இளைஞர்கள் கடலில் மூழ்கி மாயம் : சோகத்தில் பெற்றோர் தற்கொலை

மட்டக்களப்பு – பாசிக்குடா கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில், சோகம் தாளாத பெற்றோர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நாம் பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, சண்முகம் சுரேஸ்குமார் (வயது 22) மற்றும் சண்முகம் சதீஸ்குமார் (வயது – 18) ஆகிய இளைஞர்கள் பாசிக்குடா...

யாழ்ப்பாணத்தில் பழையபொருட்களைக் கொள்வனவு செய்வோர் கஞ்சா விற்பனையில்

யாழ்ப்பாணத்தில் பழைய பொருட்களைக் கொள்வனவு செய்வதாக தெரிவித்து வாகனங்களில் வருபவர்கள் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொது மக்களும் சிவில் அமைப்புக்களும் குற்றம்சுமத்தியுள்ளன. யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த...
Ad Widget

”எழுந்து நிற்போம்” வைத்தியர் சங்க கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் ஆதரவு

போதையால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வடமாகாணத்தை மீட்டெடுத்து எம் உறவுகளை பாதுகாக்க அனைவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம திகதி ஒரு மணிநேர கவனயீர்ப்பில் ஈடுபடுவோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது. யாழப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எழுந்து நிற்போம்...

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு ஆனந்தசங்கரி அஞ்சலி செலுத்தினார்!

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபனின் திருவுருவப் படத்துக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்...

வடக்கு மக்கள் காவல்துறையினருடன் இணைந்து செயறப்படவேண்டும்!

வடக்கு மக்கள் காவல்துறையினருடன் இணைந்து செயற்படவேண்டுமென காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்த தெரிவித்துள்ளார். ஒட்டுசுட்டானில் காவல்துறை நிலையம் ஒன்றைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறையினருக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் ஐக்கியமேற்படுத்தப்படுவது அவசியமானது எனவும் தெரிவித்த அவர், இந்தப் புதிய காவல்துறை நிலையத்தை மக்கள் பேணிப் பாதுகாப்பார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். கைதுசெய்து நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமெனவும், பலகாலங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணைகள் யாவும் தமிழர் பிரதேசத்து நீதிமன்றங்களுக்கு மாற்றப்படவேண்டுமெனவும் வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும்...

தண்ணீர் குடிக்கப் போன ராம்குமார் மின்வயரைக் கடித்து தற்கொலை-சிறை வார்டன்

தண்ணீர் குடிக்கப் போவதாக கூறிவிட்டு போன ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தன்னுடைய உடம்பில் மின்சாரத்தைப் பாய்ச்சிக்கொண்டு உயிரிழந்து விட்டதாக சம்பவம் நடந்த போது உடனிருந்த சிறைக்காவலர் கூறியதாக புழல் சிறை வார்டன் கூறியுள்ளார். மின்சாரம் தாக்கியதில் ராம்குமார் தூக்கி வீசப்பட்டதால் உடனிருந்த கைதிகள் யாரும் ராம்குமாரை காப்பற்றவில்லை என்றும் அவர் சிறைவார்டன் தெரிவித்துள்ளார். சுவாதி...

யாழ்ப்பாணத்தில் அடிப்படை வசதிகளுடனான வீடுகளை அமைக்க திட்டம்

யாழ்ப்பாணத்தில் வீட்டுத் தேவையைக் கொண்டுள்ள அனைவருக்கும் அடிப்படை வசதிகளுடனான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பவுள்ளன. உலக வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மூலோபாய வழிமுறையிலான நகரஅபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதற்பான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைவாக உத்தேச புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான வீட்டுப் பயனாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கை யாழ் மாவட்ட செயலகத்தின் செயலாளரின் வழிகாட்டலில் பிரதேச செயலாளர்கள் காணி...

பாராலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர் பஹ்மான் பரிதாபமாக பலி

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு பாராலிம்பிக் வீரர் சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத் (48) திடீர் மாரடைப்பால் காலமானார். ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் கரடுமுரடானதும், வளைவுகள் நிறைந்ததுமான மலைப்பாதையில் நேற்று சைக்கிள் ஓட்டும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு பாராலிம்பிக் வீரர்...

பொலிஸ் மா அதிபரின் வாக்குறுதிக்கு அமைய ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் பலியான இளைஞரின் சடலம், கம்பளை உதவி நீதிபதியின் விசாரணைக்கு பின்னர், பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்திய பீடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு இடையில் நேற்று பகல் 12.00 மணிமுதல் 3.00 மணிவரை சுமார் 1000 தோட்ட தொழிலாளர்கள் கண்டி - நுவரெலியா பிரதான பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்சினைக்கு காரணமாக...

