Ad Widget

வவுனியாவில் ஒரு பகுதி முடக்கப்பட்டது!

வவுனியாவில் குருக்கள் புதுக்குளம் பகுதி இன்று காலைமுதல் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில், கடந்த வாரமளவில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள், கிராமத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தனர். இதையடுத்து, குறித்த இருவருடனும் தொடர்புகளைப் பேணிய 100 பேருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான...

தேசிய ரீதியில் வடக்கு கிழக்கு மாணவர்கள் இருவர் முதலிடத்தில்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவனான தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார் அதேபோன்று , விஞ்ஞானப் பிரிவில், மட்டக்களப்பு, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மகிழுரைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் முதலிடம் பெற்றுள்ளார் கொரோனா...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகள் மறு அறிவித்தல்வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளே நேற்று இரவு முதல் முடக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில்...

தமிழகத்தின் புதிய ஆட்சிக்கு சபையில் வாழ்த்துத் தெரிவித்தது கூட்டமைப்பு!

தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழ் மக்களின் எதிர்கால இருப்புத் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தி.மு.க. கூட்டணி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், எதிர்வரும் ஏழாம் திகதி தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், ஸ்டாலினுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில்...

வடக்கில் மேலும் 43 பேருக்குக் கொரோனா- கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் 21 பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் ஆய்வுகூடங்களில் 824 பேரின் மாதிரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 37 பேருக்கும்...

யாழ். நகரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு- முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை இடத்பெற்றது. யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார், யாழ். மாநகர சபையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, யாழ். பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் விழிப்புணர்வை மேற்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து...

எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது – சுமந்திரன்

எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது. மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பதால் பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விசேட...

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று!!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித சற்று முன்னர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

களனி பல்கலை. ஆராய்ச்சியாளர்களால் கோரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் தலைக்கவசம் உருவாக்கம்

கோவிட் – 19 வைரஸிலிருந்து பாதுகாக்கக்கூடிய தலைக்கவசம் ஒன்றை களனி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு உருவாக்கியுள்ளது. இந்த தலைக்கவசம் முகக்கவசம் மற்றும் கையுறைக்கு பதிலாக பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. இந்த தலைக்கவசம் ஒரு அடையாள குறியீட்டையும் கொண்டுள்ளது. எனவே தேசிய பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஆராய்சிக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஆராய்ச்சி...

வடக்கில் மேலும் 14 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 404 பேரின் மாதிரிகள் நேற்று (திங்கட்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ். மாவட்டத்தில் ஒன்பது பேருக்கும் முல்லைத்தீவில் இருவருக்கும் கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரில்...

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரழப்பு 700ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ள மொத்த உயிரிழப்பு 700ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 709ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ஊடக சுதந்திர தினம்: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் நடைபெற்றது. இந்நிகழ்வு, யாழ். ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மௌன அஞ்சலியுடன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை, கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்பட்டதுடன் கொரோனா பெரும்...

வடக்கில் மேலும் 7 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று கண்டறிவு

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 478 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா...

சுகாதார விதிமுறைகளை மீறி திருவிழா செய்ததாக உபயகாரர் உள்ளிட்ட நால்வர் சுயதனிமைப்படுத்தலில்

கோரோனா சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத்தில் திருவிழா நடத்திய உபாயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காரைநகர் களபூமி பகுதியில் உள்ள ஆலயத்தில் வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம் தேர் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் சப்பர திருவிழா நடைபெற்றது. காரைநகர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தல்களை மீறி ஆலயத்தில் பெருமளவானோர்...

யாழில் புத்தர் சிலை உடைத்த இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கீரிமலை நல்லிணக்க புரம் பகுதிக்கு அண்மையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இருந்த புத்தர் சிலையை உடைத்த இளைஞன் அப்பகுதியில் காணப்பட்ட பழைய இரும்புகளையும் சேகரித்துள்ளார். புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிந்த கொண்ட...

தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் மோகன் பயங்கரவத தடைச் சட்டத்தில் கைது

விடுதலைப்புலிகளை மீண்டும் முகநூல் வாயிலாக புதுப்பித்த குற்றச்சாட்டில் தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் க.மோகன் நேற்று இரவு மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் முகநூல் வழியாக விடுதலைப்புலிகள் மீண்டும் புதிப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டின் பேரில் 3 மாதகால பொலிஸ் தடுப்பு...

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு இவ்வாறு அனுமதி...

கொரோனா அச்சுறுத்தல் – ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு பூட்டு!

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய அலுவலகங்களையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆட் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கியது!

நாட்டில் நேற்று மட்டும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 705ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 764 பேர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்த வெளியேறிய நிலையில்,...