Ad Widget

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலையில் கைகலப்பு!! 11 பேர் கைது!!

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளர் எதிர்ப்பை மீறியும் மேலதிகாரிக்கு அறிவிக்காமலும் திடீரென சாலைக்குச் சென்ற நிலையில் ஏற்பட்ட கைகலப்பினால் 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தனர்.

11 பேரையும் கடுமையாக எச்சரித்த பருத்தித்துறை நீதிவான், 10 ஆயிரம் ரூபாய் காசுப் பிணை மற்றும் இரண்டு ஆள் பிணையில் விடுவிக்க கட்டளையிட்டார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய அலுவலகரை பருத்தித்துறை சாலை முகாமையாளராக நியமிக்கப்பட்டார். எனினும் அவருக்கு பருத்தித்துறை சாலையின் பெரும்பாலான ஊழியர்கள் எதிர்ப்பு நீடித்தது.

அதனால் அவரை வடபிராந்திய போக்குவரத்து சபையின் அலுவலகமான கோண்டாவிலுக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் அவர் நேற்றைய தினம் கொழும்பு அலுவலகத்துக்கு அறிவித்துவிட்டு மூத்த வடபிராந்திய முகாமையாளருக்கு அறிவிக்காமலும் இன்று காலை பருத்தித்துறை சாலைக்கு சென்றுள்ளார். அதன்போது அங்கு எதிர்ப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்புநிலை கைகலப்பாக மாறிய நிலையில் முகாமையாளர் மற்றும் அவருக்கு ஆதாரவான நால்வர் மற்றும் எதிர்தரப்பானவர்கள் 7 பேர் என 11 பேர் பருத்தித்துறை பொலிஸார் கைது செய்தனர்.

11 பேரும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரணை செய்த நீதிவான், சந்தேக நபர்கள் 11 பேரையும் எச்சரித்ததுடன், பிணையில் விடுவிக்க கட்டளையிட்டார்.

Related Posts