2026/2027 கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி உயர்தர (Advanced Level Vocational Stream) – தரம் 12 சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, 2026/2027 கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி உயர்தரப் பிரிவு (Advanced Level Vocational Stream) தரம் 12 இற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தற்போது கோரியுள்ளது. 2025 (2026) ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய 3 ஆண்டுகளுக்குள் க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சைக்கு தோற்றிய எந்த மாணவரும், தமது பிரதேசத்தில்...

“ஜெய்ப்பூர் நிறுவனம் தொடர்ந்து இயங்க கொடையாளர்கள் உதவ வேண்டும்!” – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை

அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கிப்போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயற்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் தங்களின் உதவிகளை வழங்க முன்வர வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்...
Ad Widget

அரச ஊழியர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தடை!

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்களால் அரச ஊழியர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, நீதிபதிகள் உட்பட இராணுவ மற்றும் சிவில் நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் கடந்த 16 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ஸ்மார்ட்போன்...

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சூரிய மின் படலத்தை துண்டிக்க வேண்டுகோள்!!

மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, நாளை (27) முதல் 29ஆம் திகதி வரை,கூரைகளின் மீது பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளைக் கொண்ட நுகர்வோர், அவற்றைச் செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,...

மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க தாய்லாந்து புறப்பட்ட இலங்கை அணி!!

தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற மிஸ்டர் யுனிவர்ஸ் (Mr. Universe 2026) சர்வதேச உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக 12 பேர் கொண்ட இலங்கை உடற்கட்டமைப்பு அணி நேற்று (25) நாட்டை விட்டு புறப்பட்டது. இப்போட்டி ஜூன் 27 முதல் 29 வரை 40 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது....

மூன்று பெண்களுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு!! ஒப்புக்கொண்டார் பில் கேட்ஸ்

சிறுமிகள், இளம்பெண்களை கடத்தி பணம் படைத்த பெரும் புள்ளிகளுக்கு அனுப்பிய மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் தொழிலதிபர் பில் கேட்ஸ். எப்ஸ்டீன் உடனும் பல பெண்களுடனும் கேட்ஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. பில் கேட்ஸ்க்கு இருந்த பல தகாத உறவுகள்...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை சந்தித்தார் சிறீதரன் எம்பி!

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பில், ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்கான பயணத்தில் கடந்த காலங்களிலும் தற்போதைய காலகட்டத்திலும் ஆற்றப்பட்டு வரும் முக்கியமான பங்களிப்புகளுக்காக...

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பை கண்டித்து தென்மராட்சியில் முழு கடையடைப்பு!

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞா.கிசோரை வடமாகாண ஆளுநர், உப தவிசாளரின் பதவியை...

வரி செலுத்துநர் அடையாள இலக்கத்திற்கு காலவரையறை விதிக்கப்படவில்லை ; பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை!!

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக காலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தினமும் நிற்பது தொடர்பாக, அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று வியாழக்கிழமை (25) அவ் அலுவலகத்தின் பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு...

நாட்டில் டெங்கு மரணம் 30 ஆக உயர்வு!!

உயிர்க்கொல்லி டெங்கு நோயின் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளபடி, இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 49,000 ஆக பதிவாகியுள்ளது. தற்போது நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதாக சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்....

நீதிமன்ற வளாக இரட்டைப் படுகொலை சூத்திரதாரி விமான நிலையத்தில் கைது!!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதன் பின்னர், நேற்று...

உருவாகிறது ‘பாகுபலி 3’?

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015 இல் வெளியான அதிபிரமாண்ட வரலாற்று புனைவு திரைப்படம் பாகுபலி. பாகுபலியாக பிரபாஸ், பல்வால் தேவனாக ராணா டகுபதி, தேவசேனாவாக அனுஷ்கா ஷெட்டி, அவந்திகாவாக தமன்னா, சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன், கட்டப்பாவாக சத்யராஜ் என படத்தில் நடித்த ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மறக்க முடியாதவையாக மாறின. தமிழ், தெலுங்கு, இந்தி என...

வெனிசுலா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 235 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கராகஸ் (Caracas) மற்றும் லா குவைரா (La Guaira) மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது அங்குள்ள இடிபாடுகளுக்குள் மீட்புப் பணியாளர்கள் தேடுதலில்...

பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி துருக்கி வெற்றி!!

2026 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் 'டி' பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி துருக்கி த்ரில் வெற்றியீட்டியுள்ளது. காலை 7.30 மணிக்கு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஒஸ்டன் ட்ரஸ்டி...

வடசென்னை 2-ல் தனுஷ் – சிம்பு மோதலா?

தமிழ் சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 'வடசென்னை 2' திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனின் படைப்பில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 'அரசன்' என்ற பெயரில் உருவாகி வரும்...

போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்!!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் இன்று நடைபெற்ற ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தைத் தமிழக முதல்வர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அத்தோடு, தனது சொந்தக் கையெழுத்து மூலம் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுப் பலகையில் கையொப்பமிட்டு இந்த...

விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்க தமிழக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்துள்ளார். தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதைப் போல, ஆட்சிக்கு வந்த 43 வது நாளில் அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் அவர் வௌியிட்டுள்ளார். இதன்படி தமிழகத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், ஒரு கிராம் நிறையுடைய...

பௌத்தத்தைப் பாதுகாக்க சீர்திருத்தங்கள் அவசியம்!!

இலங்கையில் பௌத்த சமயத்தைப் பாதுகாக்க அவசர சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார். பிக்குகள் தொடர்பாக தொடர்ச்சியாக வெளியாகும் ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுகள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மத நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை பாதித்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார். விசேட காணொளி அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், சமீப காலமாக சில பௌத்த...

போருக்கு முற்பட்ட நிலைமைக்கு மீண்டும் திரும்பும் எரிபொருள் நிலை!!

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போருக்கு முந்தைய நிலைக்கு எண்ணெய் விலை சரிவு கண்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே புரிந்துணர்பு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டு எண்ணெய் விநியோகத்தின் தீர்க்கமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை படிப்படியாக இயல்புநிலைக்கு மாறிவரும் நிலையிலேயே இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச குறியீடான பிரெண்ட் ரக மசகு எண்ணெய்...

இந்தியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய ரஷ்யா திட்டம்!!

முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்களின் விளைவாக இந்தியாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்கள், பெற்றோல் மற்றும் ஜெட் எரிபொருள் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்த ரஷ்யப் பிரதிப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், எரிபொருள் இறக்குமதி...
Loading posts...

All posts loaded

No more posts