Ad Widget

நாட்டில் மீண்டும் ஆயிரத்தினைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் மேலும் ஆயிரத்து 156 பேருக்கு நேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 13 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குறித்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கான மேலும் 19 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை 15 ஆயிரத்து 492 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 471 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 79 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts