மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி!!

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் அது சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின்...

அடுத்தவாரம் முதல் போக்குவரத்தில் ஈடுபடமாட்டாேம் – தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

பஸ் வண்டிகளுக்கு தேவையான உறுதிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு இடம்பெற்று வருவதால் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வை பெற்றுத்தராவிட்டால் பயணிகள் போக்குரவத்து சேவையில் இருந்து அடுத்த வாரம் முதல் ஒதுங்கிக்கொள்வோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ண தெரிவித்தார். கொழும்பில்...
Ad Widget

அதிகரிக்கப்படுகின்றது சீமெந்தின் விலை!

இலங்கையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை இன்று (செவ்வாய்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 50 கிலோ சீமெந்தின் புதிய விலையாக 2 ஆயிரத்து 750 ரூபா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (திங்கட்கிழமை)...

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு – சி.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவை வழங்குகின்ற போதிலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய...

பிரதமர் பதவி விலகமாட்டார் – பிரதமர் அலுவலகம்

ரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவிற்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர். SLPP கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை மற்றும் மதக் குழுக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ராஜினாமா செய்வது பற்றி விவாதிக்கவில்லை என்றும்,...

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைய வாய்ப்பு!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைய வாய்ப்புள்ளதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு எதிர்பார்ப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை ஆரம்பிக்க முடியும் என அதன் பேச்சாளரான...

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எழுத்து மூலம் ஜனாதிபதி உறுதி – அஸ்கிரிய பீடம்

நாட்டில் நிலவும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். மகா சங்கத்தினரிடம் எழுத்து மூலம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெதகம ஸ்ரீ தம்மானந்த தேரர் தெரிவித்ததார். நாட்டில் நிலவுகின்ற நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் துரிதமாக அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நான்கு...

வடமாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கானஅமெரிக்க தூதுவர் ஐீலி சுங் பல்வேறு தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) காலை வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ்ப்பாணத்திலுள்ள தற்போதைய நிலைமைகள் மற்றும் சமகாலப் போக்குகள்...

எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அதற்கு மறுப்புத்...

மேலும் 15 பேர் தமிழகத்தை சென்றடைந்தனர்!

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் ஏதிலிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை அவர்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அவர்களில் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். இந்தநிலையில், அவர்களை முகாம்களுக்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டம் : பரீட்சைகளை ஒத்திவைத்தது வடமாகாண கல்வித் திணைக்களம்

சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தீர்மானித்துள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நாளை சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் வடக்கு...

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, குறித்த மூன்று நாட்களிலும் A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில்...

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

மிருசுவில் பகுதியில் புகைரத பாதையை முடக்கி மக்கள் போராட்டம்!

கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பான கடவை அமைத்து தரக்கோரி மக்கள் போராட்டத்தை நடத்திவருகின்றனர். புகைரத பாதையின் குறுக்கே சிவப்பு துணியை கட்டியதுடன், ரயர்களை போட்டுக் கொழுத்தி பெரும் களேபரம் நடத்தியிருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்றிருந்த பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு ஒருவர்...

13 ஆம் திருத்தச் சட்டத்தினை விட்டுக்கொடுக்க முடியாது – டக்ளஸ்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாக இருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,...

நாட்டிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

நாட்டிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறும் நோக்கில், அத்தகைய தொழில்முயற்சியாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முதல் மூன்று தொழில்முனைவோருக்கு நேற்று(வியாழக்கிழமை)...

மிருசுவிலில் புகையிரதம் – சிறிய ரக லொறி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – சிறிய ரக லொறி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமைடந்துள்ளனர். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளுமே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளனர். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்திய சாலைக்கு...

பால் மாவின் விலை அடுத்து வாரம் மீண்டும் அதிகரிக்கும்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்து வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுமென பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த , குறித்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக பண்டார இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், பால்மாவின் கையிருப்பு குறைவடைந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பால் மா அடுத்த வாரம் கிடைக்கப்பெறுமெனவும் அவர்...

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு!!

இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர்...
Loading posts...

All posts loaded

No more posts