வைத்தியர்களுக்குள்ள சலுகையை தமக்கும் வழங்குமாறு கல்விசாரா ஊழியர்கள் கோரிக்கை

பிரபல பாடசாலைகளில் வைத்தியர்களின் பிள்ளைகளை உள்வாங்கும் சலுகை வழங்கப்பட்டிருப்பது போல, கல்வி துறைகளில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. கல்வித் துறைக்குள் பணியாற்றும் ஊழியர்களுக்கான சலுகைகளை கழித்து, வைத்தியர்களுக்கு மட்டும் அச் சலுகையை பெற்றுக் கொடுப்பது கவலையளிப்பதாக,...

நியூயோர்க்கை சென்றடைந்தார் ஜனாதிபதி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி எதிரவரும் 21ம் திகதி அங்கு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று ஆரம்பமாகும் ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரையாற்றுவதற்கு நாளை மறுதினம் நேரம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த...

பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் உதவித்தொகை வழங்கி வைப்பு

கிளிநொச்சி தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி உடனடி கொடுப்பனவாக 135 வர்த்தகர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டள்ளது. கிளிநொச்சி சந்தை கட்டத்தொகுதியில் வைத்து இக்கொடுப்பனவுகளை வடக்கு மாகாண முதலமைச்சர் வழங்கி வைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடக்கு...

சிக்குன்குனியா, ஸீகா குறித்து சிவப்பு எச்சரிக்கை!

ஸீகா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் குறித்து ஸ்ரீலங்காவில் சிவப்பு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய பகுதிகளில் இந்த நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிக்குன்குனியா இந்திய தலைநகர் புதுடில்லியில் வேகமாக பரவிவருவதுடன், ஸீகா வைரஸ் சிங்கப்பூரில் அதிகமாக பரவி வருவதாகவும் தற்போது தாய்லாந்திலும் அதன்...

தலைவர் பிரபாகரனின் வித்துடலை தகனம் செய்தோம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வித்துடலை நாம் எரித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டோம். அப்போது நான் அங்கிருந்து நினைவுப்பொருளாக அவரது அடையாள அட்டையினை எடுத்து வைத்திருந்தேன். அதனை என்னுடனேயே வைத்துள்ளேன். இறுதிக்கட்டப் போரில் தாம்தான் விடுதலைப்புலிகளின் தலைவரைக் கொன்றது எனக் கூறிக்கொள்ளும் 53ஆவது பிரிகேட்டிற்குத் தலைமைதாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு மேற்கண்டவாறு...

யாழ்ப்பாணத்தில் 1000 கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது!

யாழ்ப்பாணத்தில் பாரியளவிலான சிறைச்சாலையொன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிறைச்சாலை சுமார் 1000 கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதகற்கட்டப் பணிகள் நிறைவடைந்துவிட்டதெனவும், இதன் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக சுமார் 623 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார்...

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச விசாரணையாளர்களை கொண்டுவருவோம் : சுமந்திரன் உறுதி!

போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளுக்கே நாட்டில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகின்றதெனவும், நாங்கள் சர்வதேச விசாரணையாளர்களையே கொண்டுவரவுள்ளோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று (சனிக்கிழமை) முல்லைத்தீவில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், நாங்கள் சர்வதேச நீதிபதிகள் தொடர்பாகக் கதைப்பதற்கு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலகவேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 2016ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும் எனச் சொன்னார். 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் அவர் டேவிட் கமரூன் செய்ததைப்போல் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு அதில் அங்கம்...

நியுயோர்க்கில் பாரிய வெடிப்பு: 29 பேர் காயம்

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பில், குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்சியா மாவட்டத்தின் மன்ஹற்றன் பகுதியிலேயே, இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கே பாரிய சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நியூஜெர்சியில் குழாய் குண்டு வெடித்து சில மணித்தியாலங்களிலேயே, மேற்குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும், எந்தவொரு காயங்களும், உயிருக்கு...

இனவாதம் இல்லாத இலங்கையினை உருவாக்குவதே எமது இலக்கு யாழில் பிரதமர்!!

இனவாதம் இல்லாத இலங்கையினை உருவாக்க வேண்டுமென்பதே எமது இலக்கு என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடத்தினை நேற்று (17) திறந்து வைத்த பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரசியல் ரீதியான பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பது அடுத்த...
Loading posts...

All posts loaded

No more posts