முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினரின் அணிவகுப்பு

இறுதிக்கட்டபோரின் பின் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லமும் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த துயிலுமில்ல வளாகத்தில் தினமும் இராணுவத்தினர் காலையில் இராணுவ அணிவகுப்பு செய்கின்றனர். மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் இவற்றை தினமும் பார்த்து மனவேதனை அடைவதை அவதானிக்க முடிகின்றது. உலவியல் ரீதியாக அவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இராணுவத்தினரின் இச்செயற்பாடு மக்களிடமிருந்து அவர்களை...

யாழில் வன்முறைகளைக் கையில் எடுக்கும் மாணவர்கள்

ஒரு காலத்தில் கல்வியில் முன்னணியில் இருந்த யாழ் மாவட்டம், தற்போது எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது? என்பதே தற்போதைய சூழ்நிலையில் அனைவரதும் கேள்வியாக உள்ளது. அண்மையில் யாழ் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலையின் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் உச்சக் கட்டத்தை அடைந்து நீதிமன்ற வாசலையும் தட்டியுள்ளமை தான் பெற்றோர்களின் அண்மைய அதிர்ச்சிக்கு காரணம்....
Ad Widget

இலங்கையின் ஆறு பிரதேசங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவல்! – சிங்கள ஊடகம் பரபரப்புத் தகவல்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் இலங்கையின் ஆறு பிரதேசங்களில் ஊடுருவியுள்ளனர் என புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைத் தடைசெய்வதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைக் கைதுசெய்வதில் முட்டுக்கட்டைகள் உள்ளன என்று புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்னர்...

கேப்பாப்புலவு உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் 3 நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்கள் தங்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனக்கோரி வியாழக்கிழமை (24) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நேற்று சனிக்கிழமை (26) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற இந்த உண்ணாவிரதத்தை நிறைவு செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி...

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை; 10 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரில், இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மெத்திவ்ஸின் அதிரடி ஆட்டத்தால் தோல்வியின் விளிம்பிற்கே சென்ற இங்கிலாந்திடம் 10 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியை பறிகொடுத்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி...

வெளிவாரிப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினரால் வெளிவாரிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வணிக முதற்தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக இரண்டாம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக மூன்றாம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக நான்காம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக முதற்தேர்வு 2013 பழைய பாடத்திட்டம் மீள்பரீட்சை, வணிக மாணி...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது தாக்குதல்

பருத்தித்துறை, வியாபாரி மூலைப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் படுகாயங்களுக்குள்ளான மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். ராஜ் (வயது47), ராஜ் சரோஜினிதேவி (வயது 42), மற்றும் ராஜ் ரஞ்ஜித் (வயது 17) ஆகியோர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த நபர்களின்...

மூளைக்காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு

மூளைக்காய்சலினால் பாதிக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மாணவன், நேற்று வெள்ளிக்கிழமை (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இடைக்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் தர்சிகன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி இரவு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அவர் அச்சுவேலி பிரதேச...

உடைந்து போயுள்ள மனநிலையை சீர்திருத்தம் செய்ய வேண்டும்

வடக்கு மக்களின் மனநிலையில் நல்லாட்சியினை காணமுடியவில்லை அதற்காக நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட பொதுமக்களுக்கான யாழ் விடுமுறை விடுதி திறப்பு நிகழ்வு நேற்று யாழ் குறிகட்டுவான் வீதி அல்லைப்பிட்டி பகுதியில் யாழ் மாவட்ட...

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்: நமீதா

குஜராத் பெண்ணான நமீதா தெலுங்கு படம் மூலம் தமிழுக்கு வந்தார். எங்கள் அண்ணா முதல் படம். விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இங்கிலீஸ்காரன், சாணக்யா, ஏய், பம்பரகண்ணாலே, ஆணை, பச்சக்குதிர, வியாபாரி, நான் அவனில்லை, உள்பட பல படங்களில் நடித்தார். நமீதா படங்கள் அனைத்திலும் அவரது கவர்ச்சிதான் பிரதானமாக காட்டப்பட்டது. நடிப்பதற்கு வாய்ப்பளித்து எந்த...

ராகவா லாரன்சும் பாடகர் ஆனார்!! போட்டியும் அறிவிப்பு!

நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு நடன இயக்குனராகி, நடிகராகி, இயக்குனராகி, தயாரிப்பாளராகவும் ஆகியிருப்பவர் ராகவா லாரன்ஸ். சிறந்த சமூக சேவகர் என்பது இன்னொரு அடையாளம். தற்போது இன்னொரு புதிய அவதாரமாக பாடகர் ஆகியிருக்கிறார். அவர் தற்போது நடித்து வரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் “லோக்கல் மாஸ்...” என்ற குத்துப்பாடலை சுஜித்ராவுடன்...

விஜய்யை மிரட்டிய டைரக்டர் மகேந்திரன்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'தெறி'. இந்த படத்தில் போலீசாக நடித்துள்ள விஜய், குற்றவாளிகளை தேடி மூன்று மாநிலங்களுக்கு செல்கிறாராம். அப்போது ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு பெயருடன் ஒரு கெட்டப்பில் அவர் என்ட்ரி கொடுக்கிறாராம். ஆக, ஒரு போலீஸ் 3 கெட்டப்பில் நடித்துள்ள படம் தெறி. அதோடு, மூன்று கெட்டப்புகளிலும் வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்துள்ள...

மாதகலில் விசித்திர மீன் இனம்!

மாதகல் குசுமந்துறைக் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில் 17அடி நீளமான புதிய இன மீன் ஒன்று நேற்று அகப்பட்டது. இந்த மீன் இனம் தொடர்பில் சரியாக இனம் காணப்படவில்லை. இருப்பினும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். மாதகல், குசுமந்துறை கடற்பரப்பின் ஊடாகக் கடற்றொழில் புரியும் மீனவர் ஒருவரின்...

ISIS இன் புதிய வரைபடத்தில் இலங்கைக்கு இலக்கு!

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அண்மைய வரைபடத்தில் இலங்கையும் ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் தளமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக இன்றைய தேசிய சிங்கள நாளிதழொன்று அறிவித்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு நிலைமை, மோதல்கள் குறித்து ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனமான “சர்வதேச மோதல் நிலை தொடர்பான ஆய்வு நிலையம்” இறுதியாக மேற்கொண்ட ஆய்வில்...

அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது

அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என உறுதியளிக்கும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் “தயார் நிலை ஏற்பாடாக” (Standby Arrangement) கடன் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அரசு அறிவித்தது. இது தொடர்பாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில் பொது எதிர்கட்சி எனக்கூறிக்கொள்வோர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து மக்களை,...

முல்லைத்தீவில் காணாமற்போனோர் குறித்த சாட்சியங்கள் பதிவு!

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சாட்சியப் பதிவு விசாரணைகள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று காலை 9 மணிமுதல் இடம்பெற்ற இவ் விசாரணையில் 120 பேர் சாட்சியம் அளித்துடன், காணாமற்போனோர் குறித்து 23 புதிய பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. நான்கு பிரிவுகளாக இந்த விசாரணைகள் இடம்பெற்றன. இன்று...

ஆசிரியையை காணவில்லை

மட்டுவில் மத்தியைச் சேர்ந்த வைரமுத்து ஞானகௌரி (வயது 41) என்ற ஆசிரியையை, கடந்த 23ஆம் திகதி முதல் காணவில்லையென்று அவருடைய உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். புதன்கிழமை (23) கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர், வீடு திரும்பவில்லை என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் சந்திகளில் குவிவு வில்லைகள் பொருத்தப்படுகின்றன

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட வீதிச் சந்திகளில் மாநகர சபையால் குவிவு வில்லைகள் பொருத்தும் நடவடிக்கைகள் வியாழக்கிழமை (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். யாழ்ப்பாண வீதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வாகன சாரதிகள் அவதானிக்கும் வகையில் இந்தக் குவிவு வில்லைகள் பொருத்தப்படுகின்றன. கே.கே.எஸ் வீதியும் யாழ்ப்பாணம் இந்துக்...

கோட்ட, உதவி கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால், கோட்டக்கல்வி, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நல்லூர், கோப்பாய், வெலிஓயா ஆகிய கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை - 3 இலங்கை கல்வி நிர்வாக சேவை - 2 (பொது) ஆளணியைச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடம் இருந்தும்...

வடக்குக்கு 5 ஆயிரம் இராணுவம் காணும்: சுரேஸ்

இலங்கையில் 2 இலட்சம் இராணுவம் இருக்கின்ற நிலையில் அதில் 1½ இலட்சம் இராணுவம் வடக்கில் நிலைகொண்டுள்ளது. 20 ஆயிரம் இராணுவம் மட்டக்களப்பிலும், 30 ஆயிரம் இராணுவம் ஏனைய மாகாணங்களிலும் நிலைகொண்டுள்ளனர். வடக்குக்கு 5 ஆயிரம் இராணுவத்தினர் போதும்' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (25)...
Loading posts...

All posts loaded

No more posts