இலங்கையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட நீராவிப் புகையிரதம்

புகையிரதம் அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகிறது. புகையிரதம் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவிப் புகையிரதமாக இயங்கியது. இலங்கையில் உள்ள நீராவிப் புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரை 02.02.2016 இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தப் புகையிரதத்தில் செல்வதற்கு மிகவும்...

சாரதிகளுக்கு அதிகூடிய தண்டனை

மதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைத்த 6 மாத சிறைத்தண்டனையும் 7,500 ரூபாய் அபராதம் மற்றும் சாரதி அனுமதிபத்திரத்தை 6 மாதகாலம் இரத்து செய்தும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார். மானிப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாரதிக்கு எதிராக மூன்று...
Ad Widget

கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் கதிர்காமநாதன் காலமானார்

கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் முத்தையா கதிர்காமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை காலை தனது 72ஆவது வயதில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சங்கத்தின் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி...

“மணமகன் தேவை” விளம்பரம் ஊடாக பெண்களை ஏமாற்றி வந்த திருடன்

பத்திரிகைகளில் வெளிவரும் மணமகன் தேவை என்ற பகுதியூடாக நாட்டின் பல பிரதேசங்களிலும் பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்து வந்த நபர் ஒருவரை களுத்துறை தெற்குப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை குறித்த நபர் 2 கிராம்,80 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே பொலிஸார் கைது செய்திருந்ததாக.தெரிவித்துள்ளனர். ஆனால் பொலிஸார் குறித்த சந்தேக...

விமான நிலைய அபிவிருத்திக்காக மயிலிட்டி நிலத்தை தர முடியாது! – பிரதேச மக்கள்

அள்ளி வழங்கும் நீலக் கடலையும், பொன் கொழிக்கும் சிவப்பு மண் விவசாயப் பூமியையும் விமான நிலைய அபிவிருத்திக்காக நாம் தாரை வார்க்க முடியாது என வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவரும் மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவின் தலைவருமான அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். அபிவிருத்தியா? மீள் குடியேற்றமா? என்பதை மயிலிட்டி மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும்,...

ஐ.தே.க.வுடன் இணைகிறார் பொன்சேகா..!

பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இரு கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைசாசத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமனம் பெறவுள்ள அவருக்கு அமைச்சு பதவியும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணிக்கு மலிங்க தலைவர்!

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் மற்றும் ஆசியக் கிண்ணம் ஆகிய போட்டித் தொடருக்கு லசித் மலிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த இரு போட்டித் தொடருக்கும் லசித் மலிங்க தலைமைப் பதவி வகிக்கும் அதேவேளை, உப தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் செயற்படுவார் என கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

நலன்புரி முகாம்களில் இளவயது கர்ப்பம் அதிகரிப்பு

தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நலன்புரி முகாம்களில் இளவயது திருமணம் மற்றும் இளவயது கர்ப்பம் என்பன அதிகரித்துக் காணப்படுவதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமைகளின் கீழ், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்,இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில்...

மலக்கழிவுகளால் நாறும் கீரிமலை

கீரிமலைப் பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையினர் மலக்கழிவுகளைக் கொட்டி வருவதால் அப்பகுதியிலுள்ள நிலத்தடி நீர் மாசடைவதுடன், அப்பகுதியில் மீளக்குடியேறிய மக்கள் சுகாதாரச் சீர்கேடான காற்றை சுவாசிக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றது. இதன்போதே அவர்...

“ஒரு நாடு ஒரு தேசம்” மென்பொருள் அறிமுகம்

சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில், “ஒரு நாடு ஒரு தேசம்” எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம், எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தில் தங்கள் முகப்பு படத்தில் இந்த மென்பொருளை பயனாளர்கள் பயன்படுத்தக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அவசர நிலை பிரகடனம்

உலகில் பல நாடுகளில் வெகு வேகமாக பரவி பரவும் ஸிகா வைரஸ் காரணமாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் பேர் ஆளாகியிருப்பதாக மதிப்பிடபட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO), ஸிகா வைரஸ் குறித்தும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

சாவகச்சேரியில் 7 கிலோ கிராம் தங்க கட்டிகளுடன் பெண்ணொருவர் கைது

100 கிராம் நிறையுடைய 70 தங்க பிஸ்கட்களுடன் பெண்ணொருவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க கட்டிகளின் மொத்த நிறை 7 கிலோ கிராம் என்பதுடன் அவற்றின் பெறுமதி 39,340,000.00 ரூபாய் (சுமார் 4 கோடி) என்று பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் 50 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், சாவகச்சேரி, சங்த்தாணை...

டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் விசாரணை

கொலை வழக்கை காணொளிக்காட்சி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலம் விசாரணை நடத்துவதற்கு டக்ளஸ் தேவானந்தா முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். இலங்கையின் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா 1986-ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் வசித்தார். அப்போது, தீபாவளிக்காக பட்டாசு வெடித்தவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் சிலர் சுட்டனர். இதில்...

ராஜபக்ஷக்களின் கண்ணீர் தொடர்பில் அப்சரா பொன்சேகா

எங்கள் குடும்பம் எப்படி துயரடைந்தோம், தாஜூடீனின் பெற்றோர் எவ்வாறு துயரடைந்திருப்பர், பிரகீத் குடும்பம் எவ்வாறு துயரடைந்திருக்கும் என்பதை நாமல் உணரட்டும், இந்த கணமே அவரது குடும்பத்தினர் அவர்களிற்கு துணிச்சலிருந்தால் கடந்த காலங்கள் குறித்து உணரும் தருணமாக அமையட்டும் என்று முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா தனது முகப்புத்தகத்தில்...

யாழில் பட்டப் பகலில் துணிகரக் கொள்ளை

யாழ்.கட்டப்பிராய் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்றவர்கள், வீட்டின் உரிமையாளரின் துணிச்சலினால் வசமாக மாட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.கல்வியங்காடு- கட்டப்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வீட்டின் உரிமையாளர்கள் இல்லாத நிலையில் உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த அலுமாரிகள், மேசை...

வித்தியா கொலை வழக்கில் சட்டத்தரணி தலைமறைவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கினை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தென்னிலங்கையினைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியே அவர்களிடம் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாம் பிணையிலாவது வெளியில் வந்துவிடலாம் என்ற நப்பாசையில் சட்டத்தரணியிடம் பெரும் தொகைப் பணத்தினைக்...

சிறை உணவையே சாப்பிடுகிறார் யோஷித – சலுகைகள் ஏதுமில்லை!

சிறையில் யோஷித ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐவருக்கும் எவ்விதமான மேலதிக சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும், ஆயினும் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் தொடர்பான ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார். குறித்த சந்தேகநபர்கள் சாதாரண கைதி அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், கவிஷான் திஸாநாயக்க என்பவர் மாத்திரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், தேவையற்ற...

போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்கவே கொழும்பு வருகிறாராம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் - ஹுசைன் போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் பெயரில் விசேட பொறிமுறையுடன் கூடிய நீதிமன்றத்தை உருவாக்கவே இலங்கை வருகிறார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பொரளை எம்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்...

வேலைவாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க தற்போதுள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் இந்த விடயத்தை மீண்டும் அவர்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் யாழ்.மாவட்ட மேலதிக செயலாளர் பா.செந்தில்நந்தனன் தெரிவித்தார். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று திங்கட்கிழமை (01) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்ட பின்னர், மேலதிகச் செயலாளரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தனர். மகஜரைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர்...

தமிழீழத்தை கைவிடவுள்ளோம் – சிறிதரன்

தமீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து...
Loading posts...

All posts loaded

No more posts