- Saturday
- November 7th, 2026
'ஆண்டவன் கட்டளை' படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரித்திகா சிங் கூறுகையில் ''ஆண்டவன் கட்டளை படத்தில் ரிப்போர்ட்டராக நடிக்க பல சேனல்களைப் பார்த்து அவர்களுடைய நடையுடை பாவனைகளை கற்றுக்கொண்டேன். எனக்கும் இப்போது கேள்வி கேட்க தெரியும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவிடம் பேட்டி எடுக்க விரும்புகிறேன். இன்னும் சரியாக தமிழ்பேச வரவில்லை. இப்போது மற்றவர்கள்...
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான சக்தி மகன் மனோஜ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே தீக்குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்கு சென்ற குறித்த ஈழ அகதி ஏலச்சீட்டு நடத்தி...
மாணவர்கள் பல்வேறு மொழிகளிலே பாண்டித்தியம் பெற்றிருத்தல் இன்றியமையாததாகும். தாய்மொழி தமிழை போற்றிப்பாதுகாக்க வேன்டியது எமது கடமை. அதே சமயம் எமது சகோதர மொழியாகிய சிங்களத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். இது மக்களிடையே கருத்துக்களை வெளியிடவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் உறுதுணையாக இருக்கும் என பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் யாழ். இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு...
சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற பிரதேசசபைக் கூடத்தில் தனியார் தொலைக்காட்சி சேவையைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் நிகழ்வைப் பதிவு செய்துகொண்டிருந்த சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசாவும், எம்.ஏ.சுமந்திரனும் ஊடகவியலாளர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியே அனுப்பியுள்ளனர். இதற்கு மக்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளர். தகவல் உரிமைச்சட்டம் நல்லாட்சி அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளபோதிலும், கூட்டத்தில் ஊடகவியலாளர்களை அனுமதிக்காமை...
முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு வருகைதந்த அதிகாரிகள் அமைச்சர்களைத் திசைதிருப்பு முகமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று புதுக்குடியிருப்பு,கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகங்களுக்கு முன்பு நேற்று (19.09.2016) நடத்தப்பட்டுள்ளது. வடக்குமாகாண முதலமைச்சருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக பின்னர் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. குறிப்பாக மீள் குடியேற்ற அமைச்சரால்...
கடந்த வெள்ளிக்கிழமை தீயினால் எரிந்து நாசமான கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டை பெற்றுத் தர முயற்சி எடுக்கப்படும் என தீயினால் எரிந்து நாசமான கிளிநொச்சி பொதுச்சந்தையை நேற்று (திங்கட்கிழமை) பார்வையிட்ட பின்னர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். நேற்றய தினம் நாடளுமன்ற உறுப்பினரான சிறீதரன், உள்ளுராட்சி உதவி ஆனையாளர் பிரபாகரன், பிரதேச சபைச்செயலாளர்...
தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் தான் தீர்வு என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் யாழில் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய சகவாழ்வு மேம்பாட்டிற்கான ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வு நேற்று (திங்கட்கிழமை) யாழ்....
'முன்னைய அரசியல் தலைமைகள், தமது அரசியல் சுயலாபங்களுக்கும் தமது நாடாளுமன்ற இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், அப்பாவிச் சிங்கள மக்களை பிழையான வழிகளில் நெறிப்படுத்தி, அவர்களிடையே பொய்ப்பிரசாரங்களையும் இனவாதத்தைத் தூண்டக்கூடிய பிரசாரங்களையும் முடுக்கிவிட்டமையால் தான், இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின' என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்றுத் திங்கட்கிழமை (19) கூறினார். 'இந்த...
சீகா வைரஸ் காய்ச்சல், இதுவரை இலங்கையில் எவருக்கும் தொற்றவில்லை என்று தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பீ.ஜி.மஹிபால ஹேரத், சிலாபம் - நல்லரசன்கட்டு பகுதியில் உயிரிழந்த இரு மூதாட்டிகளும், ஒருவகை வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளனர் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். சுகாதாரக் கல்விப் பணிமனையில், நேற்றுத் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர்...
இந்திய மத்திய அரசின் உயர் அதிகாரி திடீரென்று இராமேஸ்வரம் அருகே கடல் ஆய்வு நடத்தியது, குளச்சல் துறைமுகத்திற்கு சாதகமாக அமையும் வகையில் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டமா, அல்லது தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே கடலில் 23 கி.மீ. பாலம் அமைக்கும் திட்ட ஆய்வா என்பது மர்மமாக உள்ளது. இராமேஸ்வரம் தீவு அருகே கடந்த வாரம் கடற்கரை...
கடவத்தை - ரன்முத்துகல பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அணி வீரர் நுவன் குலசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரது வாகனம் மோதியதில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் செயலகத்திற்கு முன்னாள் அமைதியான முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பரிவிற்குட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறும், காணி பிணக்குகளிற்கு தீர்வை தருமாறு கோரியும், மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று...
சீகா வைரஸ் (Zika) தொற்றுள்ள நாடுகளுக்கு பயணிப்பதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சீகா வைரஸ் மற்றும் சிக்கன்கூனியா போன்ற தொற்றுக்களைத் தடுக்கும் நோக்குடன் இலங்கையின் பிரதான விமான நிலையங்கள் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியன அதி அவதானத்திற்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேஷியா, பிரேசில் மற்றும் தென் அமெரிக்கா ஆகிய...
தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித். தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு இவருக்கான ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. பல்வேறு முன்னணி நடிகைகளும் இவரோடு ஜோடி போட்டு நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான புருனே நாட்டின் இளவரசி அஜித்தை பார்க்க...
என்னை அறிந்தால், இருமுகன் படங்களுக்கு பிறகு எஸ்-3, சாமி-2, குமரி கண்டம், ஏ.ஆர்.முருகதாஸ் படம் என பல படங்களுக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இதில் தற்போது சூர்யாவின் எஸ்-3 படத்திற்கான இசைப்பணிகளில் தீவிரமடைந்திருக்கிறார். இதற்கு முன்பு சூர்யா நடித்த, காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், மாற்றான் என பல படங்களில் சூப்பர்...
அழகிய தமிழ்மகன் படத்திலேயே விஜய்யை ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான கோணங்களில் வெளிப்படுத்திய பரதன், இப்போது பைரவா படத்திலும் இரண்டுவிதமான விஜய்யை இயக்கிக்கொண்டிருக்கிறார். மேலும், இந்த படத்தில் காதல், காமெடி, செண்டிமென்ட், ஆக்சன் என அனைத்து விசயங்களையும் கலந்து வைத்திருக்கிறார். அதோடு குழந்தைகளுடன் விஜய் பாடும் ஒரு பாடலும் உள்ளதாம். மேலும், ஆக்சன் காட்சிகளில் தற்போது...
சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ள ராம்குமாரின் வக்கீல் ராம்ராஜ், சிறை போலீஸ்காரருடன் பேசிய பேச்சில் ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று அந்த போலீஸ்காரர் கூறியது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைத் தரப்பு எதையாவது மறைக்க முயல்கிறதா என்ற சந்தேகமும் இதனால் எழுந்துள்ளது. நேற்று நாலரை மணியளவில் ராம்குமார்...
விடுதலைப் புலிகள்’ இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை, 28 ஆண்டுகளுக்குப்பிறகு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். செப்டம்பர் 15-ம் தேதி, திருச்சியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், வைகோ அந்தக் கடிதத்தை வெளியிட்டது ஏன்? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் தொடங்கி வெகுஜன மக்கள் வரை புரியாத புதிராக...
விச ஊசி விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் மூன்றாம் வாரத்தில் 22 பேர் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள், வடமாகாண வைத்தியசாலைகளில்...
Loading posts...
All posts loaded
No more posts
