Ad Widget

உப தபாலதிபரின் கைப்பை அபகரிப்பு!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பெண் உப தபாலதிபர் தனது துவிச்சக்கர வண்டியின் முன் கூடையில் கைப்பையை வைத்தவாறு, மகனை பின்னுக்கு ஏற்றியவாறு வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள், துவிச்சக்கர வண்டியின் முன்...

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறந்து வைப்பு!

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றைய தினம்(வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ்.மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கடைத்தொகுதி யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் திறந்து வைக்கப்பட்டது. யாழ்.மாநகர சுகாதார குழுத்தலைவர் வ.பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், கல்வியங்காடு வர்த்தக...
Ad Widget

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும் – டக்ளஸ்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்தொழில் அமைச்சரின் ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக...

திருடப்போன வீட்டில் சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த திருடர்கள்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடுவதற்கு சென்ற திருடர்கள் அங்கு சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிற்கு திருடச் சென்ற திருடர்கள் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அங்கு சமைத்து சாப்பிட்டு, மது அருந்திவிட்டு போதையில் தூங்கிவிட்டனர். இந்நிலையில் நேற்றையதினம் காலை வீட்டின் உரிமையாளர்...

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலையில் கைகலப்பு!! 11 பேர் கைது!!

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளர் எதிர்ப்பை மீறியும் மேலதிகாரிக்கு அறிவிக்காமலும் திடீரென சாலைக்குச் சென்ற நிலையில் ஏற்பட்ட கைகலப்பினால் 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தனர். 11 பேரையும் கடுமையாக எச்சரித்த பருத்தித்துறை நீதிவான், 10 ஆயிரம் ரூபாய் காசுப் பிணை மற்றும் இரண்டு ஆள் பிணையில் விடுவிக்க கட்டளையிட்டார். இலங்கை...

அமெரிக்க துணைத் தூதர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அமெரிக்க துணை தூதர் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது தமிழ்த்...

தீவிரமடையும் போர் பதற்றம்! அணு ஆயுதப்படை ஒத்திகை ஆரம்பம்

ரஷ்ய இராணுவத்தின் அணு ஆயுத படைப்பிரிவினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை, கடல் பகுதியில் இருந்து ஏவுகணை செலுத்துவது உள்ளிட்ட போர் பயிற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதற்கு தயாராகும் வகையில் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக, ரஷ்யா கூறியுள்ளது. இந்தப்...

மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க திட்டம்!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 15ம் திகதி முதல், மின் கட்டணத்துக்காக, சமூக பாதுகாப்பு வரியாக, 2.56 ரூபாய் வசூலிக்கப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

தெல்லிப்பழையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி!

ல்லிப்பழையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது. தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிவடக்கு பிரதேச சபை தெல்லிப்பழை உப அலுவலகம் மற்றும் தெல்லிப்பழை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் காலை 9 மணியளவில் ஆரம்பித்த பேரணி தெல்லிப்பழைச் சந்தியில் நிறைவடைந்தது. போதைப்பொருள் பாவனையை ஒழித்தல், வாசிப்பு...

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எவருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இல்லை – சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லவென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முன்வந்து, அது தொடர்பில் யாராவது ஆட்சேபத்தை தெரிவித்தால்...

அருவருக்கதக்க வகையில் பொதியிடப்பட்ட பழப்புளித் தொகை மீட்பு!

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை விற்பனைக்கு தயார் செய்து கொண்டிருந்த போது பொதுச்சுகாதார பரிசோதகரால் கையும் மெய்யுமாக பிடிபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. யாழ் நகர பொதுச் சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய யாழ் மாநகர பொதுச்சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம்...

சகல மக்களுடைய ஆதரவோடு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் – சுமந்திரன்

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கான...

இரு இளைஞர்கள் மரணம்! உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்!!

யாழ். வடமராட்சி - புலோலி, சிங்கநகர் பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தோட்டக்கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவரது சடலத்தின் மீதும் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது மதுசாரம் மற்றும் ஐஸ்...

கொழும்பில் எதிர்வரும் 2ம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம்!

கொழும்பை முற்றுகையிட்டு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும், விரைவில் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய மகளிர் சக்தி, முன்னிலை சோசலிச கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உள்ளிட்ட பிரதான கட்சிகளும், சிவில்...

ரஷ்யா தொடர்பில் உக்ரைனின் உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!!

முக்கிய தெற்கு நகரமான கெர்சனுக்குள் ரஷ்யா மேலும் துருப்புக்களை அனுப்புவதாக உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடானோவ் எச்சரித்துள்ளார். சில ரஷ்ய பிரிவுகள் வெளியேறக்கூடும் என்று உக்ரைன் முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது கெர்சனை பாதுகாக்க தயாராகி இருக்கலாம் என்று புடானோவ் கூறியுள்ளார். அத்துடன், ரஷ்ய எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக மாயையை உருவாக்க முயற்சிக்கிறது என்று அவர்...

வீதியில் நடந்து சென்ற இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற பேருந்து!

இளவாலை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து சாரதியை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கீரிமலை பிரதான வீதியில் சேந்தான்குளம் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த நோபேர்ட் நிலக்ஸன் (வயது 19) எனும் இளைஞனை பின் புறமாக வந்த...

இணுவிலில் சிறுவன் மீது வாள் வெட்டு!

இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். உரும்பிராய் பகுதியை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் (வயது 17) எனும் சிறுவனே படுகாயமடைந்துள்ளான். குறித்த சிறுவன் பாடசாலை கல்வியை இடை நிறுத்தி , இணுவில் பகுதியில் உள்ள அலங்கார...

பொங்கலுக்கு மேலுமொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதி

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் போல் பொங்கலுக்கு மேலுமொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், “நானும், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும் கொழும்பில்...

பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா,...

யாழ்ப்பாணத்தில் இன்று பகுதி சூரிய கிரகணம் தெரியும்

இன்று (ஒக்டோபர் 25) செவ்வாய்க்கிழமை நிகழவிருக்கும் சூரிய கிரகணம் இலங்கையிலும் ஒரு பகுதி தெரியும் என்று அறிவிக்கபட்டுள்ளது. அரிய நிகழ்வைப் பார்க்கும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானியலாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரிய கிரகணம் யாழ்ப்பாணத்தில் மாலை 5.27 முதல் 5.46 வரை தெரியும். அதன்போது சூரியன் சந்திரனை 8.8 சதவீதம் மறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பில் பகுதி...
Loading posts...

All posts loaded

No more posts