- Saturday
- July 5th, 2025

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) வடக்கு, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில்...

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுள்ள பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பாணின்விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ரன்போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்தங்கேணியை சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் கஜானந்தன் (வயது 38) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சூரன் போர் திருவிழா இடம்பெற்றது....

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாம ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்தனர். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது. இதன்போது நீதி அமைச்சர்...

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று (ஞாயிற்க்கிழமை) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மாவீரர் நிகழ்வை முன்னிட்டு இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பெற்றோர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டுடிருந்தனர்.

இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற சிறீதரநின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா தெரிவித்துள்ளார். யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறிய இந்த விடயத்தினை நான் கட்சிக்குள்...

பாண் ஒன்றின் விலை இன்று (திங்கட்கிழமை) முதல் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையில் குறைக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமது நிர்வாக சபை கூடி இறுதி செய்யும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் போதிய அளவில் கிடைப்பதால் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தச்...

தேசிய ரீதியில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சார்பாக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்துகொண்டு, மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டார். 120...

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் மழை நிலைமை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்...

வடக்கு மாகாண சுகாதாரத்திணைக்களத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், தாதியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதாரப் பணியாளர்களின் மேலதிக நேரக்கொடுப்பனவு பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உரிய ஆளணி இல்லாத நிலையில், பணியாளர்கள் மேலதிக நேரக்கடமைகளின் ஊடாகவே வைத்தியசாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த நிலையில், மேலதிக நேரக்கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளமையால், வைத்தியசாலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளர்கள் நேரடியாக அசௌகரியங்களுக்கு...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வளர்ப்பு மகளாக பார்க்கப்படும் பிரபல மொடல் அழகி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்கோவில் அமைந்துள்ள அவரது குடியிருப்பை பொலிஸார் சோதனை மேற்கொண்ட நிலையில், அதற்கு சில மணி நேரங்களுககு முன்னர் தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்ய தொலைக்காட்சி நட்சத்திரமும் மொடலுமான 40 வயது Ksenia Sobchak விளாடிமிர் புடினுக்கு...

லங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் புதன்கிழமை (26) சட்டவிரோதமாக படகொன்றில் நுழைந்த 7 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, அப்பகுதியில் சுற்றுக்காவல் (ரோந்து)...

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான...

நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்ப குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்துச் சேவை பற்றி அறிமுகம் செய்யப்பட்டது. கொழும்பு கோட்டை, கொம்பனி தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி,...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று (27) வியாழக்கிழமை போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில்...

அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் பயின்ற பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது குறித்துநேற்று (வியாழக்கிழமை) பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப் பகுதியில், இந்திய...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனமடுவயில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நமது அமைப்பு நாட்டைப் பின்னுக்கு இழுக்கும் அமைப்பு அல்ல. தீ மூட்டுவது எளிது, ஆனால் அதை...

நாட்டில் எச்.ஐ.வி. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முதலிரு காலாண்டுகளுக்குள் 148 எயிட்ஸ் நோயாளர்களே இனங்காணப்பட்ட நிலையில், இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 342 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு மற்றும் கம்பஹா...

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் "அநேகமாக மிகவும் ஆபத்தான" தசாப்தத்தை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். இது தொடர்பில் மாஸ்கோவில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் உரையில் விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியுள்ளார். உலகின் தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையை "புரட்சிகரமானது" என்று அவர்...

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் பாணுக்குள் இருந்து மூன்று குண்டு ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று வியாழக்கிழமை, குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார். அந்த பாணை வீட்டே கொண்டு சென்று தமது சிறு பிள்ளைகளுக்கு வழங்கிய போதே, பாண் ஒன்றினுள் மூன்று குண்டு ஊசிகள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் அப்பகுதி...

All posts loaded
No more posts