Ad Widget

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை மட்டுப்படுத்தப்பட்டது எரிபொருள் விநியோகம்?

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு உள்ளடங்களாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருக்கு தட்டுப்பாடு...

மக்கள் போராட்டத்தை பொறுக்கமுடியாமல் டக்ளஸ் பிதற்றுகிறார் – சுமந்திரன்

தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினருடன் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,அவர்...
Ad Widget

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை!!

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதற்கமைய, அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 500 பக்தர்களை அனுமதிப்பதாக...

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு நான்காவது தடுப்பூசி!!

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உயர்கல்விக்காக அவுஸ்ரேலியாவுக்கு சென்ற மாணவர் குழுவொன்றுக்கு கடந்த காலங்களில் இவ்வாறான விசேட தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட...

அடையாள பணிப்பகிஸ்கரிப்பிற்கு தயாராகின்றது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் எதிர்வரும் 21ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய சபை உறுப்பினர், மருத்துவர் பிரசாத் கொலம்பகே இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். சம்பளக் கொள்கையை மீறி தீர்மானம் எடுப்பதாகக் குற்றஞ்சாட்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

துணைவேந்தரின் உறுதிமொழியையடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, ,இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்களை திறந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்....

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக் கோரி யாழில் கையெழுத்து வேட்டை!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக் கோரி, நேற்றையதினம் யாழில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பேருந்து நிலைய வளாகத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து...

கோவிட்-19 நோயாளிகள் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு மட்டுமே மருந்தை உட்கொள்ள வேண்டும்!!

கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கோவிட்-19 நோயாளிகள் மருத்துவ ஆலோசனையைப் பெறாமல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மருத்துவ வல்லுநர் பிரியங்கர ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அறிகுறிகளின் தன்மை மற்றும்...

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான இறுதி விண்ணப்ப திகதி இன்று!!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி தினம் இன்றாகும். எனவே பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக இன்றைய தினத்துக்குள் சமர்ப்பிக்கலாம் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார். இதற்கு முன் இரண்டு முறை அதாவது பெப்ரவரி 3 மற்றும்...

வடக்குக்கான ரயில் சேவை ஆறு மாத காலத்துக்கு பாதிப்பு!!

அனுராதபுரம் -− ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் ஆறு மாத காலத்துக்கு அப்பகுதி மூடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்படி ரயில் பாதை புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் மார்ச் 05 ஆம் திகதிக்குப் பின்னர் வடக்குக்கான ரயில் சேவை கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரை...

யாழில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் – கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிடுகின்றனர். பொலிஸாருக்கு தகவல் வழங்கும் போதும் சம்பவ இடங்களுக்கு வருகை தர பொலிஸார் மறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி...

நோய் அறிகுறிகள் அற்ற நோயாளர்களிடமிருந்து வேகமாகப் பரவும் ஒமிக்ரோன் – மக்களுக்கு எச்சரிக்கை!

எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத ஒமிக்ரோன் நோயாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் பிறழ்விற்கான அறிகுறிகள் தென்படாத காரணத்தினால் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர்...

மின்சார கட்டணத்தை செலுத்த தவறியவர்களுக்கு 3 மாத கால அவகாசம்!!

மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ள நுகர்வோருக்கு, எஞ்சியுள்ள கட்டணத்தை செலுத்துவதற்காக 03 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று (வியாழக்கிழமை) பிறப்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய 03 மாதங்களுக்குள் தாமத கொடுப்பனவை செலுத்த தவறும் மின் பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும்...

யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதனால் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுவதாகவும் எனவே, அதனை அங்கீகரிக்குமாறும் கோரியே மாணவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழகம் ஊடாக தொழில்நுட்ப சவால்களை முறியடிப்போம்!! – ஜனாதிபதி

வவுனியா பல்கலைக்கழகம் ஊடாக தொழில்நுட்ப சவால்களை முறியடிப்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இது ஒரு விசேஷமான நாள். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த பிரதேசத்தினை கல்வி...

நல்லூர் பிரதேச சபையில் சோலைவரியில் விசேட விலைக் கழிப்புக் கொள்கை உருவாக்கம்!

நல்லூர் பிரதேசத்தில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு சோலைவரி அறவீட்டில் கொள்கை அடிப்படையில் விலைக்கழிவு கொடுப்பதற்கு நல்லூர் பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகள் மறந்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்நிலையில் பிரதேச சபையின் ஆளுகைக்குள்...

அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்து விநியோகம்!

அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் (ஒசுசல) ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துச் சுகாதார ஊழியர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு வருபவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை,...

இராணுவத்தினரால் கிளிநொச்சியில் சமூகப் பணிகள்!

இராணுவத்தினால் கண்ணன் தேவாலய வளாகத்தில் சனிக்கிழமை (05) கிளிநொச்சியை சேர்ந்த 42 வறிய குடும்பங்களுக்கு பிரதேசத்திலுள்ள நன்கொடையாளர்களின் உதவியுடன் உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி சஞ்சய வணசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 571, 572...

காரைநகர் – ஊர்காவற்றுறைபாதையின் இயந்திரம் பழுது!!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுப் பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பயணிகள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்றம், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். படகுப் பாதையின் வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையாலேயே சேவை...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை – கூட்டமைப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) வெளிவிவகார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்ட திருத்த சட்டமூல விவாதத்தில் அரசாங்கத் தரப்பின்...
Loading posts...

All posts loaded

No more posts