பௌத்தத்தைப் பாதுகாக்க சீர்திருத்தங்கள் அவசியம்!!

இலங்கையில் பௌத்த சமயத்தைப் பாதுகாக்க அவசர சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

பிக்குகள் தொடர்பாக தொடர்ச்சியாக வெளியாகும் ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுகள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மத நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை பாதித்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.

விசேட காணொளி அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், சமீப காலமாக சில பௌத்த துறவிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட சம்பவங்களும், பிரபல விகாராதிபதியாக இருந்த ஒருவர் இரண்டு ஆண்டுகளாக சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

Related Posts