- Sunday
- September 14th, 2025

யாழ்ப்பாணம் - சென்னை இடையில் எதிர்வரும் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் விமானசேவை முன்னெடுக்கப்படும் என இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்திய பயண முகவர் சங்கத்தின் 67ஆவது மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் வெளியிட்டிருந்த செய்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்....

இளவாலை - பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நள்ளிரவு 12.30 மணியளவில் உறவினர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவர் இணைந்து ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதன்போது அவர்மீது கத்திக் குத்தும் நடாத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, படுகாயமடைந்த நபர் தெல்லிப்பழை...

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வடக்கு கிழக்கின் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக தலைவர்களுக்கும் – மக்களுக்கும் தெளிவுபடுத்த முன்வர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நெடுந்தீவு...

நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு பகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பெரிய பராக்களும் ஒரு சின்ன பராவும் 82 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் 49 உம 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு ஒன்றும், 6 ஆர்...

யாழ்ப்பாணத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வடக்கு - தெற்கு என்ற பாகுபாடு இன்றி அரசாங்கம் முன்னெடுக்கும் குளோபல் ஃபேர்-2023 எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில்...

வாக்னர் கூலிப்படைத் தலைவரை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் குழுவினர் திடீரென புடினுக்கே எதிராக திரும்பிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜூன் மாதம் 29ஆம் திகதி, புடின், வாக்னர் கூலிப்படைத் தலைவரான பிரிகோஜினை சந்தித்ததாக கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்...

யாழ்.மாவட்டத்தில் தனியார் கல்விநிலையங்களை ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடும் தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பாக வேறெந்த அமைப்புக்களும் தன்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். தனியார் கல்வி நிறுவனங்களை ஞாயிற்றுக்கிழமை இயக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை மறுத்து...

7நிமிடம் 48செக்கன்களில், 1550கிலோகிராம் எடை கொண்ட வாகன ஊர்தியை 400மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59வயதான செ.திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தென்மராட்சி-மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக...

டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக் ஊடாக சீதுவை பகுதியை சேர்ந்த இளைஞனுடன் காதல் வசப்பட்டுள்ளார். அந்நிலையில் , பாடசாலை கல்வியை கைவிட்டு , வீட்டை விட்டு வெளியேறி சீதுவைக்கு...

வெளிநாட்டிற்குச் செல்வோருக்குப் போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர் ஒருவர் வைத்திருந்த சாரதி அனுமதிப் பத்திரம் போலியானது எனப் பொலிஸாரினால் கண்டறியப்பட்டு அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து...

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் நேற்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் மணிக்கு 100kmph வேகத்தில் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் வவுனியா – .அனுராதபுரம் வரையில்...

முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் நுழைந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்தமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கதுருவெலயிலிருந்து...

உக்ரைனின் துப்பாக்கி சுடும் வீரர் ஒருவரால் 5,900 அடி தொலைவில் இருந்து ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் பேய் படையின் ஆல்ஃபா என அறியப்படும் உக்ரைன் துப்பாக்கி வீரர் ஒருவரால் பக்மூத் நகரத்தில் வைத்து ரஷ்ய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ஃபாவால் 5,900 அடி தொலைவில் இருந்து கொல்லப்பட்டவர் பிராந்திய படைகளின் துணைத்தளபதி எனவும்...

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பாக உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் காணாமல் போனவரின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு...

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியிலும், சாதாரணத் தரப் பரீட்சைகள் 2024 ஆம் முதல் காலாண்டிலும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

வடக்கில் சீனித் தொழிற்சாலை அமைப்பது என்பது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபிவிருத்தி என்ற பெயரால் நிரந்தரமாகவே கையகப்படுத்தும் ஒரு தந்திரமுமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். வவுனியாவில் சீனித்தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்; தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்டபாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின்...

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தமிழர் பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றினால், மேலும் பல மனித புதைக்குழிகளை கண்டறிய முடியும் என்றும் இவர்கள் தெரிவித்தனர். மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர்...

ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக் பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் 4700 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வுகள் அப்பிரதேசங்களில் நிலச்சரிவு அபாய நிலைமையை அதிகரித்துள்ளதாக அரச நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. அதிகரித்த நில அதிர்வுகள் மற்றும் எரிமலை சாம்பல் ஆகியவை எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அபாய நிலைமையை...

All posts loaded
No more posts