- Monday
- May 18th, 2026
சில ஊடகங்களின் நடவடிக்கை குறித்து இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார். சில ஊடகங்கள் வேண்டுமென்றே அணியின் வீரர்கள் மீது சேறு பூசியிருந்தன. ஆட்ட நிர்ணய சதி குறித்து நடைபெறும் விசாரணைகளை பயன்படுத்தி வீரர்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர். எனினும் விளையாட்டை தூய்மையாக வைத்திருக்க விளையாட்டுத்துறை அமைச்சர், பொலிஸ் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு...
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காணாமல்போன சிறுவன் பத்தரமுல்லை நீதிமன்றத்தால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். கிளிநொச்சி ஐந்து வீட்டுத்திட்டத்திற்கு அருகில் வசித்து வந்த 16 வயதான ஜேசுநாயகம் நிமலேந்திரன் என்ற சிறுவனே நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட முறுகல் காரணமாக பாடசாலைக்கு வர வேண்டாம் என்று மறுக்கப்பட்டதனால் வீடு செல்ல...
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா என்ற சிறுமி தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் சாதனைகளை புரிந்து வருகிறார். தமிழக அரசின் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளார். இம்முறை இச் சிறுமி மாநிலங்கள் அளவில் சென்னை வேளச்சேரியில் 10ம் திகதி இடம் பெற்ற போட்டியில் தமிழகத்தில்...
காணாமற்போனவர்கள் இறந்திருக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்தானது, இனவாதக் கருத்து மாத்திரமல்ல, அது ஆதிக்க வெறியான பேச்சு என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் 15ஆம் திகதி நடைபெற்ற பொங்கல் விழாவில், உரையாற்றிய பிரதமர், காணாமற்போனவர்களில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில்...
அழகான பெண்போல பாவனை செய்து, இளைஞனொருவனைத் தன் வலைக்குள் வீழ்த்தி, அவரிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தை கறந்தவர் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்களின் ஊடாக அச்சுறுத்தி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் குழுவொன்று ஈடுபடுவதாக நீதவானின்...
திடீரென ஏற்பட்ட வலிப்பினால் மூன்று பிள்ளைகளின் தாயொருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பகுதியைப் சேர்ந்த மதன் ஜெயமாலா (வயது 28) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதிகாலையே கணவன் வேலைக்குச் சென்றுள்ளார். இரண்டு பிள்ளைகளும் பாடசாலைக்குச் சென்ற நிலையில் திடீர் வலிப்பு ஏற்பட்டு இவர் நிலத்தில் வீழந்து மயங்கியுள்ளார்....
பூநகரியில் 860 ஏக்கர் காணி போலி ஆவணங்கள் மூலம் சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதுடன் அக்காணிகளில் புதைக்கப்பட்ட சடலங்கள் புதையல் பூஜை என்ற போர்வையில் அகற்றப்பட்டுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது: பூநகரி- கெளதாரிமுனை - பரமன்கிராயில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 860 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு விற்பனை...
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு 36.5 கோடி ரூபாவை உலக வங்கி வழங்கியுள்ளது என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டுக்கான சுகாதார அபிவிருத்தித் திட்டத்துக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வருடமொன்றுக்கு 3ஆயிரத்து 500 மில்லியன் சிகரெட்டுகள் விற்பனையாகின்றன என்று போதைப்பொருள் தொடர்பான தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் புபுது சுமனசேகர தெரிவித்தார். தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹரகமவிலுள்ள இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்றது. இதன்போதே போதைப்பொருள் தொடர்பான தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேற்படி...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப் பட்டமளிப்புவிழா நேற்றயதினம் (19) ஆரம்பமாகியது. யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்றும் (19) இன்றும் (20) ஆக எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் 1939 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர். யாழ் பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற நேற்றய முதல் நாள் அமர்வில் யாழ் பல்கலைக்கழக வேந்தர்...
கொழும்புத்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பாசையூர் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் கல்வீச்சுதாக்குதல் இடம்பெற்றுள்ளது. யாழ்.கொழும்புத்துறையில் இருந்து பாசையூர் வழியாக பஸ் சென்றுகொண்டிருந்த போது, பாசையூர் பகுதியில் மூன்று...
எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், புதிய அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட...
பன்னிரெண்டு பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்று கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்துள்ளார். பிக் பாஷ் டி20 லீக் தொடரின் லீக் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் மெல்போர்ன் அணிக்காக விளையாடிய கெய்ல், 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 12 பந்துகளில் 50 ஓட்டங்களை எட்டினார். இதன்மூலம்...
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி திரையுலகின் அனைத்து சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஊர்வலம் நடத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘பெப்சி' தலைவர் ஜி.சிவா...
உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்தத் தடையை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தில் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக நூற்றுக்கணக்கானோர் மீது போலீசார் வழக்கும்...
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ளதன் பயன் இந்நாட்டு மக்களுக்கு எப்போது கிடைக்கும் என்பதில் தொடர்ந்து சிக்கல் காண்படுகின்றது. தற்போதைய சர்வதேச விலைகளுக்கமைய பெட்ரோல் ஒரு லீற்றர் 90 ரூபாய்களுக்கும் டீசல் ஒரு லீற்றர் 70 ரூபாய்கள் வரையும் குறைக்கமுடியும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. பிரதானமாக கச்சா எண்ணையின் வழங்கல் அதிகரித்துள்ளமையினால்...
படிக்காது படம் பார்த்துக்கொண்டு இருந்ததை தந்தை கண்டித்ததை தாங்க முடியாத மாணவி வீட்டு யன்னலில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுதுமலை மேற்கில் இடம் பெற்றுள்ளது. நேற்று மாலையில் கோவிலுக்கு பூசைக்காக சென்று விட்டு தந்தை வீடு திரும்பிய நிலையில் மகள் படிக்காது படம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். தந்தையார் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு படிக்கும் படி...
சர்ச்சைக்குரிய என்றிக் இலக்சீயஸின் இசை நிகழ்ச்சியின் போது மது அருந்தியிருந்த பெண் ஒருவர் தமது கச்சையை கழற்றி எறிந்த சம்பவம் மற்றும் அனுமதிப்பத்திரம் இல்லாமல் நிகழ்ச்சியின் போது மது விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் இந்த நடவடிக்கைகள் இலங்கையின் கலாசாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
தமிழ் மக்கள் பேரவை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட்டு விட்டதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என்பதை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு தெரிவிக்கின்றது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் வெளியிடப்படும் இப்பரப்புரைகளைப் பொதுமக்கள் நம்பவேண்டாம் என தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு கேட்டுக்...
போர் முடிந்து 7 வருடங்களாகியும் பெருமளவான முன்னாள் போராளிகள் இன்னும் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர் என்று செய்திச்சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியில் வாழும் சிவலிங்கம் ரவீந்திரதாஸ் என்ற முன்னாள் போராளியை கோடிட்டுள்ள செய்திச்சேவை, அரசாங்கத்தின் புனர்வாழ்வு மையத்தில் 3 வருடங்களை கழித்த அவர், தற்போது தொழில் வாய்ப்பின்றி உள்ளார் என்று தெரிவித்துள்ளது. புனர்வாழ்வின் போது...
Loading posts...
All posts loaded
No more posts
