Ad Widget

யாழ்ப்பாணத்தில் 39 வயதுடைய பெண் உள்பட இருவர் கோவிட்-19 நோயினால் சாவு!!

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

நாட்டை மேலும் 2 வாரங்கள் முடக்குமாறு ரணில் வலியுறுத்து!!

கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அறிவுறுத்தல்களின்படி நாட்டை மேலும் இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தினசரி பதிவாகும் நோய்த்தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக நாட்டை முடக்குவதன் மூலம் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்ற...
Ad Widget

கோவிட்-19 நோயினால் உயிரிழப்பைத் தடுக்க தடுப்பூசி அவசியம்!!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களை விட 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 8.1 மடங்கு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பைசர், அஸ்ட்ரா-செனெகா மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்ற 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பேராசிரியர்...

பயணக் கட்டுப்பாடுகளால் கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாது – சுகாதார அமைச்சர் கெஹெலிய

பயணக் கட்டுப்பாடுகளால் மட்டுமே தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், உலகின் பிற பகுதிகளில் ஆராய்ச்சி அதை நிரூபித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கோவிட்-19 நோய்த்தொற்றுத் தொடர்பில் எந்த போலித் தரவையும் சுகாதார அமைச்சு வழங்காது என்று அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும், சில தொழில்நுட்ப மற்றும் கால...

நயினாதீவில் மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனா

நயினாதீவில் மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை நயினாதீவில் வசிக்கும் வயோதிப பெண்மணியொருவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மரண சடங்கில் ஊரவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்நிலையில் ஓரிரு நாட்களில் உயிரிழந்தவரின் சகோதரி உள்ளிட்ட சிலருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் வைத்தியசாலைக்கு...

யாழில் தனியார் வங்கியின் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் (கொமர்ஷல்) பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன், அந்தக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும்...

2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் முறையிடலாம்!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது குறித்து பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும். நாடு முழுவதும் பல பகுதிகளில் குறித்த 2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த கொடுப்பனவு வழங்கப்பட்ட இடங்களில் அவற்றினை பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர்கள் அது குறித்து பிரதேச...