- Sunday
- May 28th, 2023

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வாவின்...

கொடிகாமம் - மிருசுவில் கரம்பம் பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் வயது 43 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக...

சைவ மக்களுடைய உரிமையை இந்த அரசாங்கம் பாதுக்காக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி ஆலயப் பகுதி அழிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக காட்சியளிக்கிறது. சைவ மக்களுடைய...

போர்க்காலப் பகுதியில் தமிழ் - சிங்கள ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தின் செய்தியாளராக பணியாற்றிய ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, கைது செய்யப்பட்ட அவர், போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நோர்த்தம்டன்ஷெயார் (Northamptonshire) பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2000ஆம் ஆண்டு இலங்கையில் ஊடகவியலாளர்...

ரஷ்ய வாழ் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்திள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "அமெரிக்க குடியுரிமைப் பத்திரிக்கையாளரை கைது செய்த ரஷ்யாவின் அறிவிப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்தில்...

வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சரவணபவன் மற்றும் தமிழ் கட்சிகளின்...

பேருவளையில் இன்று (30) சிறியளவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் 3.7 ரிச்டர் அளவில் சிறியளவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தை...

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார். அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்மந்தமாக முறைப்பாடு...

யாழ்.பல்கலைகழகத்தை அண்மித்த பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த குறித்த பெண் நேற்றைய தினம் மாவட்ட குற்றச்சாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வியாபாரியிடம் போதைப் பொருள் வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளரும் நேற்றைய தினம் கைது...

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்றைய தினம்(புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையை அடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது. தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை...

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் இந்த தருணத்தில் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி பொருட்களின் விலைகளை திருத்தும் அளவுக்கு எரிபொருள் விலை குறைப்பு கணிசமானதாக இல்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிலுள்ள சைவசமையம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தாசபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) பிற்பகல் 4.00 மணிக்கு நல்லை ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு மேற்குறிப்பிட்ட அமைப்புக்களைச் சார்ந்த மூன்று பிரதிநிதிகளை தவறாது...

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டமானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை மீண்டும் இலங்கைக்கு வழங்கியிருப்பதுபோல் தெரிவதாக ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது. அண்மையகாலங்களில் நீராவியடி பிள்ளையார் கோயில், குருந்தூர்மலை சிவன்கோயில், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் என்பன உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் சைவசமய...

கிரிப்டோகரன்சியின் பயன்பாடு மற்றும் அதில் முதலீடு செய்வதன் அபாயம் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்துகிறது. கிரிப்டோகரன்சியின் பயன்பாடு சில தரப்பினரால் இலாபகரமான முதலீடாக விளம்பரப்படுத்தப்படுகிறது, மேலும் இதுபோன்ற முதலீடுகளால் மக்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. நிதி மோசடிகள் விரைவான வளர்ச்சியைக் காட்டுவதால், தங்கள்...

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்போருக்கு எதிராக ரஷ்யாவிலும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அலெக்சி மொஸ்கலியோவ் என்பவரின் மகள் மரியா, தனது பள்ளியில் ஒரு ஓவியத்தை வரைந்தாள். அதில் உக்ரைனிய கொடியுடன் நிற்கும்...

இன – மத ரீதியான அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர பேருந்து நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், “துஸ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தினை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக...

எரிபொருள் விலை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை...

ஏப்ரல் முதல் வாரத்தில் பால் மாவின் விலை மேலும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

All posts loaded
No more posts