Ad Widget

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளியை காணவில்லை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். காய்ச்சல் காரணமாக கடந்த 16ஆம் திகதி சாவகச்சோரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தீவிரமடைந்ததால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு...

கடல் ஆய்வில் ஈடுபடும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் யாழில் திருட்டு!

கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வவருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து கடந்த 19 ஆம் திகதி சிறிய படகொன்றில் வந்துள்ளார். படகில் யாழ்ப்பாணம்...
Ad Widget

யாழில் வயோதிபப் பெண் அடித்துக்கொலை!!! நகைகளும் கொள்ளை!!!

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூவில் உள்ள வீடொன்றில் வசித்த வயோதிபப் பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்கிழமை நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) என்ற வயோதிபப் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை...

5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு விரைவில் தடுப்பூசி!!

5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நோய் நிலைமை மோசமடைந்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இதேவேளை கொவிட் வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம்...

எரிபொருள் விலை அதிகரிப்பு – முக்கிய பணிப்புரை விடுத்தார் ஜனாதிபதி!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார். நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். மேலும், எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வது குறித்து எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மனித புதைகுழி வழக்கில் ஆஜராக சட்டவாதிகளுக்கு அனுமதி!! ஊடகங்களும் செய்தியை சேகரிக்கலாம்!!

மன்னார் மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு வவுனியா மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன் ஊடகங்கள் செய்திசேரிப்பதற்கான அனுமதியினையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மன்னார் மனிதப்புதைகுழி விடயம் தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேலினால் வுனியா மேல்திமன்றில் மீளாய்வு மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு நேற்று(செவ்வாய்கிழமை) வழங்கப்பட்டது. குறித்த தீர்ப்பின் பின்னர் சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல்...

நாட்டில் இன்று 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாகவே மின்வெட்டுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு கூறியது. அதன்படி, இன்றைய தினம் A,B மற்றும் C ஆகிய...

பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை!!

பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின்...

வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்; மற்றொருவர் தலைமறைவு!!

உரும்பிராயில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 11.30 புகுந்த திருடர்கள் பல லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற நிலையில் சுமார் 12 மணித்தியாலங்களுக்குள் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையிலேயே ஒருவர் நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட...

அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும்!!

அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களும் பொது இடங்கள் என்பதால், அந்த இடங்களில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்...

தமிழக மீனவர்கள் 21 பேருக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறை!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 21 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை மீனவர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். இதனை அடுத்து...

புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதி பேருந்து சேவை ஒன்று ஆரம்பம்!

புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதி பேருந்து சேவை ஒன்று நேற்று (திங்கட்கிழமை) இலங்கை போக்குவரத்து சபையால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. வேலணை – புங்குடுதீவு – இறுவிட்டி பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாகத்தினருடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக நேற்றையதினம் புதி பேருந்து சேவை...

யாழில்.கூலிக்கு யாசகம் பெற்றவர்கள் கைது!

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் நேற்றையதினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டனர். இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும்...

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரங்களில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்துவதை மாற்றியமைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது. அதற்கமைய, இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை இலகுபடுத்தும்...

இலங்கை இன்னும் முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே உள்ளது – சுகாதார அதிகாரிகள்

இலங்கை இன்னும் முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே உரிய வகையில் முகக்கவசம் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் 60 முதல் 70 வயதிற்கு இடைப்பட்ட 65 சதவீதமானவர்கள் எந்தவொரு...

டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது. தற்போது நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தப்படும் காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக 24 மணித்தியாலங்களுக்கு மேல் நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியரின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 9 ஆயிரத்து 609...

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று காலை 8.30 மணி முதல் இரவு 5.30 மணி வரையான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின்...

யாழ் மாவட்டத்தில் அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது கிளை!!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க வெளியீட்டு பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் காலை 10 மணியளவில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டது. அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது மாவட்ட அலுவலகமாக இவ் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அமைவதுடன் இதற்கு முன்னர் கண்டி, காலி, அனுராதபுரம், வவுனியா,பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில்...

வட மாகாணத்தி மலேரியா தொற்று பரவும் அபாயம்!!

வட மாகாணத்தில் தற்பொழுது மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நான்கு வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு நோயாளரை அடையாளம் காண்பதன் மூலம் அது ஆயிரம் நோயாளர்களின் ஆரம்பமாக அமையும் என்று சுகாதார அமைச்சின் மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரசாத் ரணவீர...

இன்று முதல் மின்வெட்டு – வெளியானது திடீர் அறிவிப்பு!

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் இன்று முதல் அமுலாகும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின்...
Loading posts...

All posts loaded

No more posts