நேபாள-திபெத் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 392 ஆக உயர்வு

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது.

1,400க்கும் மேற்பட்டோர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய பனி மற்றும் இடிபாடுகளின் பெருக்கே இந்த பேரிடருக்குக் காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

அந்தப் பெருக்கு காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய சேறு கலந்த வெள்ள நீர், நகரங்கள் மற்றும் கிராமங்கள் ஊடாகப் பாய்ந்து வீடுகள், பாலங்கள் மற்றும் அணைகளை அழித்துள்ளதுடன், வாகனங்களையும் அடித்துச் சென்றுள்ளது.

காணாமல் போனவர்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், இமயமலைப் பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் மற்றும் திபெத்திலுள்ள புனித கைலாஷ மலையை தரிசிக்கச் சென்ற அதிகளவிலான இந்து பக்தர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை 389 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 910 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புகொள்ள முடியாதவர்களில் 517 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts