Ad Widget

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் அறிவிப்பு

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள், இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளன. போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்கி அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்தநிலையிலேயே, புதிய விலைகளை போத்தல் குடிநீர் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய போத்தல் குடிநீர் 500 மில்லி லீற்றருக்கான விலை 50 ரூபாயாகவும் ஒரு லீற்றருக்கான விலை 70...

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் பிணை!

குண்டுகளை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) பிணை வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 5 ஆம் திகதி புளியங்குளம் பொலிஸாரால் கிளைமோர் குண்டை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பெண்கள் மற்றும்...
Ad Widget

தென்மராட்சி, வரணியில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயம்!

தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கொட்டனால் தாக்கப்பட்டு இன்னொருவருமாக இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி...

தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் போராட்டம் 2ஆவது நாளாகவும் முன்னெடுப்பு!

தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் 2ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இன்றைய தினம் கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த துணை வைத்திய சேவை ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து...

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி 2 படகுகளில் நுழைந்த 21 தமிழக மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் சுற்றி வளைத்து தடுத்து வைத்திருந்தனர். வடமராட்சி மீனவர்களிடமிருந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பொறுப்பெடுத்து, தமிழக மீனவர்களை கைது செய்தனர். அன்றைய தினம்...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் திடீர் எழுச்சி காரணமாக மருத்துவமனைகளில் இடவசதி மற்றும் படுக்கைகள் இல்லாமல் இயங்குகின்றன என பொதுச் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது என்று அவர் இன்று ஊடகமொன்றுக்கு...

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்!! கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்!!

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான புதிய சீர்திருத்தத்தை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் நாங்கள் மாத்திரமல்ல தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளும் அதனை எதிர்க்கின்றனர். இந்த பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று கையெழுத்துப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

யாழ். பல்கலை மாணவிகள் இருவருக்கு இடையில் மோதல்! மாணவி ஒருவர் வைத்தியசாலையில்!!

யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் நேற்றைய தினம் மதியம் மோதிக்கொண்டுள்ளனர். அதில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திருநெல்வேலி சந்தைக்குச் செல்வோரிடம் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!!

திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபரிகள் மற்றும் நுகர்வோர்களிடம் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சந்தையில் வகுப்பு (மூடை தூக்குதல்)வேலை செய்து வரும் நபர் ஒருவர், வியாபரிகள் , நுகர்வோர்களிடம் உங்கள் மூடைகளை தூக்கி வருவதாக கூறி மூடைகளை தூக்கி செல்லும் போது , அவற்றில்...

தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த முடியும்??

கோரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தால், போக்குவரத்து அமைச்சு அதற்கு இணங்க வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் அமுனுகம மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; இது...

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!

எரிபொருளின் விலையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோரின் விலை 7 ரூபாவாலும் ஒடோ டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்காரணமாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 177 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், ஒரு லீட்டர் ஒடோ...

இலங்கையில் 1331 பேருக்கு நேற்றையதினம் கொரோனா தொற்று!! 23 பேர் உயிரிழப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் இதுவரை கொரோன தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 18 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கான மேலும் 23 பேர் நேற்று...

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் பணிப்புறக்கணிப்பு

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் இன்று (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். பதவி உயர்வு, இடர்கால கொடுப்பனவு, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரையில் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். குறிப்பிட்ட காலத்தில் அவசர மற்றும் உயிர்...

கடற்தொழில் அமைச்சரின் சமரச முயற்சி தோல்வியில் – தொடர்ந்தும் முற்றுகைக்குள் யாழ்.மாவட்ட செயலகம்!

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம்(வியாழக்கிழமை) மீனவர்கள் முன்னெடுத்துவரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று மீனவர்களுடன் பேச்சுக்களை நடத்த முயற்சித்தபோது, மீனவர்கள் சமரசத்திற்கு சம்மதிக்காத நிலையில், அமைச்சர் திரும்பி சென்றுள்ளார். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிவரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர...

பசில் ராஜபக்ஷவினை அமெரிக்கா விசாரணை செய்ய வேண்டும் – சுரேஸ்

கள்ள சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவினை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு...

யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ். மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி இன்று (வியாழக்கிழமை) காலை முதல் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்ய கோரியும் உயிரிழந்த...

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை – ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது!

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம்(புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை!

மட்டக்களப்பு – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நால்வர் ஏறாவூர் நீதமன்றத்தினால் பிணையில் விடுதலை! மட்டக்ளப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நால்வர் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனை தொடர்பான கடித்தின் படி குறித்த வழக்கிற்கான...

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலப் பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 07ஆம் திகதி முதல் மார்ச் 07ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர்...

“தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு ஜனாதிபதி விஜயம்!!

இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மன்னார் “தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (புதன்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மின்சாரத்தால் நாட்டை பலப்படுத்துதல், நிலையான மின் விநியோகம் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்துதல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில், 2014ஆம் ஆண்டில் இந்த “தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான திட்டங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts