Ad Widget

அனைத்து அரச ஊழியர்களையும் ஓகஸ்ட் 2 முதல் கடமைக்கு அழைக்க ஜனாதிபதியின் செயலர் அறிவுறுத்தல்

கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் வரையறுக்கப்பட்ட ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கும் வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கும் அனுமதியளித்து வழங்கப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளையும் இரத்து செய்து அனைத்து ஊழியர்களையும் வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை கடமைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு ஜனாதிபதியின் செயலாளர் ஜயசுந்தர, பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 தடுப்பூசி போட வேண்டிய மக்கள்தொகையில் பெரும் சதவீதத்திற்கு இப்போது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான அரச ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே பொது சேவையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோவிட்-19 சுகாதார பராமரிப்பு வழிகாட்டுதல்களுக்கு உள்பட்டு 2021 ஓகஸ்ட் 2ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழக்கம் போல அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறிக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் வரையறுக்கப்பட்ட ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கும் வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கும் அனுமதியளித்து வழங்கப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளையும்
இரத்து செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts