Ad Widget

கோவிட்-19 நோயினால் உயிரிழப்பைத் தடுக்க தடுப்பூசி அவசியம்!!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களை விட 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 8.1 மடங்கு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பைசர், அஸ்ட்ரா-செனெகா மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்ற 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார்.

சினோஃபார்ம், ஃபைசர், அஸ்ட்ரா-செனெகா மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளின் வெற்றியை ஒப்பிடுவதற்கான முதல் ஆய்வினை மேற்கோள்காட்டி, அவர் வெளியிட்ட கீச்சகப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான்கு தடுப்பூசிகளின் முடிவுகளும் டெல்டா மாறுபாட்டிற்கு முன்னும் பின்னும் தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும்போது இந்த உயிரிழப்புகளைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது என்று பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

Related Posts