Ad Widget

உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பெக்கெட்டின் விலை 850 ரூபாயில் இருந்து 950 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோ பால் மா பெக்கெட்டின் புதிய விலை 2350 ரூபாவாகும். முன்னதாக ஒரு கிலோ பால் மா...

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நேற்று முன்தினம்(03) கடற்தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலாளர்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை தொடர் போராட்டத்தினை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தினால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில்...
Ad Widget

மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது – உறுதி செய்த அமெரிக்கா

மேற்குலகம் ஏற்கனவே ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப் போரில் சிக்கியுள்ளதாகவும் ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது என வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விளாடிமிர் புடினின் ரஷ்யா பற்றிய உலகின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவரான பியோனா ஹில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவிற்கும் உக்ரைனின் மேற்கத்திய நட்பு...

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் ரூபாய் 300 வரை குறைக்கப்படும்

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் 12 தசம் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் ரூபாய் 300 வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீண்டும் எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பா?

இன்றைய தினம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் இது குறித்த அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இலங்கை பெற்றோலிய விநியோகஸ்த்தர் சங்கத்தினர் இன்றைய தினம் சேவை புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர்....

அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி இரத்தைப் போன்று புனர்வாழ்வுப்பணியகச் சட்டமூலத்தையும் வாபஸ் பெறுங்கள் – ஜனாதிபதியிடம் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தல்

அதியுயர் பாதுகாப்பு வலயப்பிரகடன வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்ததைப்போன்று புனர்வாழ்வுப்பணியகச் சட்டமூலத்தையும் வாபஸ் பெறுமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தியுள்ளார். 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின்கீழ் கொழும்பிலுள்ள சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி கடந்த செப்டெம்பர் மாதம்...

யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் சில சேவைகள் அத்தியாவசியமானவையாக பிரகடனம் – வர்த்தமானி வெளியீடு

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமானவை என அடையாளம் காணப்பட்ட சில சேவைகளுக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம் தொடர்பான சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல...

எரிவாயு விலையில் மாற்றம் – லிட்ரோ நிறுவனம்

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய, ஒக்டோபர் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானம்?

2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்காக ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவிடவேண்டி உள்ளதாலும் காகித தட்டுப்பாடு காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்...

வெளிநாட்டு பெண்ணுடன் சேட்டை – வழங்கப்பட்ட தண்டனை!

காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப் பணம் விதித்ததுடன், ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது...

யாழ்.பல்கலை மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் தாக்குதல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே மாணவர்களை...

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் 43 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள்...

யாழ்.கோட்டை பகுதியில் கலாசார சீரழிவுகள்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணத்தின் புராதன சின்னமாக காணப்படும் யாழ்.கோட்டை பகுதியில் கலாசார சீரழிவுகளும், போதைப்பொருள் பாவனைகளும் இடம்பெறுவதாக பல்வேறு சமூக ஆர்வலர்களால் எமக்கு சுட்டிக் கட்டப்பட்டிருக்கின்றன என யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். கோட்டை பகுதியில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“பல்வேறு மட்டங்களில் இதன் பிரதிபலிப்பு...

யாழ்.பல்கலைக்கழகத்தில் மூவர் பணி இடை நீக்கம்!!

பரீட்சை கடமைகளில் இருந்து தவறிய குற்றச்சாட்டுக்காக விசாரணைகள் முடிவடையும் வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக துறைத்தலைவர், விரிவுரையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் பல்கலைக்கழக பேரவை பணி இடை நீக்கம் செய்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற பேரவை கூட்டத்தின் போதே மூவரையும் விசாரணைகள் முடிவடையும் வரை பணி இடை நீக்கம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த...

டீசல் விலையை ஏன் குறைக்க முடியவில்லை..! அதிகாரிகள் விளக்கம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் குறைந்துள்ள போதிலும் டீசலின் விலையை குறைக்க முடியாமைக்கான காரணங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட டீசலின் விலைகள் குறையாத காரணத்தினால் டீசல் விலையை குறைக்க முடியவில்லை என பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடருந்துகள், பேருந்துகள், தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ வாகனங்கள் போன்ற பல்வேறு தேவைகளுக்கு இவ்வாறு...

மரண விளையாட்டை உடன் நிறுத்துங்கள் – புடினிடம் போப் பிரான்சிஸ் அவசர கோரிக்கை

போரை உடன் நிறுத்துங்கள் என்று போப் பிரான்சிஸ் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். போர் தொடங்கிய பின்னர் போப் புட்டினிடம் இது போன்ற கோரிக்கையை வைப்பது இதுவே முதல் முறையாகும். வன்முறை மற்றும் மரணத்தின் இந்த ஆபத்தான சுழற்சியிலிருந்து வெளியேறுமாறு போப் அழைப்பு விடுக்கிறார். (உக்ரைன் போரை நிறுத்துமாறு புடினிடம் போப் பிரான்சிஸ்...