Ad Widget

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடாத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூர்ய இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில நிறுவனங்களில் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகளை நடாத்துவதை...

நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை!!

இலங்கையில் பதிவாகும் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000 க்கு மேற்பட்டதாக அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானியும் விசேட வைத்தியருமான சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர மேலும், தெரிவிக்கையில் கடந்த ஒருவார காலமாக நாளாந்தம் எமக்கு பதிவான வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500 இல் இருந்து...
Ad Widget

யாழில் நேற்றையதினம் 20 பேருக்கு கொரோனோ!! – இருவர் மரணம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 807 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில்...

யாழ்.போதனா வைத்திய சாலையின் கவலையீனம் – 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து , மரணச்சடங்கில் கலந்து கொண்ட 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் கவலையீனமான செயற்பாட்டினால் தாம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர். யாழ்ப்பாணம் சிறாம்பியடியை...

கிளிநொச்சியில் மற்றுமொரு கொரோனா சிகிச்சை நிலையம்!

கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் உள்ள இராணுவ முகாம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு (வியாழக்கிழமை) முதல் அது பயன்பாட்டுக்கு வருகிறது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளைக் கொண்டதாகவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த சிகிச்சை நிலையமானது, கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகக் கட்டமைப்பின்...

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! நேற்று மட்டும் 1895 பேருக்குக் கொரோனா தொற்று!!

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 745ஆக அதிகரித்துள்ளது. இதே வேளை நாட்டில் நேற்று மட்டும் 1895 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு...

யாழில் சுகாதார நடைமுறைகளை மீறியவர்களை தூக்கிச் சென்ற பொலிஸார்!!

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் யாழ். நகர பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு...

யாழ்ப்பாணம் உள்பட 6 இடங்களுக்கான தபால் ரயில் சேவைகள் காலவரையறையின்றி இடைநிறுத்தம்

கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் நிலமை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை 6 இரவு அஞ்சல் சேவைகள் உள்பட 20 தொடருந்து சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை, திருகோணமலை, காங்கேசந்துறை, மிரிகாம, அம்பேபுசா மற்றும் வேயங்கொட தொடருந்து நிலையங்கள் மற்றும் அந்த நிலையங்களிலிருந்து...

நாட்டினை ஒரு வாரகாலத்திற்காகவது முழுமையாக முடக்க வேண்டும் என வலியுறுத்து!

நாட்டினை ஒரு வாரகாலத்திற்காகவது முழுமையாக முடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இவ்வாறு அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே அவர், இலங்கை அரசாங்கத்திடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதி முடக்கம் – தாம் முடக்க சொல்லவில்லை என்கின்றனர் அதிகாரிகள்!

கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதி மூடப்பட்டுள்ளமையால், குறித்த வீதியினால் பயணம் செய்யும் பலரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கொடிகாமம் வடக்கு மற்றும் மத்தி ஆகிய இரு கிராம சேவையலாளர் பிரிவு கடந்த 5ஆம்...

இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம் பாலசூரிய இந்தவிடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சனத்தொகை மற்றும் இலங்கையின் சனத்தொகைக்கமைய பதிவாகும் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது தெளிவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தமிழ் சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாளாந்தம் ஆயிரத்து 900...

கொடிகாமத்தில் இராணுவத்தினரால் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

கொடிகாமம் பகுதியில் கடந்த வாரத்தில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து கொடிகாமம் நகர்ப்பகுதி, சந்தை கடைத்தொகுதி மேலும் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் இன்றைய தினம் இராணுவத்தினரால் குறித்த பகுதிகள் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற 54ஆவது பொதுக் கூட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். நிதியமைச்சராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்பதவிக்கு நியமிக்கப்படும் போது இலங்கையின் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநராக செயற்பட்டார். ஜோர்ஜியாவின்...

மாகாண சபைத் தேர்தலினை நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானம்!!

மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற அரசாங்கத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிறந்த விடயமல்லவென இதன் போது ஆளுந்தரப்பின் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், அத்துடன் நாட்டில் தற்போதைய...

யாழ்ப்பாணத்தி்ல் கோவிட்-19 நோயால் உயிரிழந்த முதியவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு; இறுதிச் சடங்கில் குழப்பம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம்...

கொடிகாம சந்தையுடன் தொடர்புடைய 12 பேர் உட்பட 30 பேருக்கு யாழில் கொரோனா!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளம நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 749 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 43...

இலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதன்முதலாகக் கர்ப்பிணித் தாயொருவரின் மரணம் பதிவாகியுள்ளது. ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணித் தாயொருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளதாக ராகம சுகாதார மருத்துவ பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 720ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கில் சந்தேக நபர்கள் விடுவிப்பு!!

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்ட மா அதிபர் திணைகளம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு பரிந்துரைத்துள்ளது. அதனால் 6 சந்தேக நபர்களையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10...

வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில். “யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்துள்ளது....

இந்திய தேசம் கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு!

இந்தியா கொரோனா நோயிலிருந்து விடுபடயாழ். நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு நடைபெற்றுள்ளது. சர்வதேச இந்து – பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்த வழிபாடு இடம்பெற்றது. இதன்போது, ரத்ன சூத்திர பாராயணமும் ஐம்பெரும் கடவுளுக்கு பூசையும் நடைபெற்றுள்ளது. உலகத்திற்கு தர்மத்தையும் அன்பையும் அகிம்சையையும் போதித்த பாரத தேசம் தற்போது எழுந்துள்ள கொரோனா நெருக்கடியிலிருந்து...
Loading posts...

All posts loaded

No more posts