Ad Widget

மனித மூளையில் திறமைகளை சேமிக்க செய்யலாம்!!

திரைப்படங்களில் வரும் நம்ப முடியாத செயல்கள் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு நிஜமாகி வருகின்றது. தற்சமயம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இதை சாத்தியப்படுத்தும் முதல் ஆய்வில் வெற்றி கண்டுள்ளனர். கலிஃபோர்னியாவை சேர்ந்த ஹியூகஸ் ரிசர்ச் லபோரட்டரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களை வேகமாக படிக்க செய்யும் புதிய முறையை

transcranial direct current stimulation

மனித மூளையில் நேரடியாக தகவல்களை வழங்கும் சிமுலேட்டர் ஒன்றை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் குறைந்த நேரத்தில் திறன்களை மனிதர்கள் கற்று கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலைகளை வேகமாக கற்பிக்க லோ-கரண்ட் எலக்ட்ரிக்கல் பிரெயன் ஸ்டிமுலேஷன் எனும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக ஹியூகஸ் ரிசர்ச் லபோரட்டரியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹியூகஸ் ரிசர்ச் லபோரட்டரியின் மூத்த ஆய்வாளர் டாக்டர். மாத்யூ பிலிப்ஸ் மற்றும் சில ஆய்வாளர்கள் இதனை நடைமுறைப்படுத்த transcranial direct current stimulation (tDCS) எனும் வழிமுறையை பயன்படுத்தியிருக்கின்றனர்.

இந்த வழிமுறையானது ஆய்வில் பங்கேற்ற ஆறு பேரின் மூளையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பிரெயின் ஸ்டிமுலேஷன் செய்யப்பட்டவர்கள், ஸ்டிமுலேட் செய்யப்படாதவர்களை விட சிறப்பாக செயல்பட்டதாக டாகடர் பிலிப்ஸ் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் இந்த ஆய்வின் மூலம் பக்க வாத நோயில் பாதிக்கப்பட்டோரை வேகமாக குணமாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு tDCS மூலம் பிரெயின் ஸ்டிமுலேஷன் வழிமுறையை தினசரி மனித செயல்பாட்டில் பயன்படுத்த முடியும் என்றும் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் இந்த ஆய்வின் முன்னேற்றங்களின் மூலம் கண்டறியப்படும் தொழில்நுட்பமானது கல்வி மற்றும் பயிற்சி போன்றவற்றில் பயன்படுத்த வழி செய்யலாம் என்றும் டாக்டர் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Posts