகதி குறித்த பெறுபேறுகள் வௌியிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் ‘நையப்புடை’ படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் கதையின் நாயகனாக பிரதான வேடமேற்று நடிக்க, பா.விஜய். சாந்தினி, உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிமுகவிழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, ‘‘இப்படத்தில் என்னை வைத்து விஜயகிரண் ஆக்ஷன் செய்ய வைத்துள்ளார். காமெடி செய்ய வைத்துள்ளார்., நடனம் ஆடவைத்துள்ளார், குழந்தைகளோடு...
‘பாகுபலி’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி, பிரபல இயக்குனர்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். பிரபல நடிகர்–நடிகைகள் அனைவரும் இவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா? என்று எண்ணும் அளவு ராஜமவுலியின் செல்வாக்கு கொடி கட்டி பறக்கிறது. இந்திய திரை உலகின் அனைத்துப் பார்வையும் இவர்மீதுதான் இருக்கிறது. ராஜமௌலியின் ‘பாகுபலி–2’ மிக பிரமாண்டமாக இருக்கும் என்ற...
யாழ் மக்களுக்கு நன்னீர் வழங்கும் முகமாக மத்திய அரசினால் முன்மொழியப்பட்டு மாகாண சபையினால் முன்னெடுக்கப்படும் கடல்நீரினை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிராக ஒரு தொகுதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றினை வடமராட்சி கிழக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த அடையாள உண்ணாவிரத போராட்டமானது, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று(23) இடம்பெற்றது.குறித்த பிரதேசத்திலிருந்து கடல்நீரை...
நடப்பு(2015) ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த வீரர்கள், நடுவர்கள் உள்ளிட்ட விருதுகளை ஐசிசி ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. நடப்பு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரராக தென் ஆப்பிரிக்கா அணியின் டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்....
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் இன்று முதல் கைது செய்வற்கான விசேட சட்டம் ஒன்று அமுல் படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தையொட்டியே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட சட்டம் இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பற்ற இடங்களான ஆறு, கடல், குளங்களில் பொதுமக்கள் குளிக்க...
முல்லைத்தீவில் யுத்த காலத்தில் கைவிடப்பட்ட வாகனங்களுக்காக நட்டஈடு வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதி யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களை மக்கள் கைவிட்டுச் செல்ல நேரிட்டது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து பொது மக்கள் கைவிட்டுச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்களை பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவின் அநேகமான இடங்களில் இந்த...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தீர்வை வரவு – செலவுத் திட்டத்தில் கிலோவொன்றுக்கு 135 ரூபாவிலிருந்து 225 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து விற்பனை விலைகளை அதற்கேற்ப அதிகரிப்பதற்கான அனுமதி கோரி பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதற்கமைய இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலையை 35 ரூபாவாலும்,...
யாழ். குடாநாட்டில் 10,716 தமிழ்க் குடும்பங்களும், 1,465 முஸ்லிம் குடும்பங்களும் உள்ளடங்கலாக 12,181 குடும்பங்கள் இன்னமும் மீள் குடியமர்த்தப்படாதுள்ளன என்று மாவட்டச் செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியமர்த்தப்பட வேண்டிய 10,716 தமிழ்க் குடும்பங்களில் 1,318 குடும்பங்கள் குடாநாட்டில் உள்ள முகாம்களில் வாழ்கின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, குடாநாட்டில் தற்போது 190,150 குடும்பங்களைச் சேர்ந்த 617,722...
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன என கூறப்படுகிறது, யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை மூடிய அறையினுள் வைத்து இரகசியமாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...
முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரனின் கொலை தொடர்பில் அவரது 5 சகோதரர்களிடமும் விசாரணைகள் மேற்கொண்டால் யார் கொலையைச் செய்தார்கள் என்ற உண்மை வெளிப்படும். சகோதரர்களுடன் நான் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதால் இந்தவிடயம் தனக்குத் தெரியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை...
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட கீரிமலை, மாவிட்டபுரம் ஆகியவற்றை அண்மிய பகுதிகளில் அமைந்துள்ள காணிகள், அவற்றினது உரிமையாளர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் தற்போது மக்கள் மீளக்குடியேறி வருகின்ற நிலையில், அம்மக்கள் தங்களுக்கு மேலதிகமாகவுள்ள காணிகளை விற்பனை செய்து வருகின்றனர். அத்துடன், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணிகள் இருந்தும், இடம்பெயர்ந்ததின் காரணமாக யாழ்ப்பாணத்தின் வேறு இடங்களில் காணிகளைக்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்து, ஒருவருட நிறைவைக் கொண்டாடும், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதியன்று, விசேட அறிவிப்பொன்று விடப்படவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. புத்தாண்டின் கன்னியமர்வு 8ஆம் திகதி ஆரம்பமாவதுடன், மறுநாள்...
வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார் என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பங்குபற்றலுடன் கடந்த சனியன்று 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பு அங்குரார்ப்பணம்...
கிராம இராச்சியத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. இதன் மூலம் வடக்கு, கிழக்கின் தனித்துவம் பேணப்படும். இதனால் வட மாகாண சபைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான...
Loading posts...
All posts loaded
No more posts
