Ad Widget

நாட்டில் மீண்டும் ஆயிரத்தினைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் மேலும் ஆயிரத்து 156 பேருக்கு நேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 13 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறித்த எண்ணிக்கை...

கொரோனா மற்றும் டெங்குக்கு நடுவில் இலங்கையில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்

கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு கூடுதலாக, தற்போது நாட்டில் கண்டறியப்படாத வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. எனவே, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன பொதுமக்களை கேட்டுக்கொண்டார். டெங்கு காய்ச்சல் பரவுவது நாட்டில்...
Ad Widget

எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக முதல்வர் அழைப்பு – சிவாஜிலிங்கம்

எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக இலட்சக்கணக்கான கடற்றொழில் உபகரணங்களை மாத்திரமன்றி உயிரிழப்புக்களும்...

கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு – சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்ததாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற காலை உணவு சந்திப்பில் பேராசிரியர் பீரிஸ் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார் என அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜனாதிபதியை சந்திக்க கலந்துரையாட...

இலங்கையில் மீண்டும் முடக்கம்? – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசியை வலுப்படுத்த அரசாங்கம் அதிகபட்ச முயற்சியை எடுக்காவிட்டால், நாட்டை மற்றொரு முடக்கத்தை நோக்கி நகர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் மற்றொரு கொரோனா அலையின் பரவலைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை அந்த சங்கம் வலியுறுத்துகிறது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுக்குழு...

இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கு நஸ்டஈடுகளை வழங்க நடவடிக்கை!

அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கும் உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் நஸ்டஈடுகளை வழங்குவதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் மருதங்கேணி பிரதேச செயலகத்தை வழி மறித்து இன்று...

நாட்டில் அடுத்த கொவிட் அலை உருவாகியுள்ளது – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் நிலைமை தீவிரமாக அதிகரித்துச் செல்கிறது. சமூகத்தில் அறிகுறிகளின்றி பெருமளவான தொற்றாளர்கள் காணப்படுகின்றனர். நாட்டில் அடுத்த கொவிட் அலை உருவாகியுள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். எனவே தற்போது சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகக் கடைபிடிக்காவிட்டால் பாரதூரமான நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள்...

அதிக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மேலதிக வரி!

2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மேலதிக வரி விதிக்கும் சட்டமூலம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அனுமதி கோரி நிதி அமைச்சரினால் அமைச்சரவை பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று (01) காலை வழங்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் இன்று தெரிவித்தார்....

நாட்டில் மீண்டும் ஆயிரத்தினைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் நேற்று(செவ்வாய்கிழமை) மேலும் ஆயிரத்து 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 12 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், தற்போது 18 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகளில் அல்லது வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின்...

அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீண்ட வார இறுதியில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவல் வீதத்தில் உள்ளதா இல்லையா என்ற கேள்விக்கு, ‘சமூக பரவல்’ என்ற வார்த்தையின்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக மொனராகலை-சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி, என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மொனராகலை மரக்கலையை சேர்ந்த தில்காந்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை மேற்கொண்டார். பின்னர், அதே பல்கலைக்கழகத்தில்...

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின்போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின்போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இம்மாதம் 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை நடைபெறும் என பாடசாலை விவகார மேலதிகச் செயலாளர் இ.டபிள்யு.எல்.கே.எகொடவெல தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அந்த காலப்பகுதியில் ஆரம்பப் பிரிவுகளுக்கு...

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக பலாலி மீனவர்களும் போராட்டத்தில்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள வடமராட்சி மீனவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ்ப்பாணம் – பலாலி, வலளாய் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் குறித்த போராட்டத்தால் பருத்தித்துறை – பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாகவுள்ள தாளையடி வீதியை...

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

மூன்று நாள் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார். இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை...

நாட்டில் 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா!

நாட்டில் 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (திங்கட்கிழமை1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், குடும்பநல பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்தார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீன்பிடி விசைப்படகுகளை நடுக்கடலில் சுற்றிவளைத்த இலங்கை மீனவர்கள் – 21 தமிழக மீனவர்கள் கைது!

தமிழக மீன்பிடி விசைப்படகுகளை நடுக்கடலில் வடமராட்சி மீனவர்கள் சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்ததோடு, இதன்போது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி வந்துள்ள தமிழக மீனவர்கள் படகுகளை...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை – நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது. அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லையெனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

கொரோனாவால் மேலும் 21 பேர் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்து 82 பேருக்கு தொற்று!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 11 ஆயிரத்து 185ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 432 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,...