மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா – தனுஷ்!! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா மற்றும் தனுஷ் இருவரை மையமாக கொண்ட ஒரு வலுவான கதையை இயக்குநர் மணிரத்னம் உருவாக்கயுள்ளதாகவும், அதில் கதாநாயகர்களாக சூர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரையும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக...

கேப்பாபிலவு நிலமீட்பு போராட்டக் குழுவின் கொட்டகைக்குத் தீ வைப்பு!!

முல்லைத்தீவு கேப்பாபிலவில் சொந்த நிலங்களை மீட்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் போராட்டக் கொட்டகை இன்று (02.11.2026) அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேப்பாபிலவு மக்கள் தங்கள் பூர்வீகக் காணிகளை இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கக் கோரி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்....
Ad Widget

வட மாகாண சபையின் புதிய வேலைவாய்ப்புகள்!!

வட மாகாண சபையின் கீழ் வெற்றிடமாகவுள்ள பதவி நிலைகளுக்கான திறந்த போட்டிப் பரீட்சைகள் மற்றும் திறன் தடைப் பரீட்சைகளுக்கான (Efficiency Bar Examinations) அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1. வட மாகாண தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் (Grade III of Class 3) பதவி நிலை வெற்றிடம்: வட மாகாண தகவல் மற்றும் தொடர்பாடல்...

பொலிஸாரைக் கண்டதும் கிணற்றில் வாளை வீசிய இளைஞன் கைது!

அனலைதீவு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டிற்கு அதிரடிச் சோதனைக்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த பொலிஸாரைக் கண்டதும், வீட்டிலிருந்த இளைஞன் தனது உடமையில் இருந்த வாள் ஒன்றினை வீட்டின் கிணற்றினுள் வீசியுள்ளார். இதனை...

இந்தியாவுடனான ரி20 இல் நியூஸிலாந்து 7 விக்கெட்களால் அபார வெற்றி!!

ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற ஐந்தாவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட்களால் நியூஸிலாந்து மிக இலகுவாக வெற்றிகொண்டது. கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் முறையே 4 விக்கெட்களாலும், 4 விக்கெட்களாலும் 6 விக்கெட்களாலும் வெற்றியீட்டிய இந்தியா 3 -...

லிட்ரோ எரிவாயு நிறுவனம் முகவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

எரிவாயுவைப் பதுக்குதல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறுதல் அல்லது அங்கீகரிக்கப்படாத கூடுதல் கட்டணங்களை வசூலித்தல் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்குமாறு அனைத்து லிட்ரோ முகவர்களுக்கும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டு இதை வலியுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் புறக்கணிக்கும் அல்லது மீறும் முகவர்கள் மீது...

ஜெர்மனியில் மாபெரும் கொள்ளை சம்பவமாக மாறிய Gen z போராட்டம்

வாழ்வாதாரச் செலவு உயர்வு மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஜெர்மனியில் இடம்பெற்ற போராட்டங்களின் போது வன்முறை வெடித்ததில், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. ஜெர்மனியின் நிதி மையமான பிராங்பர்ட் (Frankfurt) உட்பட பெர்லின், கொலோன் மற்றும் ஹம்பர்க் ஆகிய முக்கிய நகரங்களில் இந்தக் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன. "Gen Z regelt" (Gen...

அமெரிக்காவில் விமானம் விழுந்து விபத்து: பயணித்த அனைவரும் பலி!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கிரெஸ்ட்ஹேவன் (Cresthaven) குடியிருப்புப் பகுதியில் 9 பேருடன் சென்ற 'லியர்ஜெட் 60' (Learjet 60) ரக சிறிய ரக விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கிழக்கு நேரப்படி பிற்பகல் 12.50 அளவில் (1750 GMT) இந்த...

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது!!

எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிடுகையில், எரிபொருள் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணத் திருத்தத்தை மேற்கொள்வதற்குரிய விலை சூத்திரத்தின்படி, விலை அதிகரிப்பு 4 சதவீதம் என்ற எல்லையை எட்டவில்லை...

எரிபொருட்கள் விலை அதிகரிப்பு!!

நேற்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலை விபரங்கள் வருமாறு: ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 397ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது...

முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த திட்டம்!

உயர்ந்துள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப, முச்சக்கர வண்டிகளுக்கான சவாரி கட்டணங்களையும் உயர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது முதல் கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 110 ரூபாய் கட்டணம் 120 ரூபாயாகவும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் 90 ரூபாய் கட்டணம் 100...

வலி. வடக்கில் ஒரே நாளில் இடம்பெற்ற சோகம்: விபத்துகள் மற்றும் திடீர் மரணங்களால் ஐவர் பலி!

வலி. வடக்குப் பகுதியில் இடம்பெற்ற வெவ்வேறு சோகச் சம்பவங்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். விபத்துகள், திடீர் மரணங்கள் மற்றும் நீரில் மூழ்கியமை போன்ற காரணங்களால் இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. தெல்லிப்பளை, அலுக்கைச் சந்தியில் மூன்று பேருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது வீதியின்...