- Saturday
- September 13th, 2025

பரந்தனில் வெடிபொருட்கள் மீட்பில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள கிணறொன்றைத் துப்புரவு செய்யும் பொழுது பல்வேறு வகையான வெடி பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் காணி உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று குறித்த கிணற்றில் இருந்து...

யாழின் வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று (21.08.2023) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினமே சட்டவைத்திய...

உக்ரைன் - ரஷ்யா போரில் ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகளும் அழிந்துவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'ரஷ்யாவுக்கு இந்தப் போராட்டத்தில் நிலைத்திருப்பதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் காணவில்லை. போரின் முடிவு...

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்குமென யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்றைய தினம்(21) ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று...

வட மாகாணத்தில் ஒருவருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு வருட காலப்பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்களும் தாதியர்களும் நாட்டை விட்டு...

தழிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போலியான நாடகங்களை முன்னெடுத்துள்ளதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தழிழ் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது போன்ற...

நெதர்லாந்தில் இருந்து F-16 போர் விமானங்களை பெற்றுக்கொள்வதற்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவை சந்தித்துள்ளார். உக்ரைன் இராணுவத்திற்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிநவீன போர் விமானம் அமெரிக்காவின் ஒப்புதலுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறித்த சந்திப்பின்போது ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் உக்ரைனுக்கு F -16 விமானங்களை வழங்க...

சகல வரிகளையும் கழித்த பின்னர் சீமெந்தின் விற்பனை விலை, துறைமுகத்தில் இறக்கப்படும் சீமெந்தின் விலையை விட 700 ரூபாய் அதிகம் என்று அந்த பொது நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறும் நிதி அமைச்சு மற்றும், நகர அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அத்துடன்,...

வடமராட்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நீச்சல் போட்டியொன்றில் 40 வயதான பெண்ணொருவர் வெற்றிவாகை சூடியுள்ளார். வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது. பருத்தித்துறை- தென்னியம்மன்முனையில் இருந்து இன்பசிட்டி வரை குறித்த நீச்சல் போட்டியானது இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் முதலாம் ,...

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டி வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது நீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது....

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் பாதுகாப்பற்ற நீர் நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) விளையாட்டு போட்டிக்காக வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு இந்த மாணவர்கள் சென்றிருந்த நிலையில்,இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என்றும் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேலதிக விசாரணைகளை...

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வ பணிகளுக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் 21.8.2023 அன்று திட்டமிடப்பட்டிருந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரி.பிரதீபன்...

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் இன்றையதினம்(18.08.2023)பொங்கல் வழிபாடு முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு சிங்கள் மக்கள்,பெளத்த பிக்குகள் மற்றும் சில அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கான ஆயத்தங்கள் செய்யப்படும் நிலையில் நேற்றையதினமே (17) குறித்த பகுதிக்கு...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய இரகசியங்கள் பல அறிந்த இராணுவ தளபதி மர்மமான முறையில் திடீரென்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடினுக்கு சொந்தமான 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அரண்மனை தொடர்பிலான இரகசியங்களை அறிந்த இராணுவ தளபதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவினை சேர்ந்த 69 வயதான ஜெனடி லோபிரேவ் என்ற இராணுவ...

காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ஆனாலும் குறித்த பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை. அதனால்...

முல்லைத்தீவு- குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பெளத்த இந்து...

கர்ப்பப்பை குழாயில் கரு தங்கியதில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த, மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான அனுசன் துளசி (வயது 30) என்பவரே புதன்கிழமை (16) உயிரிழந்துள்ளார். திடீர் வயிற்று வலியினால் துடித்த அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது , அவர் ஏற்கனவே...

நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி முதல் காணவில்லை என தெரிவித்து நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கடந்த 11 ஆம் திகதி வீட்டிலிருந்து மதிய உணவினை உட்கொண்டு விட்டு சென்ற பின்னரே குறித்த 27 வயதான தம்பிப்பிள்ளை விதுசன் எனும்...

பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு நாளை ( 18 ) அணிதிரண்டு வருமாறு முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தில் நாளை இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியிடப்பட்டுள்ள செய்தி நகைப்புக்குரியது என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத், இதனை ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டார். அந்த செய்தியில், தனது கவனத்தை ஈர்த்துக்கொள்ளும் வகையில்...

All posts loaded
No more posts