Ad Widget

யாழில் பிரதேசசபை உறுப்பினர், மனைவி மீது வாள்வெட்டு!!

வலி கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணி அளவில் கோப்பாய் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. பிரதேச சபை உறுப்பினரும் அவரது மனைவியும்...

யாழ்.நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசெளரியப்படுத்தும் யாசகர்கள்!!

யாழ்.நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசெளரியப்படுத்தும் யாசகர்கள், ஊதுபத்தி விற்க்கும் பெண்கள் தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். யாழ்.நகருக்கு தினசரி பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை தினசரி அதகரித்து வருவதாக வர்த்தகர்கள், பொதுமக்கள்...
Ad Widget

வடமராட்சி கிழக்கில் போஷாக்கின்மையால் சிசு உயிரிழப்பு!!

யாழ்.வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம்...

சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல்போன சிறுமிகள் கண்டுபிடிப்பு!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல்போன நிலையில் அவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காணாமல்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் எனவும், இந்த சிறுமிகள் பருத்தித்துறை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் வசிப்பதற்கு விருப்பமில்லை என...

200 ரூபாவாகும் டொலரின் பெறுமதி! ஜனாதிபதி நடவடிக்கை!!

டொலரின் பெறுமதியை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருதது தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், அடுத்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதியை 200 ரூபாவாக கொண்டுவர ஜனாதிபதி...

உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து

இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் ஹோட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தீ விபத்தினை தடுக்க...

உரும்பிராய் சிறுவர் இல்லத்தில் இருந்த மூன்று சிறுமிகள் மாயம்!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சிறுமிகள் முல்லைத்தீவு மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் வசிப்பதாகவும், இந்த சிறுவர் இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக...

யாழில் சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடி!

சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோருக்கு அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களை இலக்கு வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது. புதிதாக வந்த சமுர்த்தி...

யாழில் மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கும்பல்!

பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் கும்பலை...

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமி எச்சரிக்கை மக்கள் வசிக்காத சிறு சிறு தீவு பகுதிகளில் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது...

விரைவில் யாழ் கொழும்பு விமானசேவை!!

யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கும் தமிழ் நாட்டிற்குமான சேவைகள் சிறப்பாக இடம்பெற்று வருகிறதாக யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார். இது குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின் இந்தியாவிலிருந்து பல்வேறு துறைசார்ந்த கலைஞர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்....

சரமாரியான வெள்ளை பாஸ்பரஸ் குண்டு தாக்குதலால் மிரண்டு போயுள்ள ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீது ரஷ்யா வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போர் தாக்குதல் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யா இடையிலான பதற்றம் தற்போது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பக்முட் நகரில் இருந்து அரை மணி நேரம் தொலைவில் இடைவிடாமல் சண்டை தொடர்ந்து நடைபெற்று...

ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை அடுத்து நாளை கைவிடப்படுகின்றது தொழிற்சங்க நடவடிக்கை !

ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை நாளை வியாழக்கிழமை காலை முதல் கைவிட தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் கவனத்தில் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் இன்று...

நாகர்கோவில் மேற்குப் பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு என்பன எரிந்துள்ளன. அதிகாலை 12.30 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நாகர் கோவில் பகுதியில் மயானம்...

விதிகளை மீறி தலைவராக முற்படும் ஆர்னோல்ட்!! யாழ் உதைபந்தாட்ட லீக் தடைசெய்யப்படலாம்?

யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட சங்கம் தடைசெய்யப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அப்படியான நிலைமை உருவாகினால், அடுத்த சில வருடங்களிற்கு யாழ் உதைபந்தாட்ட லீக்கிற்கு உட்பட்ட 33 கழகங்களும், எண்ணற்ற விளையாட்டு வீரர்களும் இருண்ட உதைபந்தாட்ட வாழ்க்கையை எதிர்கொள்ள நேரிடும். கடந்த 12ஆம் திகதி யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கின் தேர்தலில் ஏற்பட்ட குழப்பங்களையடுத்தே, இந்த விபரீதமான நிலைமை உருவாகியுள்ளது. கடந்த...

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழில் ஆர்ப்பாட்டம்!!

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை (15) யாழ்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சம்பள அதிகரிப்பை வழங்க கோரியும் வரி அறவீட்டினை நிறுத்த கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை தாங்கியவாறு 20000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மூன்றில்...

யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரும், பணியாற்றிய இளம்பெண்ணும் உயிரை மாய்ப்பு!!

யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை உயிரிமையாளர் ஒருவரும் குறித்த கடையில் பணியாற்றிய இளம் பெண் ஒருவரும் உயிரை மாய்த்துள்ளனர். நேற்று காலை யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். அதனை தொடர்ந்து நேற்று மதியம் குறித்த நகைக்கடை உரிமையாளரும் உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்த இருவரது சடலங்களும் யாழ்.போதனா...

வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கிய 47 தொழிற்சங்கங்கள்!!

பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண உயர்வு, வங்கி கடன், வட்டி அதிகரிப்பு, சம்பளத்திக்கான வரி விதிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள்,...

வல்லரசையே கதிகலங்க வைக்கும் உக்ரைன் போர் யுத்தி! மிரண்டு போயுள்ள ரஷ்யா

“கிழக்கு பகுதியை இழந்தது வேதனையளிக்கிறது, நாம் ரஷ்யாவின் ராணுவ சக்தியை அழிக்க வேண்டும், நாம் அதை அழிப்போம்.”என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா எல்லையை ஒட்டியுள்ள நகரங்களைப் பற்றிப் பேசிய போதே ஜெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,“நமக்கு எந்த வகையான எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதை எல்லைப் பகுதியிலுள்ள நகரங்களின் வெற்றியே தீர்மானிக்கிறது, அங்கு உக்ரேனியர்களின்...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!!

அத்தியாவசிய சேவைகளுக்கு என நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சரத்வத்தேச நாணய நிதியத்தின் உதவியும் விரைவில் கிடைக்கவுள்ள நிலையில்...
Loading posts...

All posts loaded

No more posts