யாழில் சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை!!

நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுவன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். மாவட்டம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ஒருவனே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவனின் தாயின் கணவர் நெருப்பால் சுட்டதில் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. கை, முகம் எனப் பல இடங்களிலும்...

உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம்! ஜேர்மன் வெளியிட்டுள்ள தகவல்

உக்ரைனுடனான ரஷ்ய போரை நிறுத்துவதற்காக புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லை என்று ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான ரஷ்ய போரை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஜேர்மன் வெளியுறவு அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,“பேச்சுவார்த்தைக்கு அடிப்படையே இல்லை. பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்தான். ஆனால்...
Ad Widget

அச்சுவேலியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தற்கொலைக்கு முயற்சி செய்த நபர்!!

அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெற்றோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக தெரிவித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்கு தானே பெற்றோலை ஊற்றி தற்கொலை செய்ய...

யாழில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் நிகழ்வு

ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் இன்று காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலைக்கு மாலை மற்றும் சால்வை...

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய...

யாழ் – சென்னை நாளாந்த விமான சேவைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சேவையானது யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும் என்றும் வடக்கின் பொருளாதாரத்தை உயர்ந்தும் என்றும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய கால அட்டவணையின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து விமானம் 11.30 மணியளவில்...

29000 ஏக்கர் நிலத்தை மீண்டும் முல்லைத்தீவு மக்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாகாண காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வனத்துறை, மகாவெலிய மற்றும் தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவு மக்களுக்குச் சொந்தமான சுமார் 100,000 ஏக்கர் காணிகளை எல்லைகளை பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளதாக மாகாண...

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரதேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாயாகவும் 2 ஆம் வகுப்பு – 2500 ரூபாயாகவும் 3 ஆம் வகுப்பு – 1800 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யாழ் தேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 2800...

வீடியோ கேம்களில் ஈடுபாடு : தவறான முடிவெடுத்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாண பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளான். யாழ்ப்பாணம் வண்ணார் பண்னை பகுதியை சேர்ந்த புஸ்பராஜா எழில்காந்த் (வயது 22) எனும் மாணவனே உயிர் மாய்த்துள்ளான். தனது வீட்டில் கடந்த சனிக்கிழமை யாரும் இல்லாத வேளை உயிரை மாய்த்துள்ளதாகவும், குறித்த இளைஞன் தனிமையை அதிகம் நாடி, வீடியோ கேம்களில்...

Online கடவுச்சீட்டுக் குறித்து வௌியான அதிரடித் தகவல்!!

கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாகக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் 30 நாட்களில் 29,578 பேர் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர் எனவும் அவர்களில் 5,294 பேர் ஒரு நாள் சேவைக்கும், 24,285 பேர் பொது...

யாழில் விமர்சையாக திறந்துவைக்கப்பட்ட சங்கிலியன் தோரண வாயில்!!

யாழ்ப்பாணத்தில் நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுநேற்றையதினம் (16.07.2023) இடம்பெற்றுள்ளது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டது. மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அந்த மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய...

ரஷ்யாவிலிருந்து உக்ரைனுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

உக்ரைனை தாக்கி அழிக்கும் அளவிற்கு ரஷ்யாவில் கிளஸ்டர் குண்டுகள் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சியொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளை ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக பயன்படுத்தினால், ரஷ்யாவுக்கு சொந்தமான கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்த ரஷ்யாவுக்கு உரிமை உண்டு...

சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு!! ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா!!

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்து கொள்ளவுள்ளார்....

குருந்தூர்மலையில் பரபரப்பு!!

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏற்படுத்தி பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை அங்கு பொங்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, பொலிசார் சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்துள்ளனர்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக எதிர்வரும் 20 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் குறித்து தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறைசார் தரப்பினருடனான விசேட கலந்துரையாடல் நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. இதில்,...

யாழில் மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது

யாழில் இலவச வகுப்புக்களை நடத்தி வந்த, நபரொருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததையடுத்து, குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நேற்றைய தினம் (புதன்கிழமை) தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றினை நடத்தியுள்ளனர். இதன்போது 13...

35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர்!!

பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார்...

வடக்கின் இ.போ.ச. சாலைகளுக்கு புதிய பேரூந்துகள் கையளிப்பு!

இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன . நேற்று யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன . இதன்போது, 04 பேரூந்துகள் வவுனியாவிற்கும், 4 பேரூந்துகள் கிளிநொச்சிக்கும், 4 பேரூந்துகள் மன்னாருக்கும் ,3 பேரூந்துகள்...

மனித புதைகுழி தமிழர்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: கஜேந்திரன்

1984 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிகின்ற வரைக்கும் இலங்கை இராணுவத்தினருடைய முழுமையான ஆக்கிரமிப்பு பிரதேசமாக இருந்த கொக்குத்தொடுவாய் பகுதியிலே பாரிய மனிதப் புதைகுழி கண்டெடுக்கப்பட்டதென்பது தமிழ் மக்கள் மத்தியிலேயே பாரிய அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு...

இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க சென்ற பெண் மரணம்!!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு மசென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியை சேர்ந்த ஜே. தேவரஞ்சன் (வயது 31) எனும் இளைஞன் நேற்றுமுன் தினம் இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை...
Loading posts...

All posts loaded

No more posts