நாட்டை மேலும் 2 வாரங்கள் முடக்குமாறு ரணில் வலியுறுத்து!!

கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அறிவுறுத்தல்களின்படி நாட்டை மேலும் இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினசரி பதிவாகும் நோய்த்தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக நாட்டை முடக்குவதன் மூலம் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இன்று சமூக ஊடகங்களில் சிறப்பு அறிக்கையை வெளியிட்டார்.

அத்தகைய மூடலின் போது நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தவும் அரசிடம் கேட்டுக்கொண்டார்.

Related Posts