- Saturday
- August 29th, 2026
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும். அதன்படி, கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ. வரை அதிகரிக்கும்...
இந்தியாவின் மேற்கு வங்க அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் ஒரே வாரத்தில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரே நாளில் 10...
கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலிச்சோலை, பாசிக்குடா பகுதியில் கைப்பேசி வெடித்ததில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞர் கைப்பேசியை மின்னேற்றத்தில் (Charging) இணைத்துவிட்டு, அதனை நெஞ்சில் வைத்தவாறு உறங்கியதாகவும், இதன்போது மின்சாரம் தடைப்பட்டு, சிறிது நேரத்தின் பின்னர் மின்சாரம் மீண்டும் வழமைக்குத்...
இந்தியாவில் பெற்றோர் ஐபோன் வாங்கித் தர மறுத்ததால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் மலையிலிருந்து குதித்துத் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அவரைக் காப்பாற்றச் சென்ற பெற்றோர் அவருடன் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் கூறி செய்தித் தளங்கள் மற்றுமு் சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது எனத் தகவல்களைச் சரிபார்க்கும் அமைப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஊடகங்கள்...
கொழும்புத்துறை இறங்குதுறையை அகலப்படுத்தும் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். கடற்றொழிலாளர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு, இறங்குதுறை வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய பணிநிலை மற்றும் எதிர்கால கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம்...
கயாடு லோஹர் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் மிக நெருக்கமாக நடித்து Immortal படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. தனியாக ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வரும் கயாடு லோஹர் போன் செய்து ஜிவி பிரகாஷை ரூம் மேட் ஆக தங்க சொல்கிறார். அவரும் அழகான பெண்ணை பார்த்ததும் மயங்கி வந்து தங்குகறார். ஒரு கட்டத்தில் அவர்கள் பழகி...
திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்...
இன்று (ஆகஸ்ட் 28) நண்பகல் 12:11 மணிக்கு கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நகர்கோவில் ஆகிய இடங்களுக்கு மேலாகச் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...
பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயில் பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், தடங்கல் நிமித்தம், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகவே பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டிய அரசுப் பொருளான கைவிலங்கை, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் தனது ஹெல்மெட் திருடு போகாமல் இருக்க பைக்கில் பூட்டி வைத்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த காவல் நிலைய வளாகத்திலேயே காவலரின் பொருளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையையும், அரசுப் பொருளைச் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய துறை சார்ந்த...
கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான போராட்டத்தை வெளிப்படுத்திப் போட்டியைச் சமநிலையில் முடித்துக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் இமாலய பின்னடைவைச் சந்தித்த போதிலும், இலங்கை வீரர்களின் விடாமுயற்சியால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம்...
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காகச் சென்றிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள், உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வட்டவளை பொலிஸாரின் துரிதத் தலையீட்டினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் 7ஆம் மற்றும் 8ஆம் தரங்களில்...
சூரிச் டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில், இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இப்போட்டியில் அவர் 92.07 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது. 1,400க்கும் மேற்பட்டோர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய பனி மற்றும் இடிபாடுகளின் பெருக்கே இந்த பேரிடருக்குக் காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது....
