- Sunday
- September 14th, 2025

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்குக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பான விரிவான உரையாடல் இடம்பெற்றது என்று அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில்...

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் தாக்குதலுக்கு களமிறக்கப்பட்டுள்ள 20 ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா ஏவிய 20 ஈரானிய ட்ரோன்களே இவ்வாறு உக்ரைன் விமானப்படையினால் இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது மேலும் இரண்டு...

கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை அடுத்த வருடம் குறித்த நேரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக பரீட்சை காலங்களை திருத்தியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கணவன் உயிரிழந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் நேற்றைய தினம் (புதன் கிழமை) அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பளை இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி புஸ்பராணி என்ற 60 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது பிள்ளைகள் செட்டிக்குளம்...

பால்மா விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் ரூபாவின் ஸ்திரத்தன்மைக்கு அமைய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேவையான பால்மா கையிருப்பில் உள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதியின் பின்னர் செலவுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் எனவும்...

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழர் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டிய விடயங்கள் குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன....

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி வீடுகள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் பணியிடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக இராணுவம், பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து கடந்த 12ஆம் திகதி உத்தரவு கிடைக்கப்பெற்றிருந்தது. சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுரங்கம் தோண்டுவதற்கு ஏற்ற சூழல் உருவாகும் வரை இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுகள் முறையான நியமங்கள் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு...

முல்லைத்தீவில் வனவள திணைக்கள அதிகாரிகள், முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட பகுதியில் கொட்டில்களை அமைத்து மக்கள் குடியேறியுள்ளனர். இந்நிலையில்...

ரஷ்யா- உக்ரைன் போரில் நேட்டோ மீதான உக்ரைனின் ஒற்றுமைத்தன்மை குறைந்துவிடும் என புடின் நினைத்தது தவறானது என பைடன் தெரிவித்துள்ளார். லிதுவேனியாவின்- வில்னியஸ் நகரில் இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,"போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் நேட்டோ மற்றும் உக்ரைனுக்கு இடையிலான உறவு நீங்கி விடும் என ரஷ்யா ஜனாதிபதி...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை...

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு அமைய அகழப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என...

மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன், சிறிதரன், வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அப்பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில்...

ஒருவருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பிரச்சினையொன்றுக்குப் பழிதீர்க்கும் விதமாக மூவர் மீது வாள்வெட்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர், வலந்தலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் இளைஞன் ஒருவருக்கும் இடையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப் பகுதியில் எரிபொருள் நிரப்புவது தொடர்பில் மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதலை...

2033 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக பரீட்சையை நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஓகஸ்ட்...

கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக டெய்லிமோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். எனக்கு மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது எந்த தரப்பும் அது குறித்து எந்ததகவலையும் வழங்கவில்லை என...

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்காக மேற்கொள்ளப்படவுள்ள காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுப்பதற்கு அனைவரையும் இன்றைய தினம் (12.07.2023) மண்டைதீவில் அணிதிரளுமாறு யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வேலணைப் பிரதேச...

உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய கடற்படை தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய கடற்படை தளபதியான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky, 42) என்பவரே வெளியில் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஸ்டானிஸ்லா கொலை தொடர்பில் நீல நிற தொப்பி அணிந்த நடுத்தர வயது ஆண் ஒருவரை தேடிவருவதாக ரஷ்ய...

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவரது கருத்தை கண்டித்து சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக வடக்கு கிழக்கில் நீதிமன்ற...

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் பிரதமருக்கான இக்கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கையளித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு...

All posts loaded
No more posts