Ad Widget

பயணக் கட்டுப்பாடுகளால் கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாது – சுகாதார அமைச்சர் கெஹெலிய

பயணக் கட்டுப்பாடுகளால் மட்டுமே தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், உலகின் பிற பகுதிகளில் ஆராய்ச்சி அதை நிரூபித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நோய்த்தொற்றுத் தொடர்பில் எந்த போலித் தரவையும் சுகாதார அமைச்சு வழங்காது என்று அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும், சில தொழில்நுட்ப மற்றும் கால கட்டங்களில் சிறிய மாற்றங்கள் காரணமாக சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

இன்று (26) சுகாதார அமைச்சில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

தொற்றுநோயற்ற நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அவர்கள் அனைவருக்கும் விரைவில் முழு தடுப்பூசிக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

கோவிட்-19 தொற்று காரணமாக 86 சதவீத இறப்புகள் பல்வேறு சிக்கல்களால் ஏற்பட்டுள்ளன. அதில் 12 சதவீதமானோர் முதல் தடுப்பூசியை மட்டுமே பெற்றுள்ளனர். இரண்டு தடுப்பூசிகளைப் பெற்ற 2.5 சதவீத பேரும் பல்வேறு சிக்கல்களைக் கொண்டிருந்துள்ளனர்.

எதிர்காலத்தில் உள்புற அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறைகள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது – என்றார்.

Related Posts