. July 2021 – Jaffna Journal

மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளதாக கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட... Read more »

அனைத்து அரச ஊழியர்களையும் ஓகஸ்ட் 2 முதல் கடமைக்கு அழைக்க ஜனாதிபதியின் செயலர் அறிவுறுத்தல்

கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் வரையறுக்கப்பட்ட ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கும் வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கும் அனுமதியளித்து வழங்கப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளையும் இரத்து செய்து அனைத்து ஊழியர்களையும் வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை கடமைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு ஜனாதிபதியின் செயலாளர் ஜயசுந்தர, பொது சேவைகள்,... Read more »

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக இளைஞர் ஒருவர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

வீதியால் சென்ற தன்னை கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வாகனத்தில் கடத்தி சென்று , கைத்துப்பாக்கியால் தாக்கி , வீதியில் வீசிவிட்டு சென்றதாக இளைஞன் ஒருவர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். தான் வீதியால்... Read more »

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கண்ணதாசன் விடுதலை!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன், போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்து... Read more »

தங்களுக்கான தீர்வு இனியும் கிடைக்காவிடின் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக உறவுகள் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி திருமதி சிவபாதம் இளங்கோதை தலைமையில், யாழ்ப்பாண அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம்... Read more »

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த (79 வயது) பெண் ஒருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த (80 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும்... Read more »

புங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!

புங்குடுதீவில் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அனைவருக்கும் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்ந்து அடையாளம்... Read more »

வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டோர் விபரம்!!

வட மாகாணத்தில் சினோபாம் 1வது தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (29) வியாழக்கிழமையும் இடம்பெற்றன. இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. யாழ் மாவட்டத்தில் 18,039 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 5,110 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7,865 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில்... Read more »

யாழில் வழிபாட்டுத் தலங்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் கட்டாயமாக பின்பற்றவேண்டிய சுகாதார விதிமுறைகள் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதுள்ள கோரோனா தொற்று அபாய நிலையைக் கருத்திற்கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சுற்றறிக்கைக்கு அமைவாக வழிபாட்டு தலங்கள், திருமண மற்றும் ஏனைய வைபவங்களின்போது கண்டிப்பாகப் பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகளை மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில்... Read more »

கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் குறுகிய காலத்திற்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளமை சிறிய விடயமல்லவென சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்காவிடின், மீண்டும் கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை கடந்த புதன்கிழமையுடன்... Read more »

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மேலும் 66 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 25 பெண்களும் 41 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.... Read more »

தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர் கோவிட்-19 நோயினால் சாவு

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று நண்பகல் உயிரிழந்தார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா... Read more »

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு மாத்திரமே பேருந்தில் செல்ல அனுமதி?

தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரம் தனியார் பேருந்துகளில் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த... Read more »

வடக்கில் 11 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா – 164 உயிரிழப்புகள் பதிவு!

வடக்கு மாகாணத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 800 ஆக பதிவாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்றினால் 164 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கில் கொரோனாத் தொற்று நிலைமை தொடர்பாக... Read more »

காணி சுவீகரிப்பு: கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர். இதன்போது அந்த இடத்தில் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் மற்றும்... Read more »

பெண்கள் குழுவின் தாக்குதல் – 20 வயது யாழ். இளைஞன் தற்கொலை

யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இளைஞனின் சடலம் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. நாவாந்துறை பகுதியை சேர்ந்த 20... Read more »

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் செய்ய வேண்டியது இது தான்!

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். தடுப்பூசி வழங்கல் தொடர்பில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்... Read more »

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது – மேலும் 63 உயிரிழப்புகளும் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து... Read more »

யாழில் கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

கொத்தாலவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக ஆசியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் காலை 11 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று புதன்கிழமை இணையவழிக்... Read more »

அண்மைய நாள்களில் கோவிட்-19 தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

அண்மைய நாள்களில் கோவிட்-19 தொற்றுநோயாளர்கள் எண்ணிக்கை அதிகமாக அடையாளம் காணப்படுகின்றனர் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அதன்படி, சிகிச்சைப் பிரிவுகளில் ஒக்ஸிஜனின் தேவை அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட இடம்... Read more »