Ad Widget

யாழில். ஆலயங்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை!!

யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி யாழ்ப்பாண...

பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆலோசனை!

நாட்டில் உள்ள 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த விடயம் குறித்து...
Ad Widget

வட்டுவாகலில் காணி அபகரிப்பை தடுக்க ஒன்றுகூடுமாறு சிவாஜிலிங்கம் அழைப்பு!

வட்டுவாகலில் காணி அபகரிப்பைத் தடுக்க ஒன்றுகூடுமாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசு காலத்திலும் காணி சுவீகரிப்பு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வட்டுவாகலில் 617 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. வடக்கு, கிழக்கிற்கு வெளியிலும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் ஒரு பகுதியாக...

வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் – அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு!

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொறோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு சுமார் 16 இலட்சம்...

ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!!

சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்கள், “சிறுமியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான தடைச்சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில்...

நிவாரணப் பணியை இடைநிறுத்த முற்பட்ட இராணுவம்- பருத்தித்துறையில் அமைதியின்மை

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கிராமம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கான நிவாரணப் பணியினை நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர். இந்த நிவாரணப் பணியானது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இராணுவத்தினருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டிருந்தது. இராணுவம் மற்றும்...

மக்களுக்கு கடமையாற்றும்போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல – வடக்கின் பிரதம செயலாளர்

மக்களுக்கு கடமையாற்றும் போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல என வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் - நான்...

விக்னேஸ்வரன் வழக்கு மாகாண அதிகாரம் பற்றி உண்மைகளை அம்பலப்படுத்தும் – கஜேந்திரகுமார்

வடக்கு மாகாணப் பிரதம செயலாளரின் நியமனம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவிருப்பது மாகாண அதிகாரம் பற்றி மக்களுக்கு உண்மைகளை வெளிக் கொண்டுவருவதற்குப் பொருத்தமானதாக அமையும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில்...

கரவெட்டியில் திருவிழாவில் கலந்துகொண்ட 49 பேருக்கு கொரோனா

கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எழுமாறாக 179 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 49 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஆலயத் திருவிழாவில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அறியப்பட்ட நிலையில் கரவெட்டி சுகாதார...

யாழ் மாவட்டத்திற்கான அரசாங்க அதிபர் மாற்றம் குறித்து பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்!

யாழ் மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்ட அரசாங்க அதிபரை பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். யாழ் மாவட்டத்தில் 95% மானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர், மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தினை...

வல்வெட்டித்துறையில் 16 பேருக்கு கொரோனா!

வல்வெட்டித்துறையில் நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதி முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியிலுள்ள 166 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ்...

வட.மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துலசேன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில், தனது கடமைகளை சமன் பந்துலசேன இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில்...

O/L பரீட்சைக்கான திகதியில் மாற்றம்

2021 ஆம் ஆண்டிற்காக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரையில் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று (26) காலை கொழும்பு இடம்பெற்ற ஊடகவியலாளர்...

30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் செப்ரெம்பருக்குள் தடுப்பூசி – அதன் பின்னர் நாடு முழுயைாகத் திறக்கப்படும்!!

30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அதன்பிறகு நாடு முழுமையாகத் திறக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இதேவேளை, நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கோவிட் -19 தடுப்பூசி போடப்படாத நபர்கள் என்பது தெரிய வந்துள்ளது...

காங்கேசன்துறை-வவுனியா இடையே ரயில் சேவை ஆரம்பம்

காங்கேசன்துறை – வவுனியா இடையே தினம் ஒரு தொடருந்து சேவை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து பயணித்த ஆரம்பித்த தொடருந்து வவுனியாவை காலை 8.07 மணிக்குச் சென்றடையும். அத்துடன், இன்று மாலை 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும் என்று யாழ்ப்பாண ரயில் நிலைய பிரதான...

வடக்கு பிரதம செயலாளராக பதவியேற்கிறார் சமன் பந்துலசேன!

வடமாகாண பிரதம செயலாளராக பதவியேற்பதை முன்னிட்டு சமன் பந்துலசேன வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாட்டில் இன்று (26) காலை ஈடுபட்டார். வவுனியா மாவட்டத்தின் அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன வடக்கின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். வடமாகாண ஆளுனரின் சிபாரிசின் பின்னணியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில்...

கொரோனா தொற்றினால் மேலும் 45 பேர் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸினால் மேலும் 45 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் ஆண்கள் 23 பேரும் பெண்கள் 22 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 99ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் ஆயிரத்து...

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து GMOA எச்சரிக்கை!

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் முற்றாக தளர்த்தப்படும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக மீள் பரிசீலிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், டெல்டா திரிபானது எதிர்வரும் மாதங்களில், நாட்டின் பிரதான வைரஸ் திரிபாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. அத்தோடு, பொதுமக்கள் ஒன்றுகூடும்...

இலங்கை மீண்டும் கொரோனா அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி நகர்கின்றது!!

இலங்கை கொரோனா அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி மீண்டும் நகர்கின்றதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களே அதிகளவு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் மரணித்தும் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அசேல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, ”நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றமையை...

கெப்பிடல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்!!

கெப்பிடல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து நான் மிகவும் மனவருத்தமடைந்தேன். திறமையான தொழிலதிபராக இந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வணிக வலையமைப்பை பராமரித்து வந்த ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள் அதனூடாக இலட்சக்கணக்கான மக்களுக்கு உறுதுணையாக விளங்கினார். சிரச, சக்தி, MTV ஆகிய ஊடக வலையமைப்பின் உரிமையாளராக மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக தொடர்ந்தும்...
Loading posts...

All posts loaded

No more posts