Ad Widget

யாழில் கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

கொத்தாலவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக ஆசியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் காலை 11 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று புதன்கிழமை இணையவழிக் கற்பிப்பித்தலில் இருந்து விலக முடிவு செய்வதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேநேரம், மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக அதிபர், ஆசிரியர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களை துன்புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, 24 வருட ஆசிரியர், அதிபர் சம்பளம் முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, இலவசக் கல்வியை இராணுவமயமாக்கல் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக இரத்துச் செய் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related Posts