Ad Widget

இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகளையும் அரச நியமனங்களில் உள்வாங்க தீர்மானம்!

அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் பயின்ற பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது குறித்துநேற்று (வியாழக்கிழமை) பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப் பகுதியில், இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று பட்டதாரிகளானவர்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

அவ்வாறானவர்கள் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற அரச சேவைக்கான பட்டதாரிகள் ஆட்சேர்ப்புகளின் போது, வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் உள்ளீர்ப்பதற்கு பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.

Related Posts