- Monday
- May 18th, 2026
புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்கும் வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவிடம், போருக்கான காரணங்கள் மற்றும் அதன் பின்புலங்கள் தொடர்பான புராதன ஆவணங்களை கையளிக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில், இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, வடமாகாண சபை உறுப்பினர்கள்...
தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே, தனது மகன் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கண்டியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'பணச் சலவை சட்டத்தின் கீழேயே யோஷிதவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது....
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவர் எனக் கூறப்படும் எமில் காந்தனுக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தலை கொழும்பு விசேட நீதிமன்றம் நேற்று வாபஸ் பெற்றுள்ளது. அவர் சரணடைவதாக தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்த உறுதிமொழியை அடுத்தே பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொலம்பியாவில் சிக்கா வைரஸ் தொற்றிய 20,000 பேரில் 2000 பேர் கர்ப்பினிப் பெண்கள் என்று அந்நாட்டு சுகாதார நிறுவனம் அறிவித்துளள்து. நுளம்பினால் பரவும் இந்த வைரஸ் பாதிப்பால் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறப்பது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிகா வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதாக எச்சரித்திருக்கும் உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டில் 4 மில்லியன்...
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அவ்வகையில் ஜனவரி 31 ஆம் திகதியுடன் காலாவதியாகவிருந்த கால எல்லையானது தற்போது பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி வரையாக நீடிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் தமக்கான சீருடைகளை பெற்றுக் கொள்ள முடியாது போன மாணவர்களின் நலன் கருதியே இத்தீர்மானம்...
இந்தியாவுடனான 20க்கு 20 கிரிக்கட் போட்டிக்கான இலங்கை அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த அணிக்கு தினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளார். இந்நிலையில் எஞ்சலோ மெத்தியூஸ், லசித் மாலிங்க, நுவன் குலசேகர, ரங்கன ஹேரத் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் உபதைக்குள்ளாகியுள்ளனர். இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. அணியில் தெரிவாகியுள்ள வீரர்கள் வருமாறு,...
ஐ.சி.சி., 20 ஓவர் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்த தொடரில் மூன்று ஆட்டங்களில் முறையே 90* ஓட்டங்கள், 59* ஓட்டங்கள், 50 ஓட்டங்கள் வீதம் எடுத்து அவுஸ்திரேலியாவை விழிபிதுங்க...
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், நேற்று (திங்கட்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். வட மாகாணத்தில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ள நிலையில், பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்...
அண்மையில் வெளியான க.பொ.த (உ.த) பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அனுசரணையுடன் இடம்பெற்றது. பாலகன் கல்வி மேம்பாட்டுபிரிவின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுக்கு அக்கட்சியின் கொள்கை முன்னெடுப்பு பிரிவு இணைப்பாளர் சமயலிங்கம் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். இந்நிகழ்வு நேற்று (31.01.2016)...
எத்தனை இடர்கள் வந்தபோதும் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. நம்பிக்கைதான் வாழ்க்கையின் அடித்தளம். அந்த நம்பிக்கையை நாம் இழந்து மனம் துவண்டுவிழாமல் இருப்பதற்கு விழாக்கள் உதவுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புளியம்பொக்கணையில் சனிக்கிழமை (31.01..2016) ஹற்றன் நாஷனல் வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு...
மிரிஹானையில் உள்ள வீட்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை முக்கிய பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்தே அவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இலங்கையின் நீதித் துறை பலமாகவும் சிக்கலாகவும் உள்ளதாக கூறிய மகிந்த ராஜபக்ஸ முடியுமான வரை மகனின் விடுதலையை துரிதப் படுத்துவது பிரதானம் எனக் கூறியுள்ளார். யோசித...
வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மயிலிட்டி பகுதியில் மக்களை மீள குடியமர்த்தல் தொடர்பில் யாழ். மாவட்ட செயலாளரும் பிரதேச செயலாளர்களும் இணைந்து ஓர் அறிக்கையை சமர்பிக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சனிக்கிழமை (30)...
யாழ்.குடாநாட்டில் புதிய விதத்தில் தலையெடுத்துள்ள கொள்ளை, வழிப்பறிக் கொள்ளை, வீட்டுத்திருட்டுக் குற்றவாளிகளுக்கு கடும் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும், வழக்கு முடியும் வரையில் இவர்களுக்குப் பிணை வழங்கப்பட மாட்டாது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார். பெருமளவு போதைவஸ்தை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர்களுக்குப் பிணை கோரி கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த...
மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓடும் இளைஞர்களை, சாராயக் கடைகளுக்கு முன்னாலேயே மடக்கிப்பிடித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸாருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். மதுபோதையில் வாகனம் செலுத்தும் குற்றச்செயல்கள், மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் மதுபோதையில் வாகனம் செலுத்தும் குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில் பதிவாகியிருப்பதைச்...
அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் வெற்றிப்பெற்றதாக கூறி வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள், குறுஞ்செய்திகளுக்கு பதில் அளித்தல் மற்றும் தொடர்பை ஏற்படுத்தல் என்பவற்றை தவிர்க்குமாறு தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான போலி வெளிநாட்டு அழைப்புகள் தொடர்பில் நாட்டின் பல பாகங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, அந்த...
2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை www.doenets.lk...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்க்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்றார். நேற்று பகல் அவர் அங்கு சென்றதாகவும் இவருடன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரும் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடுவது தொடர்பில், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார எம்பி, தனது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மஹிந்த அணி கூட்டாளியும், பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில எம்பிக்கு எடுத்துக்கூறி, தொட்டதற்கெல்லாம் இனவாதம் பேசி, நாட்டை மீண்டும் இனத்துவேஷ குட்டையில் ஆழ்த்த முயல வேண்டாம்...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி 35 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் அரிசிக்கான வரி 15 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்துள்ள பிரபுதேவா, கடைசியாக தமிழில் ‘எங்கள் அண்ணா’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு தமிழில் இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்தியில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரபுதேவா, தற்போது தமிழில் நடிக்க ஆர்வம் காண்பித்துள்ளார். இவர் நடிக்க இருக்கும் புதிய...
Loading posts...
All posts loaded
No more posts